அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

December 8, 2007

பாடல்களின் வரலாறு

சபையில், ஆலய ஆராதனைகளில் பாடல்களின் பங்கு என்ன என்று கேட்டால் பாடல்களே பல சபைகளில் ஜீவாதாரமாக இருக்கிறது என சிலர் கூறுவர். இந்த சபையில் பாடல் நன்றாக இருக்கும். ஆகவே நான் இங்கு செல்கிறேன் என்று கூறுவோர் ஏராளம். பாடல்கள் உண்மையிலேயே நம் சிந்தனைகளையும் சொல்லப்போனால் விசுவாசத்தையும் தட்டி எழுப்பி விடுபவையாகவும்,விசுவாசத்தை அறிக்கை செய்பவையாகவும் உள்ளன. தாவீதைப் போல எல்லா சூழ்நிலைகளிலும் நாம் பாடுகிறவர்களாக இருப்போமாயின் நம் சூழ்நிலைகள் நம்மை நிச்சயமாக அசைக்க முடியாது. சங்கீதங்களின் துவக்கத்தில் பாடல்கள எழுதப்பட்ட சூழ்நிலைகளை நாம் வாசிக்கிறோம். இந்த சூழ்நிலையிலும் கூட பாடல் பாட முடியுமா என்று நாம் ஆச்சரியப்படுமடியாக் தாவீது நமக்கு சவாலாக இருக்கிறார்.

நாமும் இக்காலத்தைய பாடல்களின் பிண்ணனியத்தை அறிந்து கொள்ளும் போது அது நமக்கு பிரயோஜனமாக இருக்கும் என நம்புகிறேன்.

ஏசுவையே துதி செய்-
நீ மனமே ஏசுவையே துதிசெய்

இந்த பாடல் தெரியாத தென் தமிழக கிறிஸ்தவர்களை காண்பது அரிது. இந்த பாடலை இயற்றியவர் கிறிஸ்தவக் கவிராயர் வேதநாயகம் சாஸ்திரியார் ஆவார். இவர் தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அவர்களின் அரசவைக் கவிஞராகவும் இருந்தார். வேதநாயகம் சாஸ்திரியாரின் கவித்திறமையை நன்கறிந்த சரபோஜி மன்னர் அவரை தன் தெய்வத்தைப் புகழ்ந்து ஒரு பாடலை படிக்குமாறு கேட்டுக் கொண்டார். ஆனால் வேதநாயகம் சாஸ்திரியாரோ அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டார். அப்போது அரசர் சரி பிள்ளையாரை புகழ்ந்து ஒரு சிறிய பாடலாவது படியும் என்று உத்தரவிட்டாராம். வீட்டிற்கு வந்து ஆழ்ந்து யோசித்த சாஸ்திரியார் மன்னரிடம் சென்று என்னால் பிள்ளையாரையெல்லாம் புகள்ந்து பாட முடியாது, யேசுவையே துதிபேன் என்று இந்த பாடலைப் பாடினாராம். இதைக்கேட்ட அவையோர் பயந்தனர். ஏனெனில் அரசர் உத்தரவை மீறுவது பெருங்குற்றமாகும். ஆனால் சரபோஜி மன்னர் சிறுவயது முதலே வேதநாயகம் சாஸ்திருயாருடன் ஸ்வார்ட்ஷ் ஐயரிடம் வளர்ந்தவராதலால் அவரை ஒன்றும் செய்யாமல் நீர் யேசுவையே புகழ்ந்து பாடும் என்று கூறி ஒன்றும் செய்யாமல் விட்டு விட்டாராம்.

source : http://www.tamilchristians.com/modules.php?name=Forums&file=viewtopic&t=330

0 comments: