அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

February 16, 2012

இஸ்லாமியர்களுக்கு என் கேள்விகள் : நிர்பந்தமும் கபட இஸ்லாமிய வாழ்வும் (வஞ்சகர்களை உருவாக்கும் இஸ்லாம்)


இஸ்லாமியர்களுக்கு என் கேள்விகள் : நிர்பந்தமும் கபட இஸ்லாமிய வாழ்வும் (வஞ்சகர்களை உருவாக்கும் இஸ்லாம்)

உங்களுடைய பேராசிரியர் அல்லது உங்கள் முதலாளி உங்களிடம் வந்து கீழ்கண்டவாறு கூறினால் நீங்கள் என்ன நினைப்பீர்கள்?

"தயவு செய்து என்னிடம் நேர்மையாக நடந்துக் கொள், ஆனால், நான் சொல்வதை எதிர்க்க அல்லது கருத்துவேறுபாடு கொள்ள தைரியம் கொள்ளாதே!"?

"Please be completely honest with me, but don't dare to disagree!" ?

நம்முடைய முந்தைய கட்டுரையில் "தக்கியா" என்பதைப் பற்றி நாம் கண்டோம், அதாவது, முஹம்மது இஸ்லாமியர்களை எவ்வளவு கீழ்தரமாக வாழ கற்றுக்கொடுத்துள்ளார் என்பதைக் கண்டோம். இஸ்லாமியர்களுக்கு இந்த நிலை என்று இருக்கும்போது, இஸ்லாமியரல்லாதவர்களுக்கு வேறு ஒரு நிலையை முஹம்மது உருவாக்கியுள்ளார். அதாவது, இஸ்லாமிய நாட்டில், இஸ்லாமியரல்லாதவர்களாக இருப்பது எவ்வளவு கடினமானது என்பதை நாம் புரிந்துக்கொள்ளலாம்.

இஸ்லாமிய ஷரியா சட்டத்தின் படி, எங்கெல்லாம் இஸ்லாம் தன் கால்களை பதிக்குமோ (ஆட்சி பிடிக்குமோ) அங்கெல்லாம் இஸ்லாமியரல்லாதவர்களுக்கு இரண்டே வாய்ப்புக்கள் கிடைக்கும், ஒன்று இஸ்லாமியராக மாறுவது அல்லது மரண தண்டனை பெறுவது . அதே போல, "வேதங்கள் கொடுக்கப்பட்டோர்களாக இருக்கும் யூத மற்றும் கிறிஸ்தவர்களுக்கு" இருக்கும் வழி, ஒன்று இஸ்லாமியராக மாறவேண்டும் அல்லது அனேக வகைகளில் கொடுமைப்படுத்தப்படவேண்டும்.

எது எப்படி இருந்தாலும் சரி, இஸ்லாமுக்கு மாற நாம் மறுத்தால், அதன் விலையை நாம் செலுத்த தயாராக இருக்கவேண்டும்.

உலகில் எந்த நாட்டிலும் இஸ்லாமிய ஷரியா சட்டம் 100% முழுவதுமாக பின்பற்றப்படுவதில்லை. இதர மார்க்கங்களைப் போல, சிலர் இஸ்லாமை முழுவதுமாக பின்பற்றாமல் போவதினால் ஏற்படும் நல்ல விளைவுகளை கருத்தில் கொண்டு நாம் "இது தான் இஸ்லாம்" அல்லது "இஸ்லாம் நல்லது" என்ற முடிவிற்கு வரமுடியாது. அதே போல, சிலர் இஸ்லாமை முழுவதுமாக பின்பற்றுவதினால் ஏற்படும் தீய விளைவுகளை கண்டு, இஸ்லாம் ஒரு தீய மார்க்கம் என்று நாம் முடிவு எடுக்கமுடியாது. அதாவது இஸ்லாமை பின்பற்றும் மக்களைக்கொண்டு நாம் இஸ்லாமின் நிலையை தீர்மானிக்கமுடியாது. எந்த மார்க்கத்தையானாலும், அது நல்ல மார்க்கமாக அல்லது தீய மார்க்கமா என்று நாம் "அதன் போதனைகளின் அடிப்படையில்" முடிவு எடுக்கவேண்டும்.

குர்ஆன் அனேக இடங்களில் "வஞ்சகம்" என்ற தீய குணத்தைப் பற்றி கடிந்துக்கொண்டு பேசியிருக்கிறது என்பதை நான் அங்கீகரிக்கிறேன். உதாரணத்திற்கு இந்த தொடுப்பில் கொடுக்கப்பட்ட சில குர்ஆன் வசனங்கள் "வஞ்சகமாக" நடப்பவர்களை கடிந்துக்கொள்வதை காணலாம்.

மக்களில் வெகுச்சிலர் மட்டுமே "தீங்கு அனுபவிப்பதற்கு" விரும்புவார்கள். இதைத் தவிர அனேக மக்கள் அல்லது கிட்டத்தட்ட பெரும்பான்மையான மக்கள் அனைவரும் எப்படியாவது "தீமையிலிருந்து, அல்லது கொடுமையிலிருந்து" தப்பிப்பதற்கே முயற்சி எடுப்பார்கள். இஸ்லாமை ஏற்காமல் அதனை நிராகரிப்பது "தீங்கு ஏற்படுவதற்கு" வழி வகுக்கும் என்று மக்கள் பயப்படும் போது, அவர்கள் இஸ்லாமியர்களாக மாறுவதற்கு வேறு எதுவும் ஊந்துகோலாக இருக்காது. தங்கள் இருதயம் இஸ்லாமை வெறுத்தாலும், கொடுமைப்படுத்தப்படுவோம் என்ற பயத்தினால் "உதடுகளின் மூலமாக நான் இஸ்லாமியனாக மாறுகிறேன் " என்றுச் சொல்லி மாறிவிடுவார்கள். இஸ்லாமை நம்பவில்லையானலும், இஸ்லாம் ஒரு உண்மையான மார்க்கம் இல்லை என்ற திடமாக நம்பினாலும், வேறு வழியின்றி தங்களின் தெய்வத்திற்கு நேர்மையானவர்களாக இருக்காமல், இஸ்லாமை ஏற்றுக்கொள்வார்கள். (இதில் உண்மையான யூதனும், கிறிஸ்தவனும் அடையாளம் காட்டப்படுவான், அவன் தன் உயிரே போனாலும் சரி, இஸ்லாமை ஏற்கமாட்டான்). ஒரு இஸ்லாமிய ஆட்சி நடக்கும் நாட்டில், இதர மார்க்க மக்கள் இஸ்லாமினால் ஏற்படும் தீய விளைவுகளினாலும், வன்முறைக்கு பயப்படுவதினாலும் இஸ்லாமுக்கு மாறிவிடுகின்றனர்.

வஞ்சகம் கூடாது என்றுச் சொல்லி குர்ஆன் அதிக சத்தமிட்டு முழக்கமிட்டாலும், இஸ்லாமிய ஆட்சியில் அதிகாரம் தன் கைக்கு வரும் போது எல்லா மக்களும் முஹம்மதுவை நபி என்று அறிக்கையிடவேண்டும் என்று கட்டாயப்படுத்துவதினால், இஸ்லாம் அனேக வஞ்சகக்காரர்களை உருவாக்கிவிடுகின்றது. "வஞ்சகம்" என்பது ஒரு மிகபெரிய தீய பிரச்சனை என்று இஸ்லாம் அங்கீகரித்தாலும், அதனை கடிந்துக்கொண்டாலும், உண்மை இஸ்லாமிய ஷரியா சட்டமானது, அனேகர் வஞ்சகர்களாக மாறுவதற்கு வழியை வகுத்துக் கொடுக்கிறது. நேர்மையில்லாமல், பயந்துக்கொண்டு "இஸ்லாமியனாக நான் மாறுகிறேன்" என்றுச் சொல்லும் வஞ்சக நபர்களை இஸ்லாம் ஆசீர்வதிக்கிறது, ஆனால், "உண்மையாக எனக்கு இஸ்லாம் மீது நம்பிக்கையில்லை என்று நேர்மையாக சொல்லும் நபரை" இஸ்லாம் தண்டிக்கிறது.

இஸ்லாம் உதடுகளினால் பெயரளவிற்கு வஞ்சகத்தை கண்டித்தலும், இஸ்லாமை விட்டு வெளியே செல்லும் நபருக்கு மரண தண்டனையை கொடுக்கிறது. நீங்களே சிந்தித்துப் பாருங்கள், . இதன் விளைவாக, இஸ்லாமிய நாடுகளில் எத்தனை பேர் தங்கள் உதடுகளினால் இஸ்லாமை அங்கீகரித்து, இஸ்லாமியராக வாழ்ந்துக்கொண்டு, அதே நேரத்தில் தங்கள் இருதயத்தில் இஸ்லாமை உதரிதள்ளிவிட்டு வாழ்ந்துக்கொண்டு இருக்கிறார்கள்.

திம்மி சட்டங்கள்(Dhimmi Laws) பற்றி அனேக விவரங்களைத் தரலாம், ஆனால் கட்டுரை சிறியதாக இருக்கவேண்டும் என்பதற்காக அவைகளை இங்கு குறிப்பிடவில்லை, தேவைப்பட்டால் அவைகள் பற்றி இன்னொரு கட்டுரையில் எழுதலாம். (திம்மி என்றால், இஸ்லாமிய ஆட்சியில் வாழும் இஸ்லாமியரல்லாதவர்கள்,முக்கியமாக யூதர்கள், கிறிஸ்தவர்கள் சேபியன்கள் போன்றவர்கள் இதில் அடங்குவர்)

வஞ்சகம் என்பது எவ்வளவு பெரிய பிரச்சனை என்பதை தேவனுடைய வார்த்தையாகிய‌ பைபிள் தெளிவாக விளக்குகிறது.

எகிப்தை விட்டு எல்லா இஸ்ரவேல் மக்களும் மோசேயுடன் கட்டாயமாக வெளியே வரவேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படவில்லை. மோசேயுடன் அவர்கள் தங்கள் சொந்த தீர்மானத்தின்படியே வந்தார்கள், கட்டாயத்தின் பேரில் அவர்கள் வரவில்லை. இஸ்ரவேல் மக்கள் சீனாய் மலையை அடைந்த போது, தேவன் அவர்களோடு ஒரு உடன்படிக்கையை செய்தார். தம்முடைய சட்டத்தைக் கொடுத்தார், அதன் பிறகு இந்த உடன்படிக்கையை அவர்கள் அங்கீகரிக்கிறார்களா? என்று அவர்களின் விருப்பத்தைக் கேட்டார். அதே போல, யோசுவா புத்தகத்தில் குறிப்பிட்டது போல, இஸ்ரவேல் அடைந்த பிறகு தேவன் இதே போல ஒரு கேள்வியை யோசுவாவின் மூலமாக மக்களிடம் கேட்டார். அதனை நாம் யோசுவா 24ம் அதிகாரத்தில் காணலாம்.

13 அப்படியே நீங்கள் பண்படுத்தாத தேசத்தையும், நீங்கள் கட்டாத பட்டணங்களையும் உங்களுக்குக் கொடுத்தேன், அவைகளில் குடியிருக்கிறீர்கள்; நீங்கள் நடாத திராட்சத்தோட்டங்களின் பலனையும், ஒலிவத்தோப்புக்களின் பலனையும் புசிக்கிறீர்கள் என்றார்.

14 ஆகையால் நீங்கள் கர்த்தருக்குப் பயந்து, அவரை உத்தமமும் உண்மையுமாய்ச் சேவித்து, உங்கள் பிதாக்கள் நதிக்கு அப்புறத்திலும் எகிப்திலும் சேவித்த தேவர்களை அகற்றிவிட்டு, கர்த்தரைச் சேவியுங்கள்.

15 கர்த்தரைச் சேவிக்கிறது உங்கள் பார்வைக்கு ஆகாததாய்க் கண்டால், பின்னை யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்துகொள்ளுங்கள்; நதிக்கு அப்புறத்தில் உங்கள் பிதாக்கள் சேவித்த தேவர்களைச் சேவிப்பீர்களோ? நீங்கள் வாசம்பண்ணுகிற தேசத்துக் குடிகளாகிய எமோரியரின் தேவர்களைச் சேவிப்பீர்களோ? நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே சேவிப்போம் என்றான் .

"இதர தெய்வங்களை தெரிந்துக்கொள்ள உங்களுக்கு தைரியமிருக்கின்றதா?" என்று கேட்கவில்லை, அதற்கு பதிலாக "இதோ இப்போது நீங்கள் விடுதலையாக இருக்கிறீர்கள், உங்கள் சுயவிருப்பப்படி முடிவு எடுங்கள்" என்று கேட்டார்.

இதே போலத்தான் இயேசுவும் செய்தார். தம்முடன் இருக்கும் சீடர்கள் ஏதோ ஒரு தீய நோக்கத்திற்காக, அல்லது கட்டாயத்தின் பேரில் தம்மோடு இருக்க இயேசு விரும்பவில்லை. யோவான் சுவிசேஷத்தில், ஆறாவது அத்தியாயத்தில், அனேக கடினமான உண்மைகளை இயேசு போதித்த பிறகு, கீழ்கண்டவாறு கூறினார்.

6:66 அதுமுதல் அவருடைய சீஷரில் அநேகர் அவருடனேகூட நடவாமல் பின்வாங்கிப்போனார்கள்.

6:67 அப்பொழுது இயேசு பன்னிருவரையும் நோக்கி: நீங்களும் போய்விட மனதாயிருக்கிறீர்களோ என்றார் .

6:68 சீமோன் பேதுரு அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்தியஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே.

தம்மை விட்டுச் செல்ல விரும்புகிறவர்கள் மீது சாபத்தையும் கோபத்தையும் இயேசு கொட்டவில்லை. தம்மோடு நெருங்கிய சீடர்களாக இருந்தவர்களிடம் அவர் "நீங்களும் போக மனதாக இருக்கிறீர்களா அல்லது என்னோடு இருப்பீர்களா?" என்று கேட்டார். இந்த உண்மையை உணர்ந்துக்கொள்ளுங்கள் "நேர்மையற்ற முறையில் அறைமனதுடன் நடந்துக்கொண்டு வெறும் வெளிவேஷம் போட்டு, நான் விசுவாசிக்கிறேன் என்றுச் சொல்லி நடிக்கும் நபர்களை விட, "நான் விசுவாசிக்கமாட்டேன்" என்று நேர்மையாகச் சொல்கின்ற நபரையே தேவன் அதிகமாக விரும்புவார் .

1 இராஜாக்கள் 18:21ம் வசனத்தில் இவ்விதமாக நாம் வாசிக்கிறோம்:

அப்பொழுது எலியா சகல ஜனத்தண்டைக்கும் வந்து: நீங்கள் எந்தமட்டும் இரண்டு நினைவுகளால் குந்திக்குந்தி நடப்பீர்கள்; கர்த்தர் தெய்வமானால் அவரைப் பின்பற்றுங்கள்; பாகால் தெய்வமானால் அவனைப் பின்பற்றுங்கள் என்றான் , ஜனங்கள் பிரதியுத்தரமாக அவனுக்கு ஒன்றும் சொல்லவில்லை.

ஆமோஸ் தீர்க்கதரிசன புத்தகத்தில், ஐந்தாம் அதிகாரத்தில் கீழ்கண்டவிதமாக படிக்கிறோம்:

5:21 உங்கள் பண்டிகைகளைப் பகைத்து வெறுக்கிறேன்; உங்கள் ஆசரிப்பு நாட்களில் எனக்குப் பிரியமில்லை.

5:22 உங்கள் தகனபலிகளையும் போஜனபலிகளையும் எனக்குப் படைத்தாலும் நான் அங்கீகரிக்கமாட்டேன்; கொழுமையான உங்கள் மிருகங்களின் ஸ்தோத்திரபலிகளையும் நான் நோக்கிப் பார்க்கமாட்டேன்.

5:23 உன் பாட்டுகளின் இரைச்சலை என்னைவிட்டு அகற்று; உன் வீணைகளின் ஓசையை நான் கேட்கமாட்டேன்.

5:24 நியாயம் தண்ணீரைப்போலவும், நீதி வற்றாத நதியைப்போலவும் புரண்டு வரக்கடவது.

ஏசாயா தீர்க்கதரிசன புத்தகத்தின் 58வது அத்தியாயம் முழுவதையும் படித்தோமானால், ஏன் தேவன் இஸ்ரவேல் மக்களின் நடிப்பான உபவாசத்தை (நோம்பை) மறுத்தார் என்பதற்கான காரணங்கள் சொல்லப்பட்டுள்ளன, மற்றும் எது உண்மையான உபவாசமாக இருக்கிறது என்பதைப் பற்றியும் கூறப்பட்டுள்ளது.

அதே போல, மத்தேயு 6ம் அதிகாரத்தில் இயேசு:

எது உண்மையான தானதர்மம், எது வஞ்சகமான தான தர்மம்,

எது உண்மையான ஜெபம் எது பொய்யான ஜெபம், மற்றும்

எது உண்மையான உபவாசம் (நோம்பு) எது பொய்யான உபவாசம் (நோம்பு)

என்பவைகளைப் பற்றி பேசுகிறார். இயேசுவின் போதனைகளில் மிகவும் வலிமைவாய்ந்த வார்த்தைகள் எவைகள் என்று நாம் கவனித்தால், அவைகள் "மத தலைவர்களின் போலியான மத கோட்பாடுகள் மற்றும் அவர்களின் வஞ்சக செயல்கள் பற்றியதாக" இருக்கும். இவைகளை மத்தேயு 23ம் அதிகாரத்தில் நாம் காணலாம்.

பவுல் கூட போலியான நம்பிக்கையில் உள்ள ஆபத்தைப் பற்றி கூறுகிறார். "தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்கள்" என்று கூறுகிறார். மற்றும் "இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு" என்று அறிவுரையும் கூறுகிறார் (2 தீமோத்தேயு 3:5) இயேசு கூட "விசுவாசம் உள்ளவர்கள் என்றுச் சொல்லிக்கொண்டு" போலியான நடப்பவர்கள் பற்றி எச்சரித்துள்ளார். இப்படிப்பட்ட வஞ்சகமாக நடப்பவர்கள் பற்றி என்ன செய்யலாம் என்று சிந்திக்கும் போது, "மனந்திரும்பாமல் வேண்டுமென்றே பாவங்கள் செய்யும் நபர்களை உங்கள் சபைகளிலிருந்து நீக்கிவிடுங்கள், அப்புறப்படுத்திவிடுங்கள்" என்று இயேசு கட்டளைக் கொடுக்கிறார். ஆனால், இப்படிப்பட்டவர்களை தண்டிக்கவோ, சரீர பிரகாரமாக கொடுமைப்படுத்தவோ செய்யாமல், அவர்களை அப்புறப்படுத்துங்கள் என்று இயேசு கூறுகிறார் (மத்தேயு அத்தியாயம் 18). இதே போல, தங்கள் சபைகளை விட்டு சுயமாக வெளியே போகிறவர்களுக்கு எந்த வித தண்டனையையும் சபை கொடுக்கக்கூடாது .

வஞ்சகம் மற்றும் அபோஸ்டசி என்றுச் சொல்லக்கூடிய விசுவாசத்தை விட்டு வெளியேறுதல் போன்றவைகள் பற்றிய தேவனுடைய கருத்து என்ன என்பதை விளக்கும் மிகவும் தெளிவான வசனங்களை, வெளிப்படுத்தின விசேஷம் 3:15,16ம் வசனங்களில் காணலாம்.

3:15 உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; நீ குளிருமல்ல அனலுமல்ல; நீ குளிராயாவது அனலாயாவது இருந்தால் நலமாயிருக்கும் .

3:16 இப்படி நீ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிறபடியினால் உன்னை என் வாயினின்று வாந்திபண்ணிப்போடுவேன்.

இந்த வசனங்கள் தேவன் எப்படிப்பட்டவர்களை முக்கியப்படுத்துகிறார் என்பதை காட்டுகிறது, அதாவது "நான் நம்பிக்கை கொள்ள மாட்டேன் என்று நேர்மையாக" சொல்கின்ற நாத்திகனையும் தேவன் மெச்சிக்கொள்கிறார் , அதே போல தன் விசுவாசத்தில் பலவீனமாக இருப்பவனையும் தேவன் ஒப்புக்கொள்கிறார். ஆனால், நான் முழுவதுமாக விசுவாசிக்கிறேன் என்றுச் சொல்லியும், தேவனுக்கு அன்புடன் கீழ்படிந்து, அன்பு செலித்தி வாழுகிறேன் என்று வஞ்சகமாக சொல்லுகிறவனை தேவன் அங்கீகரிப்பதில்லை. இருதயத்தில் விசுவாசிக்காமல், உதட்டளவில் நம்பிக்கைக் கொள்கின்ற ஏமாற்றுக்காரனை தேவன் அங்கீகரிப்பதில்லை.

பைபிளின் இறைவன் நேர்மையானவர், உண்மையானவர் மற்றும் தம்மைப்போலவே தம் விசுவாசிகள் (படைப்பு) இருக்கவேண்டும் என்று அவர் விரும்புகிறார். இஸ்லாமிய சட்டம் வஞ்சகத்தை கடிந்துக்கொள்கிறது ஆனால், அதே நேரத்தில் மக்களை வஞ்சகர்களாக மாற்றுகிறது. இப்படிப்பட்ட இஸ்லாம் நிச்சயமாக இறைவனின் உண்மையை உடையதாக இருக்கமுடியாது. ஆகையால், இந்த விஷயத்தைப் பொருத்தமட்டில், இஸ்லாம் உண்மையான இறைவனுடைய வார்த்தைகளை உடைய மார்க்கமாக இருக்கமுடியாது. பரிசுத்த பைபிளின் வார்த்தைகளில் வெளிப்பட்ட தேவனே உண்மையான தேவன் என்பதை நான் அவ்வார்த்தைகளை படித்து அறிந்துக்கொண்டேன்.

சுருக்கம்:

இரத்தினச் சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால், வஞ்சகத்தை கடிந்துக்கொண்டு, ஆனால் மக்களுக்கு சுதந்திரத்தை கொடுக்காமல் இருந்து, வஞ்சகமாக வாழ்பவர்களை தண்டிக்கும் இஸ்லாமே ஒரு மிகப்பெரிய வஞ்சகமாகும்.

(It is hypocritical to condemn hypocrisy but to deny the freedom of dissent by punishing those who do.)

இதுவரை நாம் ஆய்வு செய்த மேற்கண்ட விவரங்களிலிருந்து வெளிப்படுவது என்னவென்றுச் சொன்னால், "இஸ்லாம் என்ற மார்க்கத்தில் வஞ்சகம் என்பது இஸ்லாமின் ஆணிவேறாக இருக்கிறது, அது தொன்றுதொட்டு வருகின்ற பழக்கமாகும்" என்று தெளிவாக புரிகிறது. இஸ்லாமின் இந்த பிரச்சனை எப்படி தீர்க்கப்படும்? இது தீர்க்கப்பட முடியாது என்று சொல்வோமானால், "இஸ்லாம் என்பது உண்மையும், சத்தியமுமான இறைவன் உருவாக்கிய மார்க்கமல்ல" என்பது புரிந்துவிடும்.

ஆங்கில மூலம்: Pressure and Pretence

இஸ்லாமியர்களுக்கு என் கேள்விகள்: கட்டுரைகள் அட்டவணை


© Answering Islam, 1999 - 2012. All rights reserved.

Source: http://www.answering-islam.org/tamil/authors/jochenkatz/why-not/31hypocrisy.html


http://isakoran.blogspot.com/2012/02/blog-post_14.html

February 14, 2012

SAN மறுபடியும் முன்மொழிகிறது: TNTJ விலகி ஓடுகிறது

சட்டத்திற்கு உட்பட்டு குர்-ஆன் இறைவேதமா என்று விவாதிக்க SAN மறுபடியும் முன்மொழிகிறது: TNTJ விலகி ஓடுகிறது

ஜனவரி 28&29 ஆகிய தேதிகளில் காவல்துறை உத்தரவுக்குக்கு உட்பட்டு வீடியோ பதிவுடன் கூடிய (அதாவது நேரடி ஒளிபரப்பு இல்லாத) விவாதம் செய்யலாம் அல்லது காவல்துறை ஆணையாளரை இருவரும் சந்தித்து தடை ஆணையை நீக்கும்படி கேட்டுக் கொள்ளலாம் என்று SAN கூறிய ஆலோசனையை TNTJ ஏற்றுக் கொள்ளாமல் தங்கள் தலைமை அலுவலகத்தில் வைத்து அவர்கள் ஒரு நாடகத்தை நடத்தினார்கள். இதைத் தொடர்ந்து மறுபடியும் தடை ஆணை செல்லுபடி ஆகாத வேறொரு மாநிலத்தில் வைத்து விவாதத்தை நடத்தலாம் என்ற ஆலோசனையை TNTJ விற்கு SAN முன்வைத்தது. ஆனால் கடந்த ஒருவாரமாக, TNTJ பதில் கூறவே இல்லை.
_______________________________________________________________________________________________
பரிசுத்த வேதாகமம் குறித்த SAN உடன் விவாதம் நடந்த போது குர்-ஆன் கூறுவதைக் குறித்த தன் போதனையை PJ அவர்கள் மாற்றிக் கொள்ள வேண்டியதாயிற்று. குர்-ஆன் இறைவேதமா? என்று SAN உடன் PJ விவாதிக்க நேர்ந்தால், குர்-ஆன் குறித்த தன் முழு நம்பிக்கையையும் மாற்ற வேண்டியதாயிருக்கும் என்று PJ பயப்படுகிறார் அல்லவா? SAN உடன் குர்-ஆன் குறித்து விவாதிக்க முடியும் என்று PJ அவர்கள் உண்மையாகவே நினைப்பார் எனில், சட்டத்திற்கு உட்பட்ட குடிமக்களாக SAN இருப்பது போல சட்டத்திற்கு உட்பட்டு SAN உடன் விவாதம் செய்திருந்தால் அது நிரூபணமாக இருந்திருக்கும். உண்மையாக நடைபெறவேண்டிய விவாதத்திற்கு ஒரு நாடகம் மாற்று ஆக இருக்க முடியாது. SAN ன் ஆலோசனையை TNTJ ஏன் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.



……………………The Mail to TNTJ Starts Here……………………………………………………………

———- Forwarded message ———-
From: SAN (INDIA) < sakshi.apologeticsnetwork@gmail.com>
Date: Fri, Feb 3, 2012 at 2:48 PM
Subject: Re: san new
To: TNTJ Head Office < tntjho@gmail.com>, TNTJ Head Office < tntjho5@gmail.com>, TNTJ Head Office <tntjho6@gmail.com>, pjtntj@gmail.com

Let the name of Yahweh, the only true name of God, upon which all the true prophets have called, who in flesh was known by the name Jesus Christ, be glorified forever and ever. Amen



Dear Friends at TNTJ,



Further to our email dated January 28, 2011 for which we have not got any reply from you, we reiterate our proposal that both SAN & TNTJ can approach the Joint Commissioner of Police, South Zone, Chennai Police to get the cancellation order revoked and conduct the debate on Quran at Chennai itself.



However, if either the joint commissioner refuses to revoke the ban order or if you are not willing to approach the joint commissioner along with SAN, we propose the following:

(a) We can host the debate in other parts of India where there are no ban orders on such debates. For the debate on Quran, SAN is willing to bear the entire expense and host the debate at Kochi, Kerala.

(b) If TNTJ wants 150 participants as agreed in the agreement to be in Kochi, SAN is willing to book an auditorium and host the debate.

(c) If TNTJ wants 25 participants from its side, SAN can host the debate either at SAN office, Kochi or at any other place in Kochi.

(d) The future debates on other subjects can also be similarly be hosted in other parts of the country, if the ban order still stands.

Looking forward for your reply.



Regards,

SAN



—————————————The Mail to TNTJ ends here————————————————————————————

TNTJ க்கு அனுப்பின மின்னஞ்சலின் தமிழாக்கம்

இறைவனின் உண்மையான பெயராகிய யெகோவாவின் நாமம் என்றைக்கும் சதாகாலங்களிலும் உயர்த்தப்படுவதாக. இந்தப் பெயரையே எல்லா உண்மையான தீர்க்கதரிசிகளும் அழைத்தனர். இயேசுகிறிஸ்து என்ற பெயரால் அவர் மாம்சத்தில் வெளிப்பட்டபோது அறியப்பட்டார்.

அன்பார்ந்த TNTJ நண்பர்களே,

ஜனவரி 28, 2012 ல் நாங்கள் அனுப்பின மின்னஞ்சலுக்கு உங்களிடம் இருந்து எந்த பதிலையும் நாங்கள் பெற வில்லை, அதில் நாங்கள் சொன்னது போல SAN &TNTJ இணைந்து சென்னை, தெற்கு மண்டல காவல்துறை இணை ஆணையரைச் சந்தித்து தடை ஆணையை மாற்றி சென்னையிலேயே குர்-ஆன் இறைவேதமா என்ற விவாதத்தை நடத்தலாம் என்பதை மறுபடியும் வலியுறுத்துகிறோம்.

அல்லது இணை ஆணையர் தடை உத்தரவை மாற்ற மறுத்தாலோ அல்லது SAN உடன் இணைந்து இணை ஆணையரைச் சந்திக்க நீங்கள் விருப்பம் இல்லாமலோ இருப்பீர்கள் எனில், பின் வரும் ஆலோசனையை நாங்கள் கூறவிரும்புகிறோம்:

(1)இப்படிப்பட்ட விவாதங்களுக்கு தடை உத்தரவு இல்லாத இந்தியாவின் மற்ற பகுதிகளில் நாம் விவாதத்தை நடத்தலாம். குர்-ஆன் குறித்த விவாதத்திற்கு, விவாதம் நடத்துவதற்கு ஆகும் முழுச் செலவையும் SAN ஏற்றுக் கொள்ள விருப்பத்துடன் இருக்கிறோம். கேரளாவில் உள்ள கொச்சியில் வைத்து விவாதம் நடைபெற ஒழுங்கு செய்யப்படும்.

(2)ஒப்பந்தத்தில் ஒப்புக் கொண்டபடி 150 பேர் கொச்சியில் பங்குபெற வேண்டும் என்று TNTJ விரும்பினால், SAN ஒரு ஆடிட்டோரியத்தை முன்பதிவு செய்து விவாத்த்தை நடத்த ஆயத்தமாக இருக்கிறது.

(3) TNTJ சார்பாக 25 பேர் பங்கு பெற வேண்டும் என்று விரும்பினால், SAN விவாதத்தை கொச்சியில் உள்ள SAN அலுவலகத்திலோ அல்லது கொச்சியில் வேறு எந்த இடத்திலாவது விவாதத்தை நடத்தும்.

(4)தடை உத்தரவு நீடிக்கும் எனில், விவாதத்தின் மற்ற தலைப்புகளில் நடக்க வேண்டிய விவாதங்களையும் நாட்டின் மற்ற பகுதிகளில் இது போல நடத்திக் கொள்ளலாம்.

உங்கள் பதிலை எதிர்பார்த்து இருக்கிறோம்.

SAN



The Mail to TNTJ ends here

SAN எப்படி குர்-ஆன் கூறுவதைக் குறித்த தன் போதனையையே PJ அவர்கள் மாற்றும்படி செய்தது?
1.பரிசுத்த வேதாகமம் குறித்து குர்-ஆன் கூறுவதைக் குறித்த போதனையில்
விவாதத்திற்கு முன்பு, பரிசுத்த வேதாகமம் திருத்தப்பட்டது என்று குர்-ஆன் போதிக்கிறது என PJ தன் இணைய தளத்தில் குறிப்பிட்டிருந்தார்(குரான் விரிவுரையில் விளக்க எண் 4). அவர் எழுதியதாவது: "முந்தைய வேதங்களில் நம்பிக்கைக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிற குர்-ஆன் பல இடங்களில், " அந்த புத்தகங்களில் மனிதக் கருத்துக்கள் சேர்க்கப்பட்டு, மாற்றப்பட்டு, மறைக்கப்பட்டு, திருத்தப்பட்டு இருக்கின்றன" என்றும் குறிப்பிடுகிறது (பின்வரும் குர்-ஆன் வசனங்களைப் பார்க்க, 2:75, 79, 3:78, 4:46, 5:13, 41)."
நீங்கள் பின்வரும் இணைப்பில் அதைக் (ஆங்கிலத்தில்) காணலாம், அவர்கள் மாற்றுவதற்கு முன்பு பாருங்கள்:http://onlinepj.com/quran-thafseer-in-english/4-previous-revelations

தமிழ்: http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/4-munnar-arulapattathu/
ஆனால், அந்த குர்-ஆன் வசனங்கள் அனைத்திற்கும் உள்ள அர்தத்தை SAN விளக்கி, PJ வின் தவறான புரிந்து கொள்ளுதலுக்கு மறுப்பு கூறி, அனேக குர்-ஆன் வசனங்களைக் காண்பித்து பரிசுத்த வேதாகம் குறித்து குர்-ஆன் கூறுவதைப் பற்றி PJ அவர்கள் புரிந்து கொள்ள உதவினோம்.

இதனால் PJ தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளுவதைத் தவிர வேறு வழி இல்லாது போயிற்று.
ஆகவே, விவாதம் நடந்து கொண்டிருந்த நேரத்தில், PJ தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு இப்போது இருக்கும் பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் குர்-ஆன் அத்தாட்சி கொடுத்த, முஹம்மது அவர்களின் காலத்தில் உள்ள அதே பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் அல்ல என்று கூற வேண்டியதாயிற்று.
பரிசுத்த வேதாகம் திருத்தப்பட்டது என்று குர்-ஆன் போதிக்கவில்லை என ஒப்புக் கொள்வதை இது தெளிவாகக் காண்பிக்கிறது. குர்-ஆன் உண்மையில் போதிப்பது என்ன என்பதைக் குறித்து இஸ்லாமிய அறிஞர் ஒருவருக்கு விளக்கம் கூற கிறிஸ்தவர்கள் தேவைப்படுகிறார்கள் என்பது வருந்தத்தக்கதாகும்.
2. பரிசுத்த வேதாகமத்தில் முஹம்மது குறித்து ஏதேனும் தீர்க்கதரிசன்ங்கள் உண்டா?
விவாதத்திற்கு முன்பு, பரிசுத்த வேதாகமத்தில் முஹம்மது குறித்துச் சொல்லப்பட்ட தீர்க்கதரிசனங்கள் என்று சொல்லிக்கொண்டு PJ ஒரு புத்தகத்தை எழுதி இருக்கிறார். ஆனால், SAN உடன் விவாதிக்கும் போது, அப்படி ஏதாகிலும் சொன்னால் மொத்தத்தில் வேஷம் கலைந்துவிடும் என்பதை உணர்ந்து கொண்டார்.
ஆகவே விவாதம் நடைபெறும்போது, பரிசுத்த வேதாகமத்தில் முஹம்மது குறித்து எந்த தீர்க்கதரிசன்ங்களும் இல்லை என்று மறுத்தார். தலைகீழ் மாற்றம்! தன் சொந்த சமுதாயத்தை தவறாக நடத்திச் சென்றதற்காக அவர்களிடம் PJ மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லவா?
இது போன்று பல சம்பவங்கள் நிகழ்ந்தன. உதாரணமாக, SAN குழுவினர் ஒரு ஹதீஸை தங்கள் இஷ்டத்திற்கு மாற்றிச் சொல்கின்றனர் என்று அலம்பல் செய்த TNTJ குழுவினர், அந்த ஹதீஸ் www.onlinepj.com தளத்தில் இருந்து எடுக்கப்பட்டதுதான் என்றும், சஹீஹ் முஸ்லீம் இல் அப்படியே இருக்கிறது என்பதையும் கண்டுணர வேண்டியதாயிற்று. இப்படிப்பட்ட வேதனைகளின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறதாக இருக்கிறது.

பரிசுத்த வேதாகமம் குறித்து விவாதிக்கும் போதே TNTJ இன் நிலை இப்படி இருக்குமானால், அவர்கள் குர்-ஆன் குறித்து விவாதித்திருந்தால் என்ன நடந்திருக்கும்? நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

இது ஒரு மொழிபெயர்ப்பு
மூலம்:http://www.sakshitimes.org/index.php?option=com_content&task=view&id=567&Itemid=42