அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

November 4, 2011

Answering PJ: பீஜே அவர்களின் "இது தான் பைபிள்" புத்தகத்திற்கு மறுப்பு – 2

Answering PJ: பீஜே அவர்களின் "இது தான் பைபிள்" புத்தகத்திற்கு மறுப்பு – 2

(அப்போஸ்தலர்கள் இயேசுவிற்கு பிறகு வந்தவர்களா?)

பீ ஜைனுல் ஆபிதீன் அவர்கள் எழுதிய "இது தான் பைபிள்" புத்தகத்திற்கு நாம் கொடுத்த முதல் மறுப்பை இந்த தொடுப்பில் படிக்கலாம்: Answering PJ: பீஜே அவர்களின் "இது தான் பைபிள்" புத்தகத்திற்கு மறுப்பு - 1 முதல் பாகத்தில் பீஜே அவர்கள் "முன்னுரை"யில் எழுதிய விவரங்களுக்கு (பக்கம் 2 மற்றும் 3) நாம் பதிலைக் கண்டோம்.

இந்த தற்போதைய இரண்டாம் மறுப்பில், பிஜே அவர்கள் தம்முடைய புத்தகத்தில் "பைபிள் ஓர் அறிமுகம்" என்ற தலைப்பின் கீழ் எழுதிய விவரங்களுக்கு (பக்கம் 4 மற்றும் 5) நம் பதிலைக் காண்போம்.

பீஜே அவர்கள் எழுதியது :

பைபிள் ஓர் அறிமுகம்

...

புதிய ஏற்பாடு என்பது இயேசுவுக்குப் பிறகு வந்தவர்கள் பரிசுத்த ஆவியினால் உந்தப்பட்டு எழுதியவைகளாகும். இப்படிப் பலர் எழுதியவைகளின் தொகுப்பே புதிய் ஏற்பாடு. உதாரணமாக மத்தேயு என்றொரு சுவிசேஷம். இது மத்தேயு என்பவரால் எழுதப்பட்டது. மாற்கு என்ற சுவிசேஷம் மாற்கு என்பவரால் எழுதப்பட்டது" (பக்கம் 4, 5)

கிறிஸ்தவன் எழுதியது :

"பைபிள் ஓர் அறிமுகம்" என்ற தலைப்பின் கீழ் பீஜே அவர்கள், முதலாவது பழைய ஏற்பாடு பற்றிய சிறு குறிப்பை எழுதியுள்ளார். அதன் பிறகு புதிய ஏற்பாடு பற்றி எழுதியுள்ளார். அவர் புதிய ஏற்பாடு பற்றிய எழுதியவைகளில் சில குறைபாடுகள் உள்ளன. அவைகளை நாம் காண்போம்.

பீஜே அவர்கள் "தமது சுயநம்பிக்கையாகிய‌ புதிய ஏற்பாடு நம்பத்தகுந்தது அல்ல என்பதை நிலை நாட்ட விரும்பி " அனேக விவரங்களை மறைத்துவிடுகின்றார். முதலாவதாக அவர் "புதிய ஏற்பாடு என்பது இயேசுவுக்குப் பிறகு வந்தவர்கள் பரிசுத்த ஆவியினால் உந்தப்பட்டு எழுதியவைகளாகும்" என்று எழுதியுள்ளார். நான் பீஜே அவர்களுக்கு கூறிக்கொள்வது என்னவென்றால்,

இயேசுவோடு இருந்து

அவரைக் கண்டு,

அவரிடம் பேசி,

அவரை தொட்டுப்பார்த்து

அவரது அற்புதங்களை தங்கள் கண்களால் கண்ட சீடர்களை பரிசுத்த ஆவியானவர் பயன்படுத்தி புதிய ஏற்பாட்டை எழுதியுள்ளார்.

இயேசுவின் நேரடி சீடர்கள் எழுதியவைகளும், இந்த நேரடி சீடர்களுக்கு சீடர்களாக இருந்தவர்கள் எழுதியவைகளும் புதிய ஏற்பாட்டில் உண்டு. இயேசுவோடு வாழ்ந்த சீடர்களின் பிரசங்கங்களை கேட்டு, விவரங்களை சேகரித்து எழுதியவைகளும் புதிய ஏற்பாட்டில் உண்டு. பீஜே அவர்களே, நீங்கள் சொல்வதைப் பார்த்தால் இயேசுவை கண்களால் காணாதவர்களால் மட்டுமே புதிய ஏற்பாடு எழுதப்பட்டதாக மறைமுகமாக கூறுகிறீர்கள். இது தவறு என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

மத்தேயு:

முதலாவதாக, மத்தேயு என்பவர் இயேசுவின் 12 சீடர்களில் இவரும் ஒருவர். இவர் இயேசுவோடு 3 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்தவர், கூடவே இருந்தவர், இயேசுவின் அற்புதங்களை கண்டவர், இயேசுவின் போதனைகளை கேட்டவர். ஆக, மத்தேயு என்பவர் இயேசுவிற்கு பிறகு வந்தவர் அல்ல, அவர் இயேசுவோடு வாழ்ந்தவர் என்பதை இஸ்லாமிய அறிஞர் பீ ஜைனுல் ஆபீதீன் அவர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

மாற்கு:

இரண்டாவதாக, மாற்கு என்பவர் இயேசுவின் காலத்திற்கு பிறகு ப‌ல நூற்றாண்டுகளுக்கு பின்பாக வந்தவர் அல்ல. இவர் பேதுருவின் உடன் ஊழியக்காரர் அல்லது தோழர். இயேசுவின் சீடராகிய பேதுருவோடும்,பவுலோடும் ஊழியம் செய்தவர். பேதுருவிடமிருந்து இவர் பெற்றுக்கொண்ட அறிவை, விவரங்களை சேகரித்து சுவிசேஷத்தை எழுதினார். இந்த மாற்கு சுவிசேஷத்திற்கு அடிப்படை பேதுரு ஆவார், இந்த பேதுரு, இயேசுவின் 12 சீடர்களில் முக்கியமானவர் மற்றும் இயேசுவின் நெருங்கிய சீடர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

லூக்கா:

மூன்றாவதாக, லூக்கா என்பவர் ஒரு மருத்துவர், இவர் பேதுரு மற்றும் பவுலையும் அறிந்தவர். பவுலோடு பல ஆண்டுகள் ஊழியம் செய்தவர், மாற்கும் லூக்காவும் ஒருமித்து பவுலோடு ஊழியம் செய்துள்ளார்கள். இவர் அனேக விவரங்களை சேகரித்து சுவிசேஷத்தை எழுதியுள்ளார். இந்த லூக்கா இயேசுவின் அனேக சீடர்களை கண்டவர் அவர்களிடம் உரையாடி அனேக விவரங்களை சேகரித்தவர். லூக்கா என்பவர் ஏதோ கண்மூடித்தனமாக எழுதவில்லை, அனேக சாட்சிகளை சந்தித்து, ஆய்வு செய்து எழுதியதாக லூக்கா முதல் அத்தியாயத்தின் முதல் சில வசனங்களில் கூறுகிறார்:

மகா கனம்பொருந்திய தேயோப்பிலுவே, நாங்கள் முழுநிச்சயமாய் நம்புகிற சங்கதிகளை,

ஆரம்பமுதல் கண்ணாரக்கண்டு வசனத்தைப் போதித்தவர்கள் எங்களுக்கு ஒப்புவித்தபடியே அவைகளைக் குறித்துச் சரித்திரம் எழுத அநேகம்பேர் ஏற்பட்டபடியினால்,

ஆதிமுதல் எல்லாவற்றையும் திட்டமாய் விசாரித்தறிந்த நானும் உமக்கு உபதேசிக்கப்பட்ட விசேஷங்களின் நிச்சயத்தை நீர் அறியவேண்டுமென்று,

அவைகளை ஒழுங்காய் உமக்கு எழுதுவது எனக்கு நலமாய்த் தோன்றிற்று. (லூக்கா 1:1-4)

மேற்கண்ட நான்கு வசனங்களில் லூக்கா "ஆரம்பமுதல் கண்ணாரக்கண்டு வசனத்தைப் போதித்தவர்கள் எங்களுக்கு ஒப்புவித்தபடியே" என்று கூறுகிறார். அதாவது இந்த வசனத்தில் அவர் குறிப்பிடுவது, இயேசுவோடு இருந்த சீடர்கள் மற்றும் அவரது தாய் மற்றும் அவரிடமிருந்து அற்புதங்களை பெற்றவர்களைத் தான். மட்டுமல்ல, தாம் சேகரித்த விவரங்களை அவரும் "ஆதிமுதல் எல்லாவற்றையும் திட்டமாய் விசாரித்தறிந்த நானும்" என்று எழுதுகிறார், அதாவது திட்டமாய் விசாரித்து அறிந்துக்கொண்டு தான் இவைகளை எழுதுகிறேன் என்று கூறுகிறார். எனவே, அருமை பீஜே அவர்களே இயேசுவை கண்ணார கண்டு அவரோடு இருந்த சீடர்கள் மற்றும் மற்றவர்களின் நேரடி சாட்சிகளை விசாரித்து தான் லூக்கா எழுதினார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

யோவான்:

நான்காவதாக, யோவான் என்ற சீடர் எழுதிய நற்செய்தி நூல். இவர் இயேசுவிற்கு மிகவும் பிரியாமான சீடர், மற்றும் முக்கியமான சீடர்களில் ஒருவர். இவர் இயேசுவின் மார்ப்பில் சாய்ந்துக்கொண்டு இருக்கும் அளவிற்கு இயேசுவிற்கு அன்பான சீடராக இருந்தார். இவர் ஒரு நற்செய்தி நூலையும், மூன்று கடிதங்களையும் எழுதியுள்ளார். மட்டுமல்ல, புதிய ஏற்பாட்டின் முத்திரையாகிய "வெளிப்படுத்தின விசேஷம்" என்ற கடைசி புத்தகத்தை எழுதும் படி இயேசுவிடமிருந்து வெளிப்ப்பாட்டைப் பெற்றவர்.

இந்த பிரியமான சீடன், இயேசுப் பற்றி கூற தனக்கு இருக்கும் உரிமை மற்றும் அதிகாரத்தை சாட்சியாக கூறும்போது கீழ்கண்ட விதமாக கூறுகிறார்:

ஆதிமுதல் இருந்ததும், நாங்கள் கேட்டதும், எங்கள் கண்களினாலே கண்டதும், நாங்கள் நோக்கிப்பார்த்ததும், எங்கள் கைகளினாலே தொட்டதுமாயிருக்கிற ஜீவவார்த்தையைக் குறித்து உங்களுக்கு அறிவிக்கிறோம் (1 யோவான் 1:1)

இந்த சீடரின் மேற்கண்ட வார்த்தைகளை சிறிது கவனித்துப் பாருங்கள். "ஆதி முதல் இருந்ததும்" என்று அவர் சொல்வதிலிருந்து, இயேசுவின் தெய்வீகத்தன்மையை குறிப்பிடுகிறார். மேலும், " நாங்கள் கேட்டதும், எங்கள் கண்களினாலே கண்டதும், நாங்கள் நோக்கிப்பார்த்ததும், எங்கள் கைகளினாலே தொட்டதுமாயிருக்கிற" என்று சொல்வதிலிருந்து தன்னுடைய ஐம்புலங்களினால் இயேசுவை அறிந்ததாக கூறுகிறார். அதாவது அவரை தொட்டு பார்த்துஇருக்கிறோம், அவரின் பேச்சை கேட்டு இருக்கிறோம், அவரை கண்டு இருக்கிறோம் என்றுச் சொல்கிறார். ஆகையால், இயேசுவின் ஊழிய வாழ்க்கையை மிகவும் அருகில் இருந்து கவனித்த சீடர்களின் சாட்சியை நாம் பைபிளில் காணமுடியும்.

ஒரு முக்கியமான விவரம் என்னவென்றால், கிட்டத்தட்ட முதல் நூற்றாண்டின் கடைசிவரை இந்த சீடர் உயிர் வாழ்ந்துள்ளார். மற்ற சீடர்கள் கொல்லப்பட்டு மரித்தார்கள். இந்த சீடரின் காலத்திற்கு முன்பே புதிய ஏற்பாட்டின் எல்லா நற்செய்தி நூல்களும், இதர கடிதங்களும் எழுதி முடித்தாகிவிட்டது. கடைசியாக, இவருக்கு "வெளிப்படுத்தின விசேஷம்" என்ற உலகத்தின் கடைசி கால நிகழ்வுகள் வெளிப்படுத்தப்பட்டது. ஆக, இந்த சீடர் தன் காலத்தில் எழுதப்பட்ட நற்செய்தி நூல்கள், கடிதங்கள் போன்ற எல்லா புதிய ஏற்பாட்டு நூல்களையும் காண வாய்ப்பு உள்ளது. மட்டுமல்ல், எருசலேமின் தலைமை சபையின் தலைவர்களில் பேதுருவோடு சேர்ந்து இவரும் ஒருவராக செயல்பட்டுள்ளார். ஆக, புதிய ஏற்பாட்டு நுல்களின் நம்பகத்தன்மையை சோதிக்கும் வாய்ப்பு இவருக்கு கிட்டி இருக்கும்.

பேதுரு:

மேலும் இயேசு தன் சபைக்கு தலைவராக நியமித்த சீடர்களில் முக்கியமானவராகிய இருந்த "பேதுரு" என்ற சீடர், மாற்கு சுவிசேஷம் எழுதிய மாற்கு என்பவரின் ஆன்மீக குருவாக இருந்தார். மற்றும், இரண்டு முக்கியமான கடிதங்களை ஆரம்பகால சபைகளுக்கு எழுதியுள்ளார் (1 பேதுரு, 2 பேதுரு). இயேசுவின் தெய்வீகத்தன்மைப் பற்றி பேச தனக்கு அதிகாரம் உள்ளது, மற்றும் அதற்கு தாம் எப்படி தகுதியுள்ளவர் என்பதை கீழ்கண்ட வரிகளில் கூறுகிறார்:

நாங்கள் தந்திரமான கட்டுக்கதைகளைப் பின்பற்றினவர்களாக அல்ல, அவருடைய மகத்துவத்தைக் கண்ணாரக் கண்டவர்களாகவே நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வல்லமையையும் வருகையையும் உங்களுக்கு அறிவித்தோம். இவர் என்னுடைய நேசகுமாரன், இவரிடத்தில் பிரியமாயிருக்கிறேன் என்று சொல்லுகிற சத்தம் உன்னதமான மகிமையிலிருந்து அவருக்கு உண்டாகி, பிதாவாகிய தேவனால் அவர் கனத்தையும் மகிமையையும் பெற்றபோது, அவரோடேகூட நாங்கள் பரிசுத்த பருவதத்திலிருக்கையில், வானத்திலிருந்து பிறந்த அந்தச் சத்தத்தைக்கேட்டோம் (2 பேதுரு 1:16-18)

2008ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பீஜே அவர்களின் இயேசு இறைமகனா என்ற புத்தகத்திற்கு, பேதுரு பற்றி பீஜே அவர்கள் கொடுத்த விமர்சனத்திற்கு நான் மறுப்பை எழுதினேன், அதனை இங்கு படிக்கவும்: Answering PJ: இயேசு நியமித்த நேர்த்திமிகு தலைவர் "பேதுரு". எனக்கு தெரிந்தவரை இதுவரையில் பிஜே அவர்கள் இந்த மறுப்பிற்கு பதில் அளிக்கவில்லை.

யாக்கோபு:

மேலும் இயேசுவின் சகோதரர் "யாக்கோபு" என்பவரும் ஒரு கடிதத்தை எழுதியுள்ளார். இவர் ஆரம்ப காலத்தில் இயேசுவின் மீது நம்பிக்கை வைக்கவில்லை, இயேசு மரித்து உயிரோடு எழுந்த பிறகு இவரும் நம்பிக்கையாளர் ஆனார், பிறகு எருசலேம் சபையின் முக்கிய தலைவர்களாகிய பேதுரு யோவான் போன்றவர்களுடன் சேர்ந்து இவரும் ஊழியம் செய்தவர், இவர்கள் அனைவரும் ஆதிகால திருச்சபையின் "தூண்கள்" என்று எண்ணப்பட்டனர் (கலாத்தியர் 2:9). இந்த யாக்கோபும் இயேசுவைக் கண்டவர் தான் என்பதை பீஜே அவர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். 

பவுல்:

இன்னும் நான் பவுலைக் குறித்து சொல்லவேண்டியதில்லை, இயேசுவே சவுலை சந்தித்தார், கிறிஸ்தவ சபையின் முதல் எதிரியை முதல் நண்பனாக இயேசு மாற்றிவிட்டார்.

"இயேசுவிற்கு பிறகு வந்தவர்களால்" என்ற வரிகளின் மூலமாக, புதிய ஏற்பாட்டில் இயேசுவிற்கு நெருங்கியவர்களுக்கு பங்கில்லை, அவரின் சீடர்களுக்கு பங்கில்லை, அவரை கண்டு பேசி அவரோடு வாழ்ந்தவருக்கு பங்கில்லை என்ற தோரணையில் நீங்கள் எழுத ஆரம்பித்தால் அதனை கிறிஸ்தவர்கள் தெரிந்துக்கொள்ளாமல் போய்விடுவார்கள் என்று நினைத்தீர்களா பீஜே அவர்களே! உங்கள் எண்ணங்களை மாற்றிக் கொள்ளுங்கள்.

முடிவுரை: முஹம்மதுவின் மனைவியாகிய ஆயிஷா அவர்கள், மற்றும் அவரின் தோழர்களாகிய அபூ பக்கர், உமர், உஸ்மான், அலி போன்றவர்களை நீங்கள் எந்த காலத்திற்கு சம்மந்தப்பட்டவர்கள் என்று கருதுவீர்கள் பீஜே அவர்களே? இவர்களை நாம் "முஹம்மதுவிற்கு பின்பு வந்தவர்கள்" என்ற பட்டியலில் சேர்க்கலாமா? அல்லது முஹம்மதுவை கண்டவர்கள், அவரின் வார்த்தைகளை கேட்டவர்கள், அவரை தொட்டுப்பார்த்தவர்கள் என்ற பட்டியலில் சேர்க்கலாமா? இவர்கள் "முஹம்மதுவிற்கு பின்பு வந்தவர்கள்" என்று கூறினால், இப்படி கூறுபவர்களை என்னவென்று நீங்கள் அழைப்பீர்கள்? அதே போலத்தான், இயேசுவை கண்டும், அவரது பேச்சுக்களை கேட்டும், அவரை தொட்டுப்பார்த்தும், அவரோடு பேசியும் இருந்த சீடர்களை "இயேசுவிற்கு பிறகு வந்தவர்கள்" என்றுச் சொல்வது அறியாமையாகும். அந்த அறியாமையில் இருக்கும் உங்களுக்கு தெளிவை உண்டாக்கவே இந்த மறுப்புக்கள் எழுதப்படுகின்றன. ஒருவேளை இது உங்கள் அறியாமையாக இருக்காது, வேண்டுமென்றே குற்றம் பிடிக்கவேண்டும் என்பதற்காக இட்டுக்கட்டும் உங்கள் வஞ்சகமாக இருக்கலாம். உங்கள் நிலை எதுவாக இருந்தாலும் சரி, அதற்கு சரியான மறுப்புக்களை அளிப்பது கிறிஸ்தவர்களின் கடமை.

பீஜே அவர்களுக்கு ஒரு சவால்: அல்லாஹ்வின் வேதம் என்று நீங்கள் கருதும் குர்‍ஆனை மட்டும் வைத்துக்கொண்டு, முஹம்மதுவின் தோழர்கள் மற்றும் அவரை அறிந்த இதர மக்கள் அறிவித்த ஹதீஸ்கள், சரித்திர நூல்கள் போன்றவற்றை அப்புறப்படுத்தி "இஸ்லாம் என்றால் என்ன? அதன் தூண்கள் என்ன? ஒரு நாளுக்கு எத்தனை முறை தொழவேண்டும்? இன்னும் இதர இஸ்லாமிய கடமைகள், சட்டங்கள்" போன்வற்றை உங்களால் விளக்கமுடியுமா?

ஒரு சராசரி மனிதன் இஸ்லாமியனாக மாறி ஒரு முஸ்லிமாக வாழுவதற்கு தேவையான விவரங்கள் குர்‍ஆனில் எத்தனை சதவிகிதம் உள்ளது என்று உங்களால் சொல்லமுடியுமா?

குர்‍ஆனை மட்டும் வைத்துக்கொண்டு இஸ்லாமை நாம் 50 சதவிகிதமாவது புரிந்துக்கொள்ளமுடியுமா? இப்படிப்பட்ட‌ ஒரு அறைகுறை வேதமாகிய குர்‍ஆனை வைத்துக்கொண்டு, நீங்கள் மற்றவர்களின் வேதத்தைப் பற்றி பேச வந்துள்ளீர்கள். அந்த அறைகுறை வேதத்தையும், அரபியிலேயே படித்தால் நான் நன்மை என்ற மூடநம்பிக்கையையும் மக்களின் மனதில் பதிய வைத்துக்கொண்டு வருகிறீர்கள்.

நான் ஏன் இப்படி கேள்விகளை உங்கள் முன்வைக்கிறேன் என்றால், ஹதீஸ்கள், சீராக்கள், சரித்திர நூல்கள் இஸ்லாமுக்கு இல்லையென்றால், இஸ்லாம் ஒரு சூன்யம், குர்‍ஆன் ஒரு மரித்த சடலத்திற்கு சமம், ஹதீஸ்கள் மற்றும் இதர நூல்கள் அந்த மரித்த சடலத்திற்கு உயிர் போன்றது என்பதை விளக்கவே கேள்விகளை கேட்கிறேன்.

எனவே, முஸ்லிம்களாகிய நீங்கள் சொல்கிறீர்கள் என்பதினால், இயேசுவின் நேரடி சீடர்கள் சொல்வதை கிறிஸ்தவர்கள் விட்டுவிடமுடியாது? கிறிஸ்தவ ஆரம்ப கால சரித்திரத்தை மறுக்கமுடியாது. ஒரு கள்ளத் தீர்க்கதரிசியாகிய முஹம்மது சொல்வதைக் கேட்டு வாழும் இஸ்லாமியர்களாகிய உங்களைப் போன்றவர்கள் சொல்வதைக் கேட்டு, இயேசுவின் அப்போஸ்தலர்கள் சொல்வதை கிறிஸ்தவர்கள் விட்டுவிடமுடியாது. 

தமிழ் இஸ்லாமிய அறிஞர்களின் வஞ்சகமான வார்த்தைகளையும், பொய்களையும் தமிழ் கிறிஸ்தவர்கள் கவனித்துக்கொண்டு இருக்கிறார்கள், அவைகளை ஆராய்ந்துக்கொண்டு இருக்கிறார்கள். இனி உங்கள் வஞ்சகத்தில் யாரும் விழ தயாராக இல்லை.

"பைபிள் ஓர் அறிமுகம்" என்ற தலைப்பில் நீங்கள் எழுதிய இதர வரிகளுக்கு அடுத்த மறுப்பில் பதிலைக் காண்போம்.

  http://isakoran.blogspot.com/2011/11/answering-pj-2.html

November 2, 2011

ஜியா/அப்சருக்கு பதில்: உஸ்மானின் முழு குர்‍ஆன் உயிரோடு உள்ளதா?

ஜியா/அப்சருக்கு பதில்: உஸ்மானின் முழு குர்‍ஆன் உயிரோடு உள்ளதா?

("குர்‍ஆன் மூலத்திற்கு" மூலம் முழுவதுமாக‌ எந்த மூலையில் முடங்கி கிடக்கிறது?)

முன்னுரை : இஸ்லாமியர்களின் பேச்சு நம் தமிழ் அரசியல் வாதிகளின் பேச்சையே மிஞ்சிவிடும். அரசியல்வாதி சொல்லும் பொய்களே வெட்கமடையும் அளவிற்கு பொய்களை வீசுவார்கள் இஸ்லாமிய அறிஞர்கள். (குறிப்பு: இதில் சாதாரண சராசரி முஸ்லிமை இழுக்கவேண்டாம், பாவம் அவனுக்கு என்ன தெரியும்? அவனுக்கு தெரிந்ததெல்லாம் ஒன்று தான் அது "Allah knows Best" என்பதாகும், ஆகையால், இந்த கட்டுரையில் நாம் படிக்கப்போகும் வரிகள் அனைத்திற்கும் சொந்தக்காரர்கள் இஸ்லாமிய அறிஞர்கள் என்பதை கவனத்தில் கொள்ளவும்.)

குர்‍ஆன் பற்றி பெருமையாக நாலு வார்த்தை பேசுங்கள் என்று ஒரு இஸ்லாமியருக்கு சொல்லிவிட்டால் போதும், அல்லாஹ்விற்கே ஆச்சரியத்தை உண்டாக்கும் விதத்தில் இஸ்லாமிய அறிஞர்கள் பேசித் தள்ளுவார்கள். அல்லாஹ்வே ஆச்சரியத்தோடு, "அடப்பாவமே, இதுவரை எனக்கே தெரியாமல் போய்விட்டதே இவ்வளவு விஷயங்கள்" என்று கூறுவார். இப்படிப்பட்டவரில் ஒருவர் தான் பீஜே அவர்கள். அவர் குர்‍ஆன் மூலப்பிரதிகள் பற்றி தம்முடைய குர்‍ஆன் தமிழாக்கத்தில் எழுதியவைகளை மேற்கோள் காட்டி, நான் ஒரு கட்டுரையை எழுதியிருந்தேன் (உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் மொழிப்பெயர்த்து இருந்தேன்), அதற்கு மறுப்பு எழுதுவதாக "சகோதரர் ஜியா மற்றும் அப்சர்" அவர்கள் ஒரு சிறிய கட்டுரையை எழுதினார்கள்.

அந்த கட்டுரையில் அவர்கள் கொடுத்து இருந்த விவரங்களைக் கண்டு எனக்கு ஆச்சரியமாக ஆகிவிட்டது. அதாவது பிபிசியில் (இணைய செய்தித்தாள்) ஒரு கிறிஸ்தவர் எனக்கு பதில் ஏற்கனவே எழுதிவிட்டாராம். மற்றும் எனக்கே தெரியாமல் நான் உண்மையை ஒப்புக்கொண்டேனாம். இப்படியெல்லாம் அவ்விருவர்கள் எழுதியுள்ளார்கள்.

இஸ்லாமியர்களின் ஒவ்வொரு வார்த்தையின் பின்னணியும், ஒவ்வொரு வரியின் உள்நோக்கமும் எனக்கு நன்றாகத் தெரியும். அவர்கள் எழுதியதை முதலில் படிப்பவர்கள், ஆஹா எவ்வளவு அழகாக பதில் கொடுக்கிறார்கள் என்று எண்ணிக்கொள்வார்கள், (இப்படி எண்ணம் கொள்பவர்களில் 99% சதவிகித மக்கள் இஸ்லாமியர்களாகவே இருப்பார்கள் என்பது வேறு விஷயம்), ஆனால், ஒவ்வொரு வரியாக நாம் படித்து பதில் கொடுக்க ஆரம்பித்தால், அவர்களின் அறியாமை அல்லது வஞ்சக வலை வெளியே தெரியவரும்.

சரி, இதுவரை இஸ்லாமியர்கள் எழுதியவைகளுக்கு பதிலை அளித்துக்கொண்டு இருந்த என்னை, ஒரு பிபிசியின் செய்தியை படித்து இஸ்லாமியர்களுக்கு விளக்கவேண்டிய வேலையையும் நமது அன்பு சகோதரர்கள் திரு ஜியா அவர்களும், சகோதரர் அப்சர் அவர்களும் அளித்துள்ளார்கள்.

முன்னுரையை இதோடு நிறுத்திக்கொண்டு நாம் அவர்களின் வரிகளை அலச செல்வோமா?

என் முதல் கட்டுரையில் நான் மேற்கோள் காட்டிய பீஜே அவர்களின் வரிகளை மறுபடியும் படிப்பது நல்லது.

பீஜே அவர்கள் தம்முடைய குர்‍ஆன் தமிழாக்கத்தில் "பிரதிகள் எடுத்தல்" என்ற தலைப்பின் கீழ், பக்கம் 48ல் இரண்டு மூல குர்‍ஆன் பற்றிய விவரங்களைத் தருகிறார்.

பீஜே குர்‍ஆன் தமிழாக்கம், பக்கம் 48 :

உஸ்மான் (ரலி) அவர்களின் இந்த மூலப் பிரதியின் அடிப்படையில் தான் உலகம் முழுவதும் பல நூற்றாண்டுகளாக குர்‍ஆன் அச்சடிக்கப்பட்டும், எழுதப்பட்டும், பரப்பப்பட்டும், வினியோகிக்கப்பட்டும் வருகின்றது.

உஸ்மான் (ரலி) அவர்கள் பல பகுதிகளுக்கு அனுப்பிய மூலப் பிரதிகளில் இரண்டு பிரதிகள் இன்றும் கூட பாதுகாக்கப்பட்டு வருகின்றன. ஒன்று துருக்கி நாட்டின் "இஸ்தான்புல்" நகரத்தில் உள்ள அருங்காட்சி யகத்திலும், இன்னொன்று ரஷியாவின் "தாஷ்கண்ட் " நகரத்தில் உள்ள அருங்காட்சியகத்திலும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

அவர்கள் பரப்பிய அந்தப் பிரதிகள் தான் இன்று உலகத்தில் உள்ள குர்‍ஆன் பிரதிகள் அனைத்திற்கும் மூலம் எனலாம். (பீஜே குர்‍ஆன் தமிழாக்கம், பக்கம் 48)

இப்போது சகோதரர் ஜியா/அப்சர் அவர்களின் வரிகளுக்கு பதில்களை காண்போம்:

இவர்கள் தங்கள் கட்டுரையில் மூன்று குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்கள்:

1) இவர்களின் பைபிள் சம்மந்தப்பட்ட கட்டுரைகளுக்கு நான் பதில் அளிப்பதில்லையாம்.

2) ஒரு பிபிசி செய்தியின் மூலமாக ஒரு கிறிஸ்தவரே எனக்கு பதிலை ஏற்கனவே கொடுத்துள்ளாராம்.

3) என் கட்டுரையில் நான் எனக்கே தெரியாமல் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளேனாம்.


இந்த மூன்று குற்றச்சாட்டுகளுக்கு நாம் பதிலை காண்போம். அந்த பிபிசி செய்தி பற்றிய அவர்களின் நம்பிக்கையும், அதற்கான பதிலையும் நீங்கள் படித்தால் சிரித்துவிடுவீர்கள், அதாவது எதை வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானலும், கொஞ்சம் கூட அடிப்படை ஆய்வு செய்யாமல் எழுதுவது, இஸ்லாமிய அறிஞர்களின் வழக்கமாக ஆகிவிட்டது, என்பதை அறிந்துக்கொள்வீர்கள்.


முதல் குற்றச்சாட்டு: இவர்களின் பைபிள் சம்மந்தப்பட்ட கட்டுரைகளுக்கு நான் பதில் அளிப்பதில்லையாம்.

சகோதரர்கள் ஜியா/அப்சர் எழுதியது:

திரு உமர் அவர்கள், "கலிFபா உஸ்மான் அவர்கள் காலத்தில் தொகுக்கப்பட்ட குர்ஆன் உலகில் உண்டா?" என்ற கட்டுரை வெளியிட்டிருந்தார். அதற்கு மறுப்பளிக்கும் விதமாக இந்த கட்டுரையை ஏக இறைவனின் உதவியை நாடியவர்களாக துவங்குகிறோம்.

Source

உமர்:

கட்டுரையின் மூலத் தொடுப்பை கொடுக்க பயந்து, குர்‍ஆனின் மூலத்தைப் பற்றி எழுதவந்துவிட்டீர்களா?

இஸ்லாமிய நண்பர்களாகிய ஜியா அவர்களே, மற்றும் அப்சர் அவர்களே, எந்த தளத்தில் என் கட்டுரையை படித்தீர்கள்? அதன் தொடுப்பு எங்கே? "அல்லாஹ்வின் திருப்பெயரால்..." என்று ஆரம்பித்து வஞ்சிக்க வந்துவிட்டீர்களா? நீங்கள் படித்த என் கட்டுரையை உங்கள் கட்டுரையை படிக்கும் வாசகர்கள் படிக்கவேண்டாமா? நீங்கள் மட்டும் படித்தால் போதுமா?

நீங்கள் உண்மையை மறைத்து, உங்களுக்கு சாதகமாக தோன்றும் ஒரு சில வரிகளை மட்டும் பதித்து பதில் தருவீர்கள் என்று எல்லாருக்கும் தெரியுமே. நீங்கள் நேர்மையானவர்கள் தானா? நீங்கள் ஐந்து வேளை தொழுகை புரியும் இஸ்லாமியர்களா? "ஆம், நாங்கள் அல்லாஹ்வின் அடியார்கள், நேர்மையானவர்கள் தான்" என்று கூறுவீர்களானால், ஏன் மூல தொடுப்பை மறைக்கிறீர்கள்? மூல தொடுப்பை கொடுக்க பயப்படுகிறீர்கள்? உங்கள் இஸ்லா‌ம் மீது உங்களுக்கு நம்பிக்கையில்லையா?

நானும் கடந்த சில ஆண்டுகளாக சொல்லிக்கொண்டு தான் இருக்கிறேன், ஆனால், ஒரு ரோஷமுள்ள நேர்மையான இஸ்லாமிய அறிஞரை காணவில்லை. இந்த தமிழ் பேசும் மக்களுக்கு வந்த கதியை பாருங்கய்யா?  இஸ்லாமியர்கள் சொல்வதை மற்றவர்கள் படிக்கவேண்டும், ஆனால், உண்மையை மட்டும் தெரிந்துக்கொள்ளக்கூடாது, இது தானே இவர்களின் எண்ணம், இஸ்லாமை வாழவைக்க வந்தவர்களின் எண்ணம்?

நீங்கள் என் கட்டுரைகளுக்கு பதில் என்றுச் சொல்லி எழுதும் போதெல்லாம், நீங்கள் இப்படி நேர்மையற்ற முறையில் நடந்துக்கொள்கின்ற போதெல்லாம், நான் இப்படி சில வரிகளை எழுதி, உங்களுக்கு இதன் பிறகாவது நேர்மையாக எழுத விருப்பம் வரும் என்று எதிர்ப்பார்த்து இவைகளை பதிக்கிறேன். பார்க்கலாம் இந்த முறையாவது ரோஷம் வருமா?

சகோதரர்கள் ஜியா/அப்சர் எழுதியது:

வாசகர்களே, திரு உமர் அவர்கள் இஸ்லாமியர்களுக்கு எதிராக அறிவித்த கருத்துகளை ஆராய்வதற்கு முன்னர், இஸ்லாமியர்கள் பைபிளின் நம்பகத்தன்மைக்கு எதிராக எழுப்பும் கேள்விகள்/கருத்துகளுக்கு இது வரையிலும் எந்த பதிலும் இல்லை என்பதை நினைவு படுத்திக்கொள்ள விரும்புகிறோம். இன்றுள்ள பைபிளின் மூல பிரதிகள் ஏசுவின் காலத்திற்கு எத்தனை நூற்றன்றுகள் கழித்து எழுதப்பட்டது? அப்படி எழுதப்பட்ட பைபிளுக்கும் இன்றுள்ள பைபிளுக்கும் எத்தனை பகுதிகள் மாறுபடுகின்றன, சேர்க்கப்பட்டுள்ளன, நீக்கப்பட்டுள்ளன? இதனை விவரிக்க திரு உமர் அவர்கள் முன்வருவாரா??

பார்க்க: பைபிள் முரண்பாடுகள்

உமர்:

பெரிய வலை வீசி நிறைய மீன்களை பிடிக்கனுமா? (அ) ஒரு தூண்டில் போட்டு காத்துக்கொண்டு இருக்கவேண்டுமா?

ஈஸா குர்‍ஆன் தளத்தில் இதுவரை 280க்கும் அதிகமான கட்டுரைகள் மறுப்புக்கள் பதிக்கப்பட்டுள்ளன. அதற்கெல்லாம் பதிலைச் சொல்லாமல், அவர்கள் கூறும் பைபிள் மீதான குற்றச்சாட்டுக்கு பதில் சொல்லச் சொல்கிறார்கள் சகோதரர் ஜியாவும் அப்சரும்.

என் நண்பர் ஒருவர் இப்படியாக கூறினார், "ஏன் நத்திலியை பிடிக்கிறாய், திமிங்கிலத்தை பிடிக்கலாம் அல்லவா?" என்றார், அது என்ன திமிங்கிலம்... நத்திலி என்று குழப்பமாக இருக்கிறதா?

திமிங்கிலமா நத்திலியா?

நம் தமிழ் நாட்டில் சில சிறிய மீன்கள், தங்கள் விஷயங்களை ஒரு பெரிய திமிங்கிலத்திலிருந்து பெருகின்றன, புரியவில்லையா? அதாவது பீஜே அவர்கள் எழுதிய "இயேசு இறைமகனா?", "இது தான் பைபிள்" போன்ற புத்தகங்களிலிருந்து தான் விவரங்களை எடுக்கின்றனர், அவைகளை பதிக்கின்றனர். எனவே, முதலாவது பீஜே அவர்களின் "இது தான் பைபிள்" மற்றும் அவரது இதர எழுத்துக்களுக்கு பதிலை கொடுத்தால், அதுவே மற்றவர்களுக்கும் பதிலாக அமையும்.

ஆகையால் தான், நான் உங்களின் மற்ற குற்றச்சாட்டுகளுக்கு பதில்களை எழுதுவதை தாமதப்ப‌டுத்தி, பீஜே அவர்களுக்கு பதில் அளிக்க முனைந்துள்ளேன். இப்போது சொல்லுங்க, திமிங்கிலத்தை வலை போட்டு பிடிப்பது நல்லதா, அல்லது நத்திலி மீனை ஒரு தூண்டில் போட்டு பிடிப்பது சிறந்ததா?

உண்மையிலேயே உங்களுக்கு உங்கள் கட்டுரையின் மீது நம்பிக்கை இருக்குமானால், எங்கள் கேள்விக்கு உலகில் எந்த கிறிஸ்தவரும் இதுவரை பதிலை கொடுக்கவில்லை என்ற நம்பிக்கை இருக்குமானால், உங்களுக்கு நான் ஆன்சரிங் இஸ்லாம் ஆங்கில தளத்தை (http://www.answering-islam.org/) அறிமுகப்படுத்துகிறேன். அதில் உலகத்தில் இருக்கும் பெரிய பெரிய திமிங்கிலத்தை வாயில் போட்டு, மென்று விழுங்கியிருக்கிறார்கள், ஆயிரக்கணக்கான கட்டுரைகள், செய்திகள் மறுப்புக்களை காணலாம். முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, என் கட்டுரைகளை நான் தயார் படுத்துகிறேன். உங்களுக்கு ஆங்கிலம் தெரிந்தால், அதில் சென்று படியுங்கள், உங்கள் கண்கள் தெளிவாக்கப்படும்.

நீங்களே சொல்லுங்க..பீஜே அவர்களின் புத்தகங்களுக்கு பதிலை அளிப்பது சரியா? அல்லது அந்த புத்தகங்களிலிருந்து சுட்டதை பதிக்கும் உங்களைப் போன்றவர்களுக்கு பதில் அளிப்பது சரியா? இருந்தாலும், உங்களையும் விடப்போவதில்லை... சுட்டபழத்திற்கும் பதில் கிடைக்கும், சுடாத பழத்திற்கும் (உங்கள் சொந்த தயாரிப்பிற்கும்!) பதில் கிடைக்கும். தற்போதைய பதில் உங்கள் சொந்த தயாரிப்பிற்கு கிடைக்கும் என்னுடைய பரிசு ஆகும்

ஆக, அதிகமாக சத்தம் போட்டது போதும், உருப்படியாக பதில் எழுதுவதை பாருங்க... 

இன்னும் இருக்கின்ற இரண்டு மாதங்களில் பீஜே அவர்களின் குறைந்தது 10 குற்றச்சாட்டுகளுக்காவது பதிலை அளிக்க நான் முடிவு செய்துள்ளேன்.

இப்போது இரண்டாவது குற்றச்சாட்டுக்குச் செல்வோம்::


இரண்டாம் குற்றச்சாட்டு: ஒரு பிபிசி செய்தியின் மூலமாக ஒரு கிறிஸ்தவரே எனக்கு பதிலை ஏற்கனவே கொடுத்துள்ளாராம்.

இஸ்லாமியர்களுக்கு பொதுவாக மதவிஷயங்களில் நகைச்சுவை உணர்வு குறைவு, ஆனால், அவர்கள் செய்வதெல்லாம் மற்றவர்களுக்கு நகைச்சுவையாகவே இருக்கும்.

பிபிசி என்ற இணைய செய்தித்தளத்தில் ஒரு கிறிஸ்தவரே எனக்கு ஏற்கனவே பதில் அளித்துள்ளாராம். இதற்கு ஒரு ஆதார செய்தியையும் இவர்கள் காட்டுகிறார்கள்.

இந்த வேடிக்கையை நிதானமாக படியுங்கள்.

சகோதரர்கள் ஜியா/அப்சர் எழுதியது:

இப்படி பைபிளை பற்றி வாய் திறக்க மறுக்கும் திரு உமர் அவர்கள் குரானை பற்றி அவதூறுகளை பரப்பி வருகிறார். இதற்கு பதிலளிக்கும் விதமாக திரு உமர் அவர்கள் முன் வைத்த கேள்விக்கு/ போலியான கருத்துக்கு கிறிஸ்தவர்களே பதிலளிக்கிறார்கள். BBC யை சேர்ந்த கிறிஸ்தவர் Ian MacWilliam வெளியிட்டது.

பார்க்க: கலிFபா உத்மான் அவர்கள் தொகுத்த குர்ஆன்

இதில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது "It was completed in the year 651, only 19 years after Muhammad's death. " முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இறந்து பத்தொன்பது ஆண்டுகளுக்குள் தொகுக்கப்பட்டதென்று.

மேலும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது, "Othman was murdered by a rebellious mob while he was reading his book. A dark stain on its pages is thought to be the caliph's blood ." அந்த குர்ஆன் மூல பிரதியில் இரத்த கரை போன்ற கரைகள் இருப்பதாகவும் அவை கலிFபா உத்மான் அவர்கள் கொல்லப்படும்போது ஏற்பட்ட கரையாக இருக்கலாம் என்று...

உமர்:

சகோதரர் ஜியா மற்றும் அப்சர் அவர்களின் கூற்றுப்படி, அவர்கள் காட்டிய பிபிசி செய்தியை/கட்டுரையை படித்தாலே போதுமாம், நான் கேட்ட கேள்விக்கு பதிலாக அமையுமாம்.

முதலாவது, நான் ஜியா/அப்சர் அவர்களிடம் கேட்கும் கேள்வி என்னவென்றால், "ஒரு ஆய்வுக் கட்டுரைக்கும், செய்தித்தாளில் வரும் ஒரு செய்திக்கும் இடையே இருக்கும் வித்தியாசம் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? " என்பதாகும்.

ஆய்விற்கும் செய்திக்கும் இடையே இருக்கும் அடிப்படை வித்தியாசம் பற்றிய அடிப்படை அறிவே இல்லாமல் எழுத வந்துவிட்டீர்கள், மட்டுமல்லாமல் என் நேரத்தையும் வீணடிக்கிறீர்களே, இது உங்களுக்கே நியாயமா தெரிகின்றதா?

இரண்டாவதாக, அந்த செய்திய வெளியிட்ட "Ian MacWilliam" என்பவர் "தான் ஒரு ஆய்வு செய்து கண்டுபிடித்த உண்மைகள் இவைகள்" என்றுச் சொல்லியுள்ளாரா? அல்லது பலரிடம் கேட்டு மேலோட்டமான செய்தியை கூறியுள்ளாரா? இதனை நான் இப்போது உங்களுக்கு விளக்குவேன்.

மூன்றாவதாக கேட்கவிரும்பும் கேள்வி: ஒழுங்காக உங்கள் இருவருக்கும் ஒரு பக்கம் இருக்கும் ஆங்கிலச் செய்தியை படித்து புரிந்துக்கொள்ள முடியுமா? என்பதாகும்.

ஏன் இப்படி கேட்கிறேன் என்று என் மீது யாரும் கோபம் கொள்ளவேண்டாம், மக்களை ஏமாற்ற இஸ்லாமிய அறிஞர்கள் எவ்வளவு பெரிய பொய்யையும் மறைத்து எழுதுவார்கள். கண்டுபிடிக்கப்பட்டால் வெட்கப்படவேண்டி வருமே என்ற உணர்வே அவர்களுக்கு இல்லை. "நாங்கள் கொடுக்கும் ஆங்கில தொடுப்பை யார் படித்து பார்க்கப்போகிறார்கள், யார் ஒவ்வொரு வரியையும் படித்து நமக்கு பதில் சொல்லப்போகிறார்கள்" என்ற "மிதமிஞ்சிய நம்பிக்கை" அவர்களை இவ்வளவு கீழ்தரமாக எழுதவும், நடக்கவும் வைக்கிறது.

சரி, அவர்களின் பிபிசி கட்டுரையை சிறிது அலசுவோமா?

பாவம் இஸ்லாமியர்கள், எது தங்களுக்கு சாதகமாக இருக்கும் என்று நினைக்கிறார்களோ, அதுவே அவர்களுக்கு தலைவலியாக மாறுகிறது...

அவர்கள் கொடுத்த பிபிசி கட்டுரையின் தொடுப்பு: http://news.bbc.co.uk/2/hi/asia-pacific/4581684.stm

அவர்கள் கொடுத்த கட்டுரையின் தலைப்பு: Tashkent's hidden Islamic relic

"தாஷ்கண்டில் மறைக்கப்பட்டிருக்கும்/ஒளித்துவைக்கப்பட்டிருக்கும் இஸ்லாமிய பழமை வாய்ந்த சின்னம்"

கட்டுரையின் தலைப்பைப் பார்த்தால், இஸ்லாமுக்கு சாதகமாக எழுதியதாக தெரியவில்லை, அதற்கு எதிராக எழுதியதாக தெரிகிறது, அதாவது இஸ்லாமுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும் ஒரு பழைய குர்‍ஆனை இப்படிப்பட்ட இடத்திலா அக்கரையில்லாமல் வைப்பது அல்லது மறைத்துவைப்பது என்பது போல, இக்கட்டுரை உள்ளது. ஆங்கிலம் தெரிந்தவர்கள் ஒருமுறை அந்த தொடுப்பை சொடுக்கி படியுங்களேன், பிளீஸ். இது உமரின் தாழ்வான வேண்டுகோள்.

சரி, அக்கட்டுரையின் முதல் வரியை பார்ப்போமா?

பிபிசி நிருபர்:

In an obscure corner of the Uzbek capital, Tashkent, lies one of Islam's most sacred relics - the world's oldest Koran.

ஜியா/அப்சர் அவர்களின் பிபிசி நிருபர் எழுதிய தலைப்பில் உள்ள ஒரு வார்த்தையை "Obscure" கவனிப்போம், அதன் பொருளை "http://www.lanka.info/dictionary/EnglishToSinhala.jsp" என்ற அகராதியிலிருந்து எடுத்தேன்.

உம‌ர்:

அதாவது உலகின் பழமை வாய்ந்த இஸ்லாமிய புனிதச் சின்னமாகிய குர்‍ஆன், ஒரு தெளிவற்ற, உலகம் அறியக்கூடாத இடத்தில், வைக்கப்பட்டுள்ளது. சுருக்கமாகச் சொன்னால், "ஒரு அதிமுக்கியமான ஒரு பொருளை முக்கியமற்ற இடத்தில் மறைக்கப்பட்டுள்ளது" என்பதாகும்.

சகோதரர் ஜியா மற்றும் அப்சர் அவர்களே, என்ன உங்க பிபிசி கிறிஸ்தவ நிருபர் சொல்வது உங்களுக்கு விளங்குதா?

சரி, போகட்டும், இந்த கட்டுரையில் அவர் கூறவருவதை அவர் ஆய்வு நடத்திச் சொல்கிறாரா? அல்லது செய்திகளை சேகரித்துச் சொல்கிறாரா? என்பதை பார்ப்போம்.

இந்த பிபிசி நிருபருக்கு யார் இந்த விவரங்களை கூறினார்கள் என்று பார்த்தால், அந்த பகுதியில் வசிக்கும் ஒரு பெரிய இஸ்லாமிய அறிஞரின் அலுவலகத்தில் வேலை செய்யும் ஒரு இளம் உதவியாளர்.

பிபிசி நிருபர்:

The Mufti of Uzbekistan, the country's highest religious leader, has his offices there, in the courtyard of an old madrassa.
. . . .
"There are approximately 20,000 books and 3000 manuscripts in this library," said Ikram Akhmedov, a young assistant in the mufti's office .

நான் என்ன சொல்லவருகிறேன் என்றால், ஒரு செய்தித்தாளில் வரும் செய்தியை வைத்துக்கொண்டு, ஏதோ பெரிய ஆய்வு செய்து அனேக ஆண்டுகள் கஷ்டப்பட்டு கண்டுபிடிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரையை போல, பாசாங்கு செய்யும் ஜியா அப்சர் போன்றவர்களின் ஆய்வை என்னவென்றுச் சொல்ல.

பிபிசி நிருபர்:

Sacred verses

The Othman Koran was compiled in Medina by Othman, the third caliph or Muslim leader.

Before him, the sacred verses which Muslims believe God gave to Muhammad were memorised, or written on pieces of wood or camel bone.

உமர்:

மேலே உள்ள வரிகளில் " Before him, the sacred verses which Muslims believe God gave to Muhammad " என்பதை கவனிக்கவும். அதாவது செய்திகளைச் சொல்லும்போது, முக்கியமாக மதங்கள் பற்றிய செய்திகளைச் சொல்லும்போது, "இஸ்லாமியர்களின் நம்பிக்கையின் படி (Muslims believe) " என்று எழுதினால், அதன் அர்த்தம் என்ன? அதை எழுதுபவருக்கு அதன் மேல் நம்பிக்கை இல்லை என்று அர்த்தம் அல்லது அதைப் பற்றி அவருக்கு சரியாக தெரியாது, ஆனால், இஸ்லாமியர்களின் நம்பிக்கை அப்படி உள்ளது என்று நாசுக்காக சொல்லி முடித்துவிடுவார்கள்.

அய்யா ஜியா மற்றும் அப்சர் அவர்களே, உங்கள் நிருபர் சொல்கிறார் "அல்லாஹ் தம்முடைய வசனங்களை இறக்கியது பற்றி அவர் எழுதியது, இஸ்லாமியர்களின் நம்பிக்கையின்படியாம், தம்முடைய நம்பிக்கையின்படி இல்லையாம் ", இப்போதாவது தெரிகின்றதா?

"முஹம்மதுவிற்கு வசனங்கள் இறைவனிடமிருந்து வந்தது என்று இஸ்லாமியர்கள் நம்புகிறார்களாம்".

அடுத்ததாக, நம் சகோதரர்கள் மேற்கோள் காட்டிய வரிகளைக் காண்போம், ஆனால்,அவர்கள் வேண்டுமென்றே காட்ட விரும்பாத வரிகளையும் பாருங்கள்.

பிபிசி நிருபர்

To prevent disputes about which verses should be considered divinely inspired, Othman had this definitive version compiled. It was completed in the year 651, only 19 years after Muhammad's death.

பிபிசி நிருபர் சொல்கிறார், "எந்த வசனங்கள் இறைவனின் வசனங்கள், எவைகள் இறைவன் இறக்காத வசனங்கள் என்ற சண்டையை நிறுத்த, குழப்பத்தை தீர்க்க உஸ்மான், ஒரு பிரதியை உண்டாக்கினாராம்"..இந்த வரிகளை நம் இஸ்லாமியர்கள் நமக்கு காட்ட மறந்துவிட்டார்கள் போலும்.

ஆக, எது சுட்ட பழம் எது சுடாத பழம் (இறைவசனம், இறைவசனம் இல்லை) என்ற சண்டையை தீர்க்க உஸ்மான் ஒரு பிரதியை உருவாக்கினார் என்பதை கூறுகிறார் நிருபர்.

இந்த நிருபர், அந்த வாலிய உதவியாளர் சொன்னதைக் கேட்டு அப்படியே எழுதியுள்ளார். பல ஆண்டு கால ஆய்வை மேற்கொண்டு பிறகு தன் முடிவைச் சொல்லவில்லை. "நீ சொல்லும் விவரத்தை நான் நம்பமாட்டேன், நான் ஆய்வு நடத்தி, பிறகு தான் முடிவு செய்வேன், அது உஸ்மான் குர்‍ஆனா இல்லையா?" என்று அவர் கூறியிருந்தால். இந்த செய்தி உங்கள் கைக்கு வந்திருக்காது, அவ்வளவு ஏன், அவர் அந்த நாட்டிலிருந்து இனி செய்திகள் சேகரிப்பது ஒரு முடிவிற்கு வந்திருக்கும்.

பிபிசி நிருபர்:

About one-third of the original survives - about 250 pages - a huge volume written in a bold Arabic script.

"The Koran was written on deerskin," said Mr Akhmedov. "It was written in Hejaz in Saudi Arabia, so the script is Hejazi, similar to Kufic script."

உம‌ர்:

என்னுடைய வேலையை சுலபமாக்குவதே இஸ்லாமியர்களுக்கு ஒரு வேலையாக போச்சு.

என்னுடைய அடுத்த கட்டுரை "பீஜே அவர்கள் கூறுவது போல, இந்த பழமை வாய்ந்த குர்‍ஆனிலிருந்து பிரதி எடுத்து, அவைகளை முஸ்லீம்களின் கையில் கொடுத்தால், அதில் 114 அத்தியாயங்கள் இருக்காது"... என்பது பற்றியது தான்...

இந்த விஷயத்தை இப்போதே சொல்லும் படி ஜியா/அப்சர் எனக்கு ஒரு சந்தர்ப்பத்தை உருவாக்கிவிட்டார்கள். அதாவது, உங்கள் பிபிசி நிருபர் கூறியது படி, மூன்றில் ஒரு பாகம் குர்‍ஆன் தான் அந்த அருங்காட்சியகத்தில்  குர்‍ஆன் பிரதியில் உள்ளதாம், முழு குர்‍ஆன் இல்லையாம்.

இப்போது உங்களுக்கு என் முந்தைய கட்டுரையின் தலைப்பை ஒருமுறை மறு பதிவு செய்கிறேன்:

பீஜேவிற்கு கேள்வி: உஸ்மான் காலத்து குர்‍ஆன் இன்று உலகில் உண்டா?

பழமைவாய்ந்த "குர்‍ஆனின் முழு கையெழுத்து" பிரதி ஹிஜ்ரி 200 அல்லது கி.பி. 800 க்கு சம்மந்தப்பட்டது

Koran: Earliest complete manuscript 200 AH or 800AD!

இந்த தலைப்பில் "குர்‍ஆனின் முழு கையெழுத்துப் பிரதி" என்ற வார்த்தைகளை பார்க்கவும். இதில் முக்கியமாக "முழு (Complete) " என்ற வார்த்தையை கவனிக்கவும்.

அடுத்த கட்டுரையில் "எத்தனை அதிகாரங்கள் கையெழுத்துப் பிரதியில்" இருக்கிறது என்பது பற்றி நான் விளக்குகிறேன். மற்றும் அந்த பிரதி எந்த எழுத்துவடிவில் உள்ளது என்பதை இன்னும் விவரமாக விளக்குவேன்.

பிபிசி நிருபர்:

It is said that Caliph Othman made five copies of the original Koran. A partial Koran now in the Topkapi Palace in Istanbul is said to be another of these original copies.

உமர்:

செய்திக்கும் ஆய்விற்கும் வித்தையாசத்தை கொடுக்கும் வார்த்தைகளை நான் உங்கள் முன் வைக்கிறேன். நன்றாக பாருங்கள் "It is said", "is said to be"என்ற வார்த்தைகள் வந்துள்ளது. இதையே ஒருவர் ஆய்வு செய்து சொல்லியிருந்தால், அதிகாரபூர்வமாக கூறுவார். ஆனால், இந்த செய்தியில் "கூறப்பட்டது, சொல்லப்பட்டது" என்று கூறுகிறார். இதை வேறுவிதமாக சொல்லவேண்டுமென்றால் "இஸ்லாமியர்களின் நம்பிக்கையின்படி (என்னுடைய ஆய்வின் படி அல்ல)" என்று சொல்லவேண்டும்.

ஆக, ஜியா மற்றும் அப்சர் தொடர்ந்து படித்துக்கொண்டு இருக்கிறீர்களா அல்லது ஏற்கனவே இந்த என் கட்டுரையை படிப்பதை நிறுத்திவிட்டு சென்றுவிட்டீர்களா?

ஆனால், நீங்கள் காட்டிய தொடுப்பிலிருந்து விவரங்களை கொடுப்பதை நான் இன்னும் முடிக்கவில்லை.

இரத்தக்கறை பற்றி என்ன சொல்கிறார் உங்கள் நிருபர் என்பதை பாருங்கள்:

பிபிசி நிருபர்:

Historical text

Othman was murdered by a rebellious mob while he was reading his book. A dark stain on its pages is thought to be the caliph's blood.

அந்த இரத்தகறை "காலிபாவின் இரத்தகறையாக இருக்கும் என்று எண்ணுகின்றார்களாம்".. யார் இப்படி எண்ணப்போகிறார்கள்.. உங்களைப்போன்ற இஸ்லாமியர்கள் தான்...

இதனை அவர் " A dark stain on its pages is thought to be the caliph's blood " என்ற வார்த்தைகளோடு சொல்கிறார், இதில் "is thought to be" என்பது மிகவும் முக்கியமான விவரமாகும்.

இன்னும் சிறிது கொஞ்சம் கூர்ந்து படித்தால், அந்த நிருபர் சொல்லவருவது என்ன தெரியுமா? அந்த "A dark stain" என்பது காலிபாவின் இரத்தமாக இருக்கலாம் என்று மற்றவர்கள் எண்ணுகிறார்களாம். அவர் ஆய்வு செய்து இது இரத்தம் தான் என்றுச் சொல்லவில்லை, அந்த கருப்பு நிறத்தில் இருக்கும் அந்த வண்ணம் இரத்தமாக இருக்கலாம் என்று மற்றவர்கள் எண்ணுகின்றார்கள் என்று கூறுகிறார்.

நீங்கள் மேற்கோள் காட்டிய பிபிசி கட்டுரையை இதோடு முடித்துக்கொள்கிறேன்.

ஆனால், தீபாவளி போனஸ்ஸாக, சாரி பக்ரீத் போனஸ்ஸாக, ஒரு சில செய்திகளை அதே பிபிசி செய்தி தளத்திலிருந்து மேற்கோள் காட்டுகிறேன். இதனை நான் சொல்வதற்கு காரணம் என்னவென்றால், பொதுவாக செய்தித்தாளில் ஒரு செய்தியாக வரும் விவரங்களை "பட்டும் படாமலுமாக வெளியிடுவார்கள்", அதாவது "இஸ்லாமியர்களின் நம்பிக்கையின் படி", "கிறிஸ்தவர்களின் நம்பிக்கையின் படி" என்று பலவாறு கூறி நழுவி விடுவார்கள். அதே செய்தித்தாளில், ஒரு ஆய்வு செய்த ஆராய்ச்சியாளரின் கட்டுரை வெளிவருமானால், சிறிது சிந்தித்துப் பார்க்கலாம். பொதுவாக கூறப்படும் செய்திகளை நாம் ஆய்வு செய்து தான் ஏற்கவேண்டும். அதை ஒரு உண்மையாக நினைத்து, சத்தியத்தை மறைத்து இஸ்லாமை காப்பாற்றவேண்டும் என்ற உங்கள் எண்ணம் சரியானது அல்ல.

உண்மையாக ஆய்வு செய்து வெளியிடப்படும் அனேக ஆய்வுகள், புத்தகங்கள் உள்ளன. அவைகளை படித்து நாமும் ஆய்வு செய்து எழுதுவதை விட்டுவிட்டு, "இதோ நாங்களும் மறுப்பை தருகிறோம்" என்று மார்பு தட்டிக்கொண்டு வருவது சரியானது அல்ல.

சில உதாரணங்கள்: செய்திகளின் யுக்தி:

இஸ்லாமிய முகப்புப்பக்கத்தில் "Muslims believe" என்ற சொற்றொடரை பார்க்கவும்:

Home page : http://www.bbc.co.uk/religion/religions/islam/

Muslims believe that there is only one God. The Arabic word for God is Allah.

ஓ பிபிசி செய்தித்தாளில், ஒரே ஒரு இறைவன் அவன் அல்லாஹ் என்று கூறியுள்ளார்கள் பார்த்தீர்களா என்று பெருமைப்பட்டுக்கொண்டால், எல்லாரும் உங்களை கேவலமாக பார்ப்பார்கள்.

குர்‍ஆன் அறிமுகம் பக்கத்தில் " Muslims believe that the text we have today was established shortly after the death of the Prophet by the Caliph Uthman " என்ற சொற்றொடர்களை கவனிக்கவும்:

Quran Introduction: http://www.bbc.co.uk/religion/religions/islam/texts/quran_1.shtml

Some Qur'anic fragments have been dated as far back as the eighth, and possibly even the seventh, century. The oldest existing copy of the full text is from the ninth century.

Although early variants of the Qur'an are known to have existed, Muslims believe that the text we have today was established shortly after the death of the Prophet by the Caliph Uthman.

இவைகளே போதுமென்று நினைக்கிறேன்.. இதுக்குமேலே நீங்க தாங்க மாட்டீங்க. அடுத்த குற்றச்சாட்டிற்கு செல்வோமா?


முன்றாம் குற்றச்சாட்டு: என் கட்டுரையில் நான் எனக்கே தெரியாமல் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளேனாம்.

முழுவதுமாக படித்து புரிந்துக்கொண்டு மறுப்பு எழுதும் பழக்கம் நம்முடைய இஸ்லாமிய சகோதரர்களுக்கு இல்லை என்பதை அவர்கள் சரியாக நிருபித்து இருக்கிறார்கள். இப்போது அவர்களின் கடைசி குற்றச்சாட்டைக் காண்போம்.

சகோதரர்கள் ஜியா/அப்சர் எழுதியது:

திரு உமர் அவர்கள் வெளியிட்டது...

"நம்மிடம் இப்போது இருக்கும் பழமை வாய்ந்த குர்‍ஆன் கையெழுத்துப் பிரதிகள், அவைகள் முழுமையானவைகளாக இருந்தாலும், குர்‍ஆனின் ஒரு பகுதியாக இருந்தாலும், அவைகள் அனைத்தும் ஹிஜ்ராவின் இரண்டாம் நூற்றாண்டுக்கு பிறகு எழுதப்பட்ட பிரதிகளேயாகும் (அல்லது கி.பி. 800க்கு பிறகு). உலக இஸ்லாமிய பெருவிழாவில் பிரிட்டீஷ் அருங்காட்சியகத்தில் காட்டப்பட்ட குர்‍ஆன் பிரதியானது ஹிஜ்ரி இரண்டாம் நூற்றாண்டின் கடைசி காலத்திற்கு சம்மந்தப்பட்டதாகும். இருந்தபோதிலும், சில பழமைவாய்ந்த குர்‍ஆன் கையெழுத்துபிரதி துண்டுகள் ஹிஜ்ரி முதல் நூற்றாண்டிற்கு சம்மந்தப்பட்டவைகளாகும்."(Grohmann, A.: Die Entstehung des Koran und die altesten Koran- Handschriften', in: Bustan, 1961, pp. 33-8)

திரு உமர் அவர்களே, இப்படி உங்களை அறியாமலேயே நீங்கள் உண்மையை ஒப்பு கொள்கிறீரே!!! ஹிஜ்ரி முதலாம் நூற்றாண்டு என்றால் என்ன என்பது உங்களுக்கு தெரியுமா? முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மக்காவில் இருந்து மதினாவிற்கு ஹிஜ்ரத் (இடம்பெயர்தல்) செய்தார்களே அந்த ஆண்டிலிருந்து துவங்குகிறது. முஹம்மது நபி (ஸல் ) அவர்கள் ஏறக்குறைய ஹிஜ்ரத் செய்து பதினோரு ஆண்டுகள் கழித்து மரணிக்கிறார். உங்களின் ஆதாரப்படியே, முஹம்மது நபி ஸல் அவர்கள் மரணித்து தொண்ணூறு ஆண்டுகளுக்குள்ளாக எழுதப்பட்ட கையெழுத்து பிரதி இன்றளவும் பாதுகாக்கப்படுகிறது.

உமர்:

என் கட்டுரையின்பெயர் என்ன? நான் எவைகளை என் கட்டுரையில் சொல்கிறேன். நான் எவைகளை மேற்கோள் காட்டுகின்றேன், போன்றவற்றையெல்லாம் படித்து எழுத இவர்களுக்கு நேரம் இருப்பதில்லை. முஹம்மது புரிந்துக்கொண்டது போல அறைகுறையாக புரிந்துக் கொண்டு எழுதுவது இவர்களுக்கு வழக்கமாக ஆகிவிட்டது.

என் கட்டுரையின் தலைப்பை இவர்கள் சரியாக படித்து புரிந்துக்கொண்டார்களா என்பது சந்தேகம்.

என் கட்டுரையின் தலைப்பு:

பீஜேவிற்கு கேள்வி: உஸ்மான் காலத்து குர்‍ஆன் இன்று உலகில் உண்டா?

பழமைவாய்ந்த "குர்‍ஆனின் முழு கையெழுத்து" பிரதி ஹிஜ்ரி 200 அல்லது கி.பி. 800 க்கு சம்மந்தப்பட்டது

Koran: Earliest complete manuscript 200 AH or 800AD!

முழுவதற்கும், துண்டுக்கும் வித்தியாசம் இவர்களுக்குத் தெரியுமா? (Complete manuscript Vs Fragments)

என் தலைப்பில் மிகவும் தெளிவாக "முழு கையெழுத்துப் பிரதி" என்று கூறியுள்ளேன். ஆங்கிலத்தில் "Complete manuscript" என்று எழுதியுள்ளேன். இதன் பொருள் என்னவென்றால், கி.பி. 800க்கு முன்பு (அதாவது ஹிஜ்ரி 200க்கு முன்பு) எழுதப்பட்ட "முழு கையெழுத்துப் பிரதி" உலகில் எங்கேயாவது உண்டா? என்பது தான் கேள்வி. இன்னும் தெளிவாக சொல்லவேண்டுமென்றால், "குர்‍ஆனின் முதல் அத்தியாயம் முதல் வசனத்திலிருந்து கடைசி அத்தியாயம் (114) கடைசி வசனம் வரை உள்ள ஒரு கையெழுத்துப் பிரதி, அதுவும் ஹிஜ்ரி 200க்கு முன்பு எழுதப்பட்ட பிரதி உலகில் உண்டா"? என்பதாகும்.

இரண்டாவதாக, ஒரு இஸ்லாமியருடைய மேற்கோளை நான் எடுத்துக்காட்டினேன். அதில் தெளிவாக எழுதப்பட்ட விவரத்தை புரிந்துக்கொள்ளாமல், "உண்மையை நானாகவே எனக்கு தெரியாமல் ஒப்புக்கொண்டேனாம்", இதனை இவர்கள் கண்டுபிடித்து சொல்லியுள்ளார்கள். இப்போது அதனைப் பற்றி பார்ப்போம்.

நான் மேற்கோள் காட்டியவைகளை தமிழிலும் ஆங்கிலத்திலும் காண்போம்:

இருந்தபோதிலும், சில பழமைவாய்ந்த குர்‍ஆன் கையெழுத்துபிரதி துண்டுகள் ஹிஜ்ரி முதல் நூற்றாண்டிற்கு சம்மந்தப்பட்டவைகளாகும்.

However, there are also a number of odd fragments of Qur'anic papyri available, which date from the first century

Source: http://isakoran.blogspot.com/2011/10/200-800.html

மேலே சொல்லப்பட்டவைகள் "முழு குர்‍ஆன் கையெழுத்துப் பிரதிகள் அல்ல, அவைகள் கையெழுத்துப் பிரதி துண்டுகள்", அதாவது ஆங்கிலத்தில் "Fragments" என்றுச் சொல்வார்கள்.

உதாரணத்திற்கு: ஒரு வசனமோ, அறைவசனமோ, அல்லது ஒரு சில வசனங்களோ உள்ள ஒரு சிறிய துண்டு ஆகும். இதைத் தான் Fragments என்பார்கள்.

இந்த துண்டுகள் தான் ஹிஜ்ரி முதல் நூற்றாண்டுக்கு சம்மந்தப்பட்டு உள்ளன என்று அந்த இஸ்லாமிய அறிஞர் கூறியதை நான் மேற்கோள் காட்டினேன். ஹிஜ்ரி என்றால் என்ன என்று கூட தெரியாமல் நான் எழுதவில்லை. ஆகையால் தான் Fragments என்ற ஆங்கில‌ வார்த்தையின் மொழியாக்கமாக "துண்டுகள் " என்று எழுதினேன்.

"குர்‍ஆனின் அறிமுகம்" என்ற தலைப்பில், அதே பிபிசி செய்தித் தளம் வெளியிட்ட செய்தியின் ஒரு பகுதியை மறுபடியும் இங்கு மேற்கோள் காட்டுவது சிறந்தது.

Quran Introduction: http://www.bbc.co.uk/religion/religions/islam/texts/quran_1.shtml

Some Qur'anic fragments have been dated as far back as the eighth, and possibly even the seventh, century. The oldest existing copy of the full text is from the ninth century.

மேலே கண்ட வரிகளில், இஸ்லாமியர்களின் பொய்யை உலகிற்கு எடுத்துச் சொல்லும் விவரம் ஒன்று உண்டு, அதனைத் தான் நானும் எழுதினேன், பாவம் இவர்கள் எனக்கு ஒரு தளத்தைக் கொடுத்து உதவினார்கள்.

மேலேயுள்ள வரிகளில், அறைகுறை வசனங்கள் கொண்ட குர்‍ஆன் கையெழுத்து துண்டுகள், 7 அல்லது 8ம் நூற்றாண்டுக்கு சம்மந்தப்பட்டு உள்ளன. ஆனால், முழு குர்‍ஆன் கையெழுத்துபிரதி மட்டும் , 9ம் நூற்றாண்டுக்கு சம்மந்தப்பட்டது என்றுச் சொல்கிறது, அதாவது ஹிஜ்ரி 200க்கு (கி.பி.800க்கு) பிறகு எழுதப்பட்ட முழு கு‍ர்‍ஆன் பிரதிகள் மட்டுமே உள்ளன.

ஆனால், பீஜே போன்ற இஸ்லாமியர்கள் சொல்லும் பொய் என்ன? உஸ்மான் தயாரிப்பில் வெளியான இரண்டு பிரதிகள் அப்படியே இரண்டு இடங்களில் பாதுகாக்கப்பட்டு இருக்கின்றனவாம். ஆனால், இவ்விரு பிரதிகளும் ஹிஜ்ரி 200க்கு முந்தையதா என்று கேட்டால், "இல்லை" என்பது தான் பதில். மற்றும் இவ்விரு இடங்களில் உள்ள அந்த குர்‍ஆன் பிரதிகள் "முழுவதுமாக உள்ளதா?" அதாவது 114 அத்தியாயங்கள் கொண்டுள்ளதா? என்று கேள்வி கேட்டால்... அதற்கும் பதில் இல்லை...

சகோதரர் ஜியா மற்றும் அப்சர் அவர்கள் ஒழுங்காக படித்து எழுதவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

சரி, இப்போது சுருக்கமாகச் சொல்கிறேன்:

1) "குர்‍ஆனின் முழு கையெழுத்துப் பிரதி, அதுவும் கி.பி. 800க்கு முன்பு எழுதப்பட்ட முழு பிரதி" உலகில் எந்த அருங்காட்சியகத்திலாவது உண்டா? (மூக்கு கண்ணாடி இருந்தால், கண்களில் மாட்டிக்கொண்டு "முழு" என்ற வார்த்தையை கவனமாக படிக்கவும்)

2) அதே நேரத்தில், அறைகுறையாக, அல்லது ஒரு சில வசனங்களைக் கொண்ட "துண்டுகள்" அதாவது இங்கொன்று அங்கொன்று என்று வசனங்களைக் கொண்ட Fragments என்கின்ற துண்டுகள், ஹிஜ்ரி முதல் நூற்றாண்டுக்கு சம்மந்தப்பட்டவைகள் உள்ளன என்பதைத் தான் நாங்கள் சொல்லியுள்ளோம்.

எனவே இஸ்லாமிய அறிஞர்களே, ஒழுங்காக படியுங்கள், நேர்மையாக நடந்துக்கொள்ளுங்கள், மூல தொடுப்புகளை கொடுத்து உங்கள் நேர்மையை நிருபித்துக்கொள்ளுங்கள்.

முடிவுரை:

இந்த கட்டுரையில் சகோதரர் ஜியா மற்றும் அப்சர் அவர்கள் பயந்துப்போய், என் கட்டுரையின் தொடுப்பை கொடுத்தால் இஸ்லாமுக்கு ஆபத்து என்பதை கவனத்தில் கொண்டவர்களாக முன்வைத்த மூன்று குற்றச்சாட்டுகளுக்கு பதிலை கொடுத்துள்ளேன். இதில் ஏதாவது சந்தேகம் இருந்தால், மறுபடியும் தொடர்ச்சியாக இக்கட்டுரை தொடரும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவர்களின் உதவிக்கு வந்த பிபிசி நிருபரின் கட்டுரை இவர்களையே பதம் பார்த்ததை வாசகர்கள் கவனத்தில் கொள்ளவும். இஸ்லாமியர்கள் எந்த ஒரு விஷயத்தைச் சொன்னாலும் நாம் உடனே அதனை ஆய்வு செய்து சரிபார்க்கவேண்டும், அப்போது நிச்சயமாக அவர்கள் மறைத்த உண்மை வெளியே வரும்.

இது வெறும் ஆரம்பம் தான்... இன்னும் குர்‍ஆனின் மூலப்பிரதியின் ஆய்வு தொடரும்...


 

http://isakoran.blogspot.com/2011/10/blog-post_28.html