http://isakoran.blogspot.in/2012/10/blog-post.html
October 18, 2012
”முஹம்மதுவின் அந்த வீடியோவைப் பற்றி” ஒரு முன்னாள் இஸ்லாமியரின் கருத்துக்கள்
http://isakoran.blogspot.in/2012/10/blog-post.html
குர்-ஆனின் கட்டுக்கதைகளும், பழங்கதைகளும் - சாலொமோனின் பறக்கும் பாய்!
குர்-ஆனின் கட்டுக்கதைகளும், பழங்கதைகளும்
சாலொமோனின் பறக்கும் பாய்!
குர்-ஆன் சிறிது கூட சிந்திக்காமல், அல்லாஹ் சாலொமோனுக்கு காற்றின் மீது அதிகாரம் கொடுத்து இருந்தார், ஆகையால் அவர் இரண்டு மாத பிரயாண தூரத்தை ஒரு நாளுக்குள் கடந்துவிடுகிறார் என்று கூறுகிறது.
இன்னும் ஸுலைமானுக்குக் கடுமையாக வீசும் காற்றையும் (நாம் வசப்படுத்திக் கொடுத்தோம்) அது, அவருடைய ஏவலின் படி, நாம் எந்த பூமியை பாக்கியமுடையதாக்கினோமோ (அந்த பூமிக்கும் அவரை எடுத்துச்) சென்றது இவ்வாறு, ஒவ்வொரு பொருளையும் பற்றி நாம் அறிந்தோராகவே இருக்கின்றோம். (குர்-ஆன் 21:81) (முஹம்மது ஜான் டிரஸ்ட் தமிழாக்கம்)
வேகமாக வீசும் காற்றை ஸுலைமானுக்கு வசப்படுத்திக் கொடுத்தோம் . அது நாம் பாக்கியம் செய்த பூமிக்கு அவரது கட்டளைப்படி சென்றது. நாம் ஒவ்வொரு பொருளையும் அறிவோராக இருக்கிறோம்.(குர்-ஆன் 21:81) (பீஜே தமிழாக்கம்)(அவருக்குப் பின்னர்) ஸுலைமானுக்குக் காற்றை (வசப்படுத்திக் கொடுத்தோம்), அதனுடைய காலைப் பயணம் ஒரு மாத தூரமாகவும் மாலைப் பயணம் ஒரு மாத தூரமாகவும் இருந்தது மேலும் நாம் அவருக்காக செம்பை ஊற்றுப் போல் உருகியோடச் செய்தோம்; தம் இறைவனுடைய அனுமதிப்படி அவருக்கு முன் உழைப்பவற்றில் ஜின்களிலிருந்தும் (வசப்படுத்திக் கொடுத்தோம்.) அவர்களில் எவர் (அவருக்கு ஊழியம்செய்வதில்) நம்முடைய கட்டளையைப் புறக்கணிக்கின்றாரோ, அவரைக் கொழுந்து விட்டெரியும் (நரக) வேதனையைச் சுவைக்கும் படி நாம் செய்வோம் (என்று எச்சரித்தோம்). (குர்-ஆன் 34:12) (முஹம்மது ஜான் டிரஸ்ட் தமிழாக்கம்)
ஸுலைமானுக்குக் காற்றை வசப்படுத்தினோம். அதன் புறப்பாடு ஒரு மாதமாகும். அதன் திரும்புதல் ஒரு மாதமாகும். அவருக்காக செம்பு ஊற்றை ஓடச் செய்தோம். தனது இறைவனின் விருப்பப்படி அவரிடம் பணியாற்றும் ஜின்களும் இருந்தனர். அவர்களில் நமது கட்டளையை யாரேனும் புறக்கணித்தால் நரகின் வேதனையை அவருக்குச் சுவைக்கச் செய்வோம்.(குர்-ஆன் 34:12)(பீஜே தமிழாக்கம்)
சாலொமோனுக்கு ஒரு பறக்கும் பாய் இருந்ததாகவும், அதன் மூலம் அவர் பிரயாணம் செய்ததாகவும் இஸ்லாமிய பாரம்பரியம் கூறுகிறது. இஸ்லாமிய விரிவுரையாளர்களில் சுன்னி பிரிவைச் சேர்ந்த இப்னு கதீர் ஸூரா 21:81 பற்றி கீழ்கண்ட விதமாக விளக்குகிறார்:
கட்டைகளால் செய்யப்பட்ட ஒரு பாய் போன்ற ஒன்று சாலொமோனுக்கு இருந்தது. அதன் மீது அவர் தன் எல்லா வஸ்துக்கள், குதிரைகள், ஒட்டகங்கள், கூடார பொருட்கள், படைவீரர்கள் அனைத்தையும் வைத்துவிட்டு, இந்த பாயை அப்படியே கொண்டுச் செல்லும் படி காற்றுக்கு கட்டளையிடுவார். இந்த பறக்கும் பாய் மேலே எழும்பும் போது, அதன் கீழே இவரையும் அக்காற்று அப்படியே கொண்டுச் செல்லும். வெயிலிலிருந்து இவர் பாதுகாப்பாக அப்படியே நிழலில் பிரயாணம் செய்வார். அவர் எங்கு செல்லவேண்டும் என்று கட்டளையிடுவாரோ அந்த இடத்திற்கு காற்று இவைகள் அனைத்தையும் கொண்டுச் செல்லும். தாம் செல்லவேண்டிய இடம் வந்த உடன், அந்த மரத்தால் செய்யப்பட்ட பாய் கீழே இறங்கும், அதன் பிறகு எல்லாவற்றையும் அதிலிருந்து கீழே இறக்கிக்கொள்வார்கள். . . (Tafsir Ibn Kathir (Abridged) (Surat Al-Isra', Verse 39 To the end of Surat Al-Mu'minun), by a group of scholars under the supervision of Shaykh Safiur Rahman Al-Mubarakpuri [Darussalam Publishers & Distributors, Riyadh, Houston, New York, London, Lahore; First Edition: July 2000], Volume 6, pp. 476-477)
மேலும் ஸூரா 34:21ம் வசனம் பற்றி இப்னு கதீர் கீழ்கண்டவாறு விளக்கம் அளிக்கிறார்:
தாவூத் மீது அல்லாஹ் குவித்த ஆசீர்வாதங்களை குறிப்பிட்டுவிட்டு, அல்லாஹ் தாவூத்தின் மகனாகிய சுலைமானுக்கு (சாலொமோனுக்கு) கொடுத்த ஆசீர்கள் பற்றி பேசுகிறார் (இவ்விருவர் மீதும் சாந்தி உண்டாகட்டும்). அல்லாஹ் சுலைமானுக்கு காற்றின் மீது அதிகாரத்தை கொடுத்தார். இந்த காற்றானது சுலைமானை ஒரு பறக்கும் பாய் மீது கொண்டுச் செல்லும், செல்வதற்கு ஒரு மாதமும், திரும்பி வருவதற்கு ஒரு மாதமும் ஆகும் . அல் ஹசன் அல் பஸ்ரி இவ்விதமாக கூறுகிறார்: "காலையிலே தமாஸ்கஸ்ஸிலிருந்து சுலைமான் புறப்படுவார், இஸ்தகாரில் சேர்ந்துவிடுவார், அங்கே தன் மதிய உணவை உண்பார். திரும்பவும் இஸ்தகாரிலிருந்து புறப்படுவார் ஒரு மாதம் காற்றிலே வேகமாக பயணம் செய்வார், அதன் பிறகு காபுலை வந்து அடைவார். இஸ்தகாருக்கும் காபுலுக்கும் இடையே ஒரு மாத பிரயாணம் ஆகும். (Tafsir Ibn Kathir (Abridged) (Surat Al-Ahzab, Verse 51 to the end of Surat Ad-Dukhan), Shaykh Safiur Rahman Al-Mubarakpuri [Darussalam Publishers & Distributors, Riyadh, Houston, New York, London, Lahore; First Edition: September 2000], Volume 8, p. 70; capital emphasis ours)
காலஞ்சென்ற இஸ்லாமிய அறிஞர் முஹம்மது அஸத் என்பவர் ஸூரா 34:21ம் வசனம் பற்றி கீழ்கண்டவாறு பின்குறிப்பினை எழுதுகிறார்.
"மேலும் ஸூரா 21:81ஐயும் மற்றும் அதன் பின்குறிப்பையும் படிக்கவும். சுலைமானுக்கு சம்மந்தப்பட்ட புராண கட்டுக் கதைகள் பற்றி மேலும் அறிய ஸூரா 21:82ம் வசனத்தை பார்க்கவும். (மூலம்)
இஸ்லாமிய அறிஞர் முஹம்மது அஸத் அவர்கள் சாலொமோன் பற்றிய குர்-ஆனின் கதைகளை கட்டுக்கதைகளாகவும், புராணக்கதைகளாகவும் கருதுகிறார் என்பதை படிக்கும் வாசகர்களாகிய உங்களுக்கு ஆச்சரியமாக இல்லையா?
ஆங்கில மூலம்: Fables and Legends of the Quran - Solomon's Flying Carpet
குர்-ஆனின் புராணங்கள் மற்றும் கட்டுக்கதைகள் பற்றிய இதர கட்டுரைகள்
© Answering Islam, 1999 - 2012. All rights reserved.
http://isakoran.blogspot.in/2012/09/blog-post.html
குர்-ஆனும் விஞ்ஞானமும் - சாலொமோனும் உயிரிணங்களும் (கரையான், எறும்பு & ஹூத்ஹூத் பறவை)
சாலொமோனும் உயிரிணங்களும் (கரையான், எறும்பு & ஹூத்ஹூத் பறவை)
எப்படி ஒரு சிறிய புழு சாலொமோனுடைய முழு தடியையும் தின்றுவிட்டது? அந்த புழு தடியை முழுவதும் திண்ணும் வரை பல மாதங்கள் சாலமோன் அப்படியே விழாமல் நின்றுக்கொண்டு இருந்தாரா?
அவருக்கு நாம் மரணத்தை ஏற்படுத்திய போது பூமியில் ஊர்ந்து செல்லும் உயிரினம் (கரையான்) தான் அவரது மரணத்தைக் காட்டிக்கொடுத்தது. அது அவரது கைத்தடியைச் சாப்பிட்டது. அவர் கீழே விழுந்ததும் "நமக்கு மறைவானவை தெரிந்திருந்தால் இழுவு தரும் இத்துன்பத்தில் இருந்திருக்கமாட்டோமே" என்பதை ஜின்கள் விளங்கிக்கொண்டன. (குர்-ஆன் 34:14) (பீஜே தமிழாக்கம்)
சாலொமோன் எறும்புகள் பேசுவதைக் கேட்டு ஆச்சரியப்பட்டார் (குர்-ஆன் 27:19). தன்னைச் சுற்றியுள்ள புழூ பூச்சிகளின் பேச்சுக்களை தொடர்ந்து எப்போதும் கேட்டுக்கொண்டு எப்படி அவரால் மனநிலை பாதிக்கப்படாமல் இருக்கமுடிந்தது? தன் காதுகளால் தொடர்ந்து இந்த சத்தங்களை கேட்டு அவர் மனநிலை பாதிக்கப்பட்டு இருந்திருப்பார்.
27:17. ஜின்கள், மனிதர்கள், பறவைகள் ஆகியவற்றின் படைகள் ஸுலைமானுக்காகத் திரட்டப்பட்டு, அவர்கள் அணி வகுக்கப்பட்டனர்.
27:18. அவர்கள் எறும்புப் புற்றின் அருகே வந்த போது "எறும்புகளே! உங்கள் குடியிருப்புகளுக்குள் நுழையுங்கள்! ஸுலைமானும், அவரது படையினரும் அறியாத நிலையில் உங்களை மிதித்து விடக் கூடாது" என்று ஓர் எறும்பு கூறியது .
27:19. அதன் கூற்றினால் (ஸுலைமான்) புன்னகை சிந்தி சிரித்தார். "என் இறைவா! என் மீதும், எனது பெற்றோர் மீதும் நீ செய்த அருட்கொடைக்கு நான் நன்றி செலுத்தவும், நீ திருப்தியடையும் நல்லறத்தைச் செய்யவும் எனக்கு உதவுவாயாக! உனது அருளால் உனது நல்லடியார்களில் என்னையும் சேர்ப்பாயாக!" என்றார். (குர்-ஆன் 27:17-19)
ஆனால், எறும்புகள் மனிதர்கள் பற்றி இப்படி நினைக்கின்றன என்றுச் சொல்வதை யார் நம்புவார்கள்? நான் எறும்புகள் மீது காலை வைக்கும் போது அவைகள் ஓடி ஒளிந்துக் கொள்வதை நான் காணவில்லை. நாம் அவர்கள் மீது கால்களை வைத்து மிதித்தால், அவைகள் மரித்துவிடுவார்கள் என்று எறும்புகள் அறிந்திருந்தால், ஏன் அவைகள் சீக்கிரமாக ஓடி மறைந்து ஒளிவதில்லை?
சாலொமோனுக்கு பறவைகளிலும், ஜின்களிலும் படைகள் இருந்தன என்று குர்-ஆன் கூறுகிறது (27:17). இதிலும் மேலும் ஆச்சரியப்படும் விவரம் என்னவென்றால், ஒரு புழுக்கொத்தி பறவை சாலொமோனுடன் செய்த நீண்ட உரையாடலாகும். இதனை நாம் குர்-ஆன் 27:20-28 வரையுள்ள வசனங்களில் காணலாம். இது விஞ்ஞானத்திற்கு ஏற்காத ஒன்றாக காணப்படுகின்றது.
27:20. பறவைகளை அவர் ஆய்வு செய்தார். "ஹுத்ஹுத்' பறவையை நான் காணவில்லையே! அது ஓடி ஒளிந்து விட்டதா ? என்றார்.
27:21. "அதைக் கடுமையான முறையில் தண்டிப்பேன்; அல்லது அதை அறுத்து விடுவேன். அல்லது அது என்னிடம் தெளிவான சான்றைக் கொண்டு வர வேண்டும்" (என்றும் கூறினார்).
27:22. (அப்பறவை) சிறிது நேரமே தாமதித்தது. "உமக்குத் தெரியாத ஒன்றைத் தெரிந்து, ஸபா எனும் ஊரிலிருந்து உறுதியான ஒரு செய்தியை உம்மிடம் கொண்டு வந்துள்ளேன் " என்று கூறியது.
27:23. "நான் ஒரு பெண்ணைக் கண்டேன். அவள் அவர்களை ஆட்சி செய்கிறாள். அவளுக்கு ஒவ்வொரு பொருளும் கொடுக்கப்பட்டுள்ளது. அவளுக்கு மகத்தான சிம்மாசனமும் உள்ளது"
27:24. "அவளும், அவளது சமுதாயமும் அல்லாஹ்வையன்றி சூரியனுக்கு ஸஜ்தா செய்யக் கண்டேன். அவர்களின் செயல்களை ஷைத்தான் அவர்களுக்கு அழகாக்கிக் காட்டி, அவர்களை (நல்) வழியை விட்டும் தடுத்துள்ளான். எனவே அவர்கள் நேர் வழி பெற மாட்டார்கள்" (என்றும் கூறியது.)
27:25. வானங்களிலும், பூமியிலும் மறைந்திருப்பவற்றை வெளிப்படுத்தும் அல்லாஹ்வுக்கு ஸஜ்தா செய்ய மாட்டார்களா? நீங்கள் மறைப்பதையும், வெளிப்படுத்துவதையும் அவன் அறிவான்.
27:26. அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவன் மகத்தான அர்ஷுக்கு அதிபதி.
27:27. "நீ உண்மை சொல்கிறாயா? பொய்யர்களில் ஆகி விட்டாயா? என ஆராய்வோம்'' என்று அவர் கூறினார்.
27:28. "எனது இந்தக் கடிதத்தை நீ கொண்டு சென்று அவர்களிடம் அதைப் போடு! பின்னர் அவர்களை விட்டும் விலகி என்ன பதில் தருகிறார்கள் என்று கவனி!" (என்றும் கூறினார்).
குர்-ஆனின் படி, சாலொமோன் இந்த பறவையை ஷேபா அரசியிடம் அனுப்புகிறார். அந்த அரசி வந்து அல்லாஹ்வை தொழுதுக்கொள்ள வேண்டும் என்று கட்டளையிடுகிறார், மற்றும் இதர கேள்விகளையும் கேட்கிறார்.
இந்த ஷேபா அரசியைப் பற்றி பைபிள் வேறு வகையான விவரங்களைத் தருகிறது. அதாவது இந்த இராணி, சாலொமோனின் ஞானம் மற்றும் இதர சாதனைகளை பற்றி கேள்விப்பட்டு, அவரை சோதிக்கும் படி வருகிறார். பல கடினமான கேள்விகளை சாலொமோனிடம் கேட்டு அவர் கொடுத்த பதில்களால் ஆச்சரியப்பட்டு இஸ்ரவேலின் தேவனை புகழ்ந்து பேசுகிறாள். குர்-ஆன் சொல்வது போல, சாலொமோன் ஷேபா இராணியை "மிரட்டவில்லை", அதற்கு பதிலாக அந்த இராணி சாலொமோனின் ஞானத்தைப் பற்றி ஆச்சரியப்பட்டு, தேவன் அவருக்கு கொடுத்திருந்த ஆசீர்வாதங்களை கண்டதினால், ஆச்சரியப்பட்டு தேவனை புகழுகிறாள் (1 இராஜாக்கள் 10:9).
ஆங்கில மூலம்: Solomon and Animals
இதர குர்-ஆன் முரண்பாடுகள்
© Answering Islam, 1999 - 2012. All rights reserved.
சாலொமோன் மீது குர்-ஆனின் அவதூறு: பிசாசுக்களோடு ஐக்கியம்
சாலொமோன் மீது குர்-ஆனின் அவதூறு: பிசாசுக்களோடு ஐக்கியம்
பைபிள் தீர்க்கதரிசிகளை, இறைத்தூதர்களை பாவிகளாக சித்தரிக்கிறது என்று இஸ்லாமியர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். தீர்க்கதரிசிகள் கூட பாவம் செய்துள்ளார்கள் என்று பைபிள் சித்தரிப்பதினால், இதுவே பைபிள் திருத்தப்பட்டுள்ளது என்பதற்கு சான்று என்று இஸ்லாமியர்கள் கூறுகிறார்கள். இந்த தலைப்புப் பற்றி நம் தளத்தில் வேறு கட்டுரைகளில் பதில்களை எழுதியுள்ளோம். எனவே, ஏன் பைபிள் தீர்க்கதரிசிகளின் எதிர்மறைவான நடத்தைகளையும் சொல்கிறது என்பதற்கு விளக்கம் அல்லது மறுப்பு இந்த கட்டுரையில் சொல்லப்போவதில்லை.
அதற்கு பதிலாக, இதே நிபந்தனையை நாம் குர்-ஆனோடு உரசப்போகிறோம், அதாவது எப்படி முஸ்லிம்களின் வேதம் அல்லாஹ்வின் தூதர்கள் மீது அவதூறுகளை கூறுகிறது என்பதை காணப்போகிறோம். இந்த தலைப்பு பற்றிய நம்முடைய இதர கட்டுரைகளின் தொடர்ச்சி தான் இந்த தற்போதைய கட்டுரையாகும், முந்தைய அக்கட்டுரைகளை கீழே தரப்பட்ட தொடுப்புக்களில் படிக்கவும்:
1) தீர்க்கதரிசிகளும், பாவங்களும்
2) ஆதாம், ஏவாள் மற்றும் ஷிர்க் என்ற பாவமும்.`
இந்த கட்டுரையில், சலொமோனுக்கு எப்படி ஜின்கள்(பிசாசுக்கள்) வேலை செய்தன என்பதைப் பற்றிய குர்-ஆனின் வசனங்களில் காணப்படும் அவதூறை காணப்போகிறோம். "தேவன் ஒருவரே" என்று பிசாசுக்கள் அறிந்திருந்தன என்று பரிசுத்த பைபிள் கூறுகிறது:
தேவன் ஒருவர் உண்டென்று விசுவாசிக்கிறாய், அப்படிச் செய்கிறது நல்லதுதான்; பிசாசுகளும் விசுவாசித்து, நடுங்குகின்றன . (யாக்கோபு 2:19)
மேலும் இயேசு உன்னத தேவனின் பரிசுத்த குமாரன் என்றும், அவர் தங்களை அழித்துவிடுவார் என்றும் அவைகள் அறிந்திருந்தன:
ஜனங்கள் திரளாயிருந்தபடியால் அவர்கள் தம்மை நெருக்காதபடிக்கு, தமக்காக ஒரு படவை ஆயத்தம்பண்ணவேண்டுமென்று, தம்முடைய சீஷர்களுக்குச் சொன்னார். அசுத்த ஆவிகளும் அவரைக் கண்டபோது, அவர் முன்பாக விழுந்து: நீர் தேவனுடைய குமாரன் என்று சத்தமிட்டன. (மாற்கு 3:10,11)
அவன் இயேசுவைக் கண்டபோது கூக்குரலிட்டு, அவருக்கு முன்பாக விழுந்து: இயேசுவே, உன்னதமான தேவனுடைய குமாரனே, எனக்கும் உமக்கும் என்ன? என்னை வேதனைப்படுத்தாதபடிக்கு உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன் என்று மகா சத்தத்தோடே சொன்னான். அந்த அசுத்த ஆவி அவனை விட்டுப் போகும்படி இயேசு கட்டளையிட்டபடியினாலே அப்படிச் சொன்னான். அந்த அசுத்த ஆவி வெகுகாலமாய் அவனைப் பிடித்திருந்தது; அவன் சங்கிலிகளினாலும் விலங்குகளினாலும் கட்டுண்டு காவல்பண்ணப்பட்டிருந்தும் கட்டுகளை முறித்துப்போட்டுப் பிசாசினால் வனாந்தரங்களுக்குத் துரத்தப்பட்டிருந்தான். இயேசு அவனை நோக்கி: உன் பேர் என்னவென்று கேட்டார்; அதற்கு அவன்: லேகியோன் என்றான்; அநேகம் பிசாசுகள் அவனுக்குள் புகுந்திருந்தபடியால் அந்தப் பேரைச் சொன்னான். தங்களைப் பாதாளத்திலே போகக் கட்டளையிடாதபடிக்கு அவைகள் அவரை வேண்டிக்கொண்டன. (லூக்கா 8:28-31)
ஆகையால், கிறிஸ்தவ விசுவாசிகள் சாத்தானோடும், அவனோடுள்ள இதர பிசாசுக்களோடும் ஐக்கியம் கொள்ளக்கூடாது:
இப்படியிருக்க, விக்கிரகம் ஒரு பொருளென்றும், விக்கிரகத்துக்குப் படைக்கப்பட்டது ஒரு பொருளென்றும் நான் சொல்லுகிறேனோ? அஞ்ஞானிகள் பலியிடுகிறவைகளை தேவனுக்கு அல்ல, பேய்களுக்கே பலியிடுகிறார்களென்று சொல்லுகிறேன்; நீங்கள் பேய்களோடே ஐக்கியமாயிருக்க எனக்கு மனதில்லை. நீங்கள் கர்த்தருடைய பாத்திரத்திலும் பேய்களுடைய பாத்திரத்திலும் பானம் பண்ணக்கூடாதே; நீங்கள் கர்த்தருடைய போஜனபந்திக்கும் பேய்களுடைய போஜனபந்திக்கும் பங்குள்ளவர்களாயிருக்கக்கூடாதே . நாம் கர்த்தருக்கு எரிச்சலை மூட்டலாமா? அவரிலும் நாம் பலவான்களா? (1 கொரிந்தியர் 10:19-22)
அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது? கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் இசைவேது? அவிசுவாசியுடனே விசுவாசிக்குப் பங்கேது? தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தமேது? நான் அவர்களுக்குள்ளே வாசம்பண்ணி, அவர்களுக்குள்ளே உலாவி, அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனங்களாயிருப்பார்கள் என்று, தேவன் சொன்னபடி, நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களே. (2 கொரிந்தியர் 6:14-16)
பரிசுத்த பைபிளின் எச்சரிப்பின் படி, ஒரு உண்மையான விசுவாசி சாத்தானோடும், அவனோடுள்ள இதர சகாக்களோடும் ஐக்கியம் கொள்ளக்கூடாது. ஏதாவது ஒரு தீர்க்கதரிசி சாத்தானோடு ஐக்கியம் கொள்ளவோ, அல்லது அவனை கூட்டாளியாக கொண்டு இருக்கவோ செய்தால், அந்த நபி தேவனுக்கு விரோதமான பாவம் செய்கிறார் என்று பொருள்.
மேலும் உண்மையான விசுவாசிகள், சாத்தான்களோடு ஐக்கியம் கொள்ளமாட்டார்கள் என்று அந்த சாத்தான்களுக்கே தெரியும்.
அவர் அக்கரையிலே கெர்கெசேனர் நாட்டில் வந்தபோது, பிசாசு பிடித்திருந்த இரண்டுபேர் பிரேதக்கல்லறைகளிலிருந்து புறப்பட்டு, அவருக்கு எதிராக வந்தார்கள்; அவர்கள் மிகவும் கொடியராயிருந்தபடியால், அந்த வழியாக ஒருவனும் நடக்கக்கூடாதிருந்தது. அவர்கள் அவரை நோக்கி: இயேசுவே, தேவனுடைய குமாரனே, எங்களுக்கும் உமக்கும் என்ன? காலம் வருமுன்னே எங்களை வேதனைப்படுத்த இங்கே வந்தீரோ என்று கூப்பிட்டார்கள். (மத்தேயு 8:28,29)
பிசாசுக்கள் இயேசுவிடம் "உங்களுக்கு எங்களிடம் என்னவேலை இருக்கிறது" என்று கேட்டனர், அதாவது மனிதர்களுக்கும், பிசாசுக்களுக்கும் இடையே எந்த ஒரு ஒற்றுமையும், வேலையும் இல்லை என்று அவைகள் மறைமுகமாக கூறின. விசுவாசிகளுக்கும் பிசாசுக்களுக்கும் இடையே எந்த ஒரு காரணத்தைக் கொண்டும் ஒற்றுமையான வேலை இருக்காது, அவர்கள் ஒன்றாக சேர்ந்து எதையும் செய்யவேண்டிய அவசியமில்லை.
ஆனால், சாலொமோன் சாத்தான்கள் அல்லது ஜின்களை வைத்து இருந்தார், அவைகள் அவருக்காக வேலை செய்தார்கள் மற்றும் அவர் அவர்களோடு ஐக்கியம் கொண்டு இருந்தார் என்று குர்-ஆன் கூறுகிறது:
இன்னும் ஸுலைமானுக்குக் கடுமையாக வீசும் காற்றையும் (நாம் வசப்படுத்திக் கொடுத்தோம்) அது, அவருடைய ஏவலின் படி, நாம் எந்த பூமியை பாக்கியமுடையதாக்கினோமோ (அந்த பூமிக்கும் அவரை எடுத்துச்) சென்றது இவ்வாறு, ஒவ்வொரு பொருளையும் பற்றி நாம் அறிந்தோராகவே இருக்கின்றோம்.
இன்னும், ஷைத்தான்களிலிருந்தும் அவருக்காகக் (கடலில்) மூழ்கி வரக் கூடியவர்களை (நாம் வசப்படுத்திக் கொடுத்தோம்; இது தவிர) மற்றி வேலைகளையும் (அந்த ஷைத்தான்கள்) செய்யும்; அன்றியும் நாமே அவற்றைக் கண்காணித்து வந்தோம். (குர்-ஆன் 21:81,82)
"பிரமுகர்களே! அவர்கள் என்னிடம் வழிபட்டவர்களாக வருமுன், உங்களில் யார் அவளுடைய அரியாசனத்தை என்னிடம் கொண்டுவருபவர்?" என்று (ஸுலைமான் அவர்களிடம்) கேட்டார். ஜின்களில் (பலம் பொருந்திய ஓர்) இஃப்ரீத் கூறிற்று: நீங்கள் உங்கள் இடத்திலிருந்து எழுந்திருப்பதற்கு முன் அதை நான் உங்களிடம் கொண்டு வந்து விடுவேன்; நிச்சயமாக நான் அதற்கு சக்தியுள்ளவனாகவும், நம்பிக்கைக்கு உரியவனாகவும் இருக்கிறேன்." (27:39)
இறைவேதத்தின் ஞானத்தைப் பெற்றிருந்த ஒருவர்: "உங்களுடைய கண்ணை மூடித்திறப்பதற்குள், அதை உங்களிடம் கொண்டு வந்து விடுகிறேன்" என்று கூறினார்; (அவர் சொன்னவாறே) அது தம்மிடம் வைக்கப்பட்டிருப்பதைக் கண்டதும்; "இது என்னுடைய இறைவனின் அருட் கொடையாகும் நான் நன்றியறிதலுடன் இருக்கின்றேனா, அல்லது மாறு செய்கிறேனா என்று (இறைவன்) என்னைச் சோதிப்பதற்காகவும்; எவன் ஒருவன் (இறைவனுக்கு) நன்றி செலுத்துகின்றானோ அவன் நன்றி செலுத்துவது அவனுக்கே (நன்மை)யாவும்; மேலும், எவன் (நன்றி மறந்து) மாறு செய்கிறானோ (அது அவனுக்கே இழப்பாகும்; ஏனெனில்) என் இறைவன், (எவரிடத்தும்) தேவைப் படாதவனாகவும், மிகவும் கண்ணியம் மிக்கவனாகவும் இருக்கின்றான்" என்று (ஸுலைமான்) கூறினார். (குர்-ஆன் 27:39,40)
மேற்கண்ட வசனங்கள் பற்றி இபின் கதீர் விரிவுரை கீழ்கண்ட விதமாக தருகிறார்:
["பிரமுகர்களே! அவர்கள் என்னிடம் வழிபட்டவர்களாக வருமுன், உங்களில் யார் அவளுடைய அரியாசனத்தை என்னிடம் கொண்டுவருபவர்?" என்று (ஸுலைமான் அவர்களிடம்) கேட்டார் . . . ]
[ஜின்களில் (பலம் பொருந்திய ஓர்) இஃப்ரீத் கூறிற்று:. . .] - முஜாஹித் இது ஒரு "பலம் பொருந்திய ஜின்" என்று விளக்கம் அளிக்கிறார், அபூ ஸாலிஹ் "இந்த ஜின் ஒரு மிகப்பெரிய மலையைப்போன்ற பெரிய ஜின்" என்று விளக்கம் அளிக்கிறார்...
[நீங்கள் உங்கள் இடத்திலிருந்து எழுந்திருப்பதற்கு முன் அதை நான் உங்களிடம் கொண்டு வந்து விடுவேன்] - இதைப் பற்றி இப்னு அப்பாஸ் (ரலி) "நீங்கள் உட்கார்ந்து இருக்கும் இடத்திலிருந்து எழுந்திருப்பதற்கு முன்பாக" என்று விளக்கம் அளிக்கிறார். அஸ்ஸுத்தி மற்றும் இதர அறிஞர்கள் இவ்விதமாக கூறுகிறார்கள்: "அவர் நீதி செலுத்துவதற்கும் மக்களை ஆளுவதற்கும் ஒரு சிம்மாசனத்தில் உட்கார்ந்து இருப்பார், மற்றும் அங்கே இருந்துக்கொண்டு மக்களை ஆளுவார், உணவு அருந்துவார், அந்த இருக்கையில் அவர் காலை முதற்கொண்டு மதியம் வரைக்கும் உட்கார்ந்து இருப்பார்". . .
[நிச்சயமாக நான் அதற்கு சக்தியுள்ளவனாகவும், நம்பிக்கைக்கு உரியவனாகவும் இருக்கிறேன்] - இப்னு அப்பாஸ் இவ்வரிகளுக்கு கீழ்கண்ட விளக்கம் அளிக்கிறார்: "நிச்சயமான நான் அதற்கு சக்தியுள்ளவனாகவும், நம்பிக்கைக்கு உரியவனாகவும் இருக்கிறேன்" என்று ஜின் கூறும்போது, அதற்கு சுலைமான் (அவர் மீது சாந்தி உண்டாகட்டும்) : "இதைவிட மிகவும் வேகமாக எனக்கு வேண்டும்" என்று மறுமொழியாக அளித்தார். சுலைமானின் வார்த்தைகளினால் அறியப்படுவது என்னவென்றால், அந்த அரசியின் சிம்மாசனத்தை சீக்கிரமாக கொண்டு வந்து, தனக்கு அல்லாஹ் கொடுத்து இருக்கின்ற அதிகாரத்தையும், வல்லமையையும், வேலைக்காரர்களின் (ஜின்கள், ஷைத்தான்கள்) திறமையையும் காண்பிக்க வேண்டும் என்று விரும்பினார். தனக்கு அல்லாஹ் கொடுத்து இருக்கும் அதற்கு முன்பும், பின்பும் யாருக்கும் கொடுக்கப்படவில்லை, இதன் மூலமாக "பில்கிஸ்" என்ற அரசிக்கு முன்பாகவும், அவ்வரசியின் மக்களுக்கு முன்பாகவும் தன் நபித்துவத்திற்கு சரியான சான்றாக அமையும். அதாவது அந்த அரசி தன் நாட்டிலே இருக்கும் போதே, இங்கு வருவதற்கு முன்பாகவே, பூட்டப்பட்ட பல அறைகளுக்கு அப்பால் இருக்கும் அவளின் சிம்மாசனத்தை கொண்டு வந்துவிட்டால், இந்த வல்லமை வெளிப்படும் என்று சுலைமான் கருதினார். சுலைமான் "இதைவிட மிகவும் வேகமாக எனக்கு வேண்டும்"… என்று கூறுகிறார்….
[இறைவேதத்தின் ஞானத்தைப் பெற்றிருந்த ஒருவர்] - இந்த வரிகளுக்கு இப்னு அப்பாஸ் இவ்விதமாக விளக்கமளிக்கிறார்: "இதில் கூறப்படுபவர், சுலைமானின் 'ஆஸிப்' என்ற பெயர் கொண்ட எழுத்தாளர் ஆவார். இதே விவரம் முஹம்மத் பின் இஷாக் என்பவரும் அறிவித்துள்ளார், அவர் யாஜித் பின் ருமன் என்பவரிடம் கேட்டறிந்துள்ளார், அதாவது இவ்வசனத்தில் கூறப்படுபவர் ஆஸிப் பின் பர்கியா ஆவார், மேலும் இவர் அல்லாஹ்வின் சிறப்புமிக்க பெயர்களை அறிந்தவர், உண்மையான நம்பிக்கையாளர் ஆவார். கதாதா கூறும் போது: "இவர் மனிதர்களிலேயே நல்ல நம்பிக்கையாளர், இவர் பெயர் ஆஸிப் என்பதாகும்".
["உங்களுடைய கண்ணை மூடித்திறப்பதற்குள், அதை உங்களிடம் கொண்டு வந்து விடுகிறேன்" என்று கூறினார்;] இதன் பொருள் என்னவென்றால், உங்கள் கண்களை உயர்த்தி எதுவரை பார்க்கமுடியுமோ அதுவரை நீங்கள் பாருங்கள், பிறகு எப்போது நீங்கள் கண்களை சிமிட்டுவீர்களோ அந்த நேரத்திற்குள் அந்த சிம்மாசனம் உங்கள் முன் இருக்கும்" என்பதாகும். அதன் பிறகு அவர் எழுந்து உளு செய்துவிட்டு அல்லாஹை (அவனே உயர்த்தப்படுவானாக) தொழுதுக்கொண்டார். முஜாஹித் கூறும் போது: "அவர் கூறினார், ஓ உயர்ந்த கணம்பொருந்தியவரே" (இந்த விரிவுரையின் மூல இணைய தொடுப்பு - Source)
மேலும், கடைசியாக இந்த விவரம் பற்றிய குர்-ஆனின் வசனம் :
(அவருக்குப் பின்னர்) ஸுலைமானுக்குக் காற்றை (வசப்படுத்திக் கொடுத்தோம்), அதனுடைய காலைப் பயணம் ஒரு மாத தூரமாகவும் மாலைப் பயணம் ஒரு மாத தூரமாகவும் இருந்தது மேலும் நாம் அவருக்காக செம்பை ஊற்றுப் போல் உருகியோடச் செய்தோம்; தம் இறைவனுடைய அனுமதிப்படி அவருக்கு முன் உழைப்பவற்றில் ஜின்களிலிருந்தும் (வசப்படுத்திக் கொடுத்தோம்.) அவர்களில் எவர் (அவருக்கு ஊழியம்செய்வதில்) நம்முடைய கட்டளையைப் புறக்கணிக்கின்றாரோ, அவரைக் கொழுந்து விட்டெரியும் (நரக) வேதனையைச் சுவைக்கும் படி நாம் செய்வோம் (என்று எச்சரித்தோம்). (34:12)
அவை ஸுலைமான் விரும்பிய, மிஹ்ராபுகளையும், சிற்பங்களையும், (தடாகங்கள் போன்ற) பெருங் கொப்பரைகளையும், நகர்த்த முடியா பெரும் பாத்திரங்களையும் செய்து கொண்டிருந்தன. "தாவூதின் சந்ததியினரே! நன்றி செய்யுங்கள். மேலும் என் அடியார்களில் நின்றும் நன்றி செலுத்துவோர் சொற்பமானவர்களே" (என்று கூறினோம்). (34:13)
அவர் (ஸுலைமான்) மீது நாம் மரணத்தை விதித்த போது அவர் இறந்து விட்டார் என்பதை, அவர் (சாய்ந்திருந்த) தடியை அரித்து விட்ட நிலத்தின் பூச்சி (கரையானைத்) தவிர வேறெதுவும் அந்த ஜின்களுக்கு அறிவிக்கவில்லை அவர் கீழே விழவே "தாங்கள் மறைவான விஷயங்களை அறிந்திருக்கக் கூடுமானால் (கடின உழைப்பாகிய) இழிவுதரும் வேதனையில் தாங்கள் தரி பட்டிந்திருக்க வேண்டியதில்லை" என்று ஜின்களுக்கு தெளிவாக தெரிந்தது. (34:14)
இறைவனின் உண்மையான வார்த்தையாகிய பைபிள் தேவனுடைய ஆலயத்தை கட்டும் பணியில் ஈடுபட்டு இருந்தது, ஷைத்தான்களோ, இதர பிசாசுக்களோ அல்ல அவர்கள் மனிதர்கள் என்றும், அவர்களை மேற்பார்வையிட்டது சாலொமோன் என்றும் கூறுகிறது (பார்க்க 1 இராஜாக்கள் 3-8, 1 நாளாகமம் 22, 28-29, 2 நாளாகமம் 2-7ம் அதிகாரங்கள்)
மேலும், மேற்கண்ட குர்-ஆன் வசனம் சாலொமோன் ஷைத்தான்களோடு ஐக்கியம் கொண்டு அவர்களிடம் வேலை செய்வித்தார் என்றுச் சொல்லி அவதூறு உண்டாக்கியது மட்டுமல்லாமல், இறைவனுடைய பரிசுத்த இலக்கணத்திற்கும் அவதூறு விளைவித்துள்ளது. அதாவது இறைவனது பரிசுத்த ஆலயத்தை ஷைத்தான்களும், பிசாசுக்களும் கட்டினார்கள் என்றுச் சொல்லி கேவலப்படுத்தியுள்ளது.
சில மனிதர்கள் சாலொமோன் பற்றி ஷாத்தான்கள் சொன்ன அவதூறுகளை நம்பி அவைகளை பின்பற்றியதாக குர்-ஆன் கூறுகிறது.
அவர்கள் ஸுலைமானின் ஆட்சிக்கு எதிராக ஷைத்தான்கள் ஓதியவற்றையே பின்பற்றினார்கள்;. ஆனால் ஸுலைமான் ஒருபோதும் நிராகரித்தவர் அல்லர். ஷைத்தான்கள் தாம் நிராகரிப்பவர்கள். அவர்கள்தாம் மனிதர்களுக்குச் சூனியத்தைக் கற்றுக்கொடுத்தார்கள்; இன்னும், பாபில் (பாபிலோன் என்னும் ஊரில்) ஹாருத், மாருத் என்ற இரண்டு மலக்குகளுக்கு இறக்கப்பட்டதையும் (தவறான வழியில் பிரயோகிக்கக் கற்றுக்கொடுத்தார்கள்). ஆனால் அவர்கள் (மலக்குகள்) இருவரும்; "நிச்சயமாக நாங்கள் சோதனையாக இருக்கிறோம்; (இதைக் கற்று) நீங்கள் நிராகரிக்கும் காஃபிர்கள் ஆகிவிடாதீர்கள்" என்று சொல்லி எச்சரிக்காத வரையில், எவருக்கும் இ(ந்த சூனியத்)தைக் கற்றுக் கொடுக்கவில்லை, அப்படியிருந்தும் கணவன் - மனைவியிடையே பிரிவை உண்டாக்கும் செயலை அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டார்கள். எனினும் அல்லாஹ்வின் கட்டளையின்றி அவர்கள் எவருக்கும் எத்தகைய தீங்கும் இதன் மூலம் இழைக்க முடியாது. தங்களுக்குத் தீங்கிழைப்பதையும், எந்த வித நன்மையும் தராததையுமே - கற்றுக் கொண்டார்கள். (சூனியத்தை) விலை கொடுத்து வாங்கிக் கொண்டவர்களுக்கு, மறுமையில் யாதொரு பாக்கியமும் இல்லை என்பதை அவர்கள் நன்கறிந்துள்ளார்கள். அவர்கள் தங்கள் ஆத்மாக்களை விற்றுப்பெற்றுக்கொண்டது கெட்டதாகும். இதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டாமா? (குர்-ஆன் 2:106)
தாவீதின் குமாரனாகிய சாலொமோனுக்கு குர்-ஆன் அவதூறை உண்டாக்கியுள்ளது. அதாவது ஆலய கட்டுமானப் பணியில் அவர் சாத்தான்களோடு இணைந்து செயல்பட்டார். நிச்சயமாக இந்த கதைகள் எல்லாம் அதே ஷைத்தான்கள் மூலமாகத் தான் வந்திருக்கும். முஹம்மது கொண்டு வந்த செய்தியில் இப்படிப்பட்ட பொய்யான கதைகளை ஷைத்தான் தான் சேர்த்து இருக்கவேண்டும்.
(நபியே!) உமக்கு முன்னர் நாம் அனுப்பி வைத்த ஒவ்வொரு தூதரும், நபியும், (ஓதவோ, நன்மையையோ) நாடும்போது, அவர்களுடைய அந்த நாட்டத்தில் ஷைத்தான் குழப்பத்தை எறியாதிருந்ததில்லை எனினும் ஷைத்தான் எறிந்த குழப்பத்தை அல்லாஹ் நீக்கியப் பின்னர் அவன் தன்னுடைய வசனங்களை உறுதிப்படுத்துகிறான் மேலும், அல்லாஹ் யாவற்றையும் அறிந்தவனாகவும், ஞானம் மிக்கோனாகவும் இருக்கின்றான்.(குர்-ஆன் 22:52)
ஆங்கில மூலம்: Quran Contradiction - The Quran's Slander of Solomon: The Communion of Demons
© Answering Islam, 1999 - 2012. All rights reserved.