அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

July 30, 2011

இஸ்லாமை முதல்முறையாக ருசி பார்த்த முன்னால் கிறிஸ்தவர்

இஸ்லாமை முதல்முறையாக ருசி பார்த்த முன்னால் கிறிஸ்தவர்

ஆஸ்திரேலியாவில் சமீப காலத்தில் இஸ்லாமியராக மாறிய ஒரு கிறிஸ்தவர், தன் நண்பர்களுடன் மது அருந்தியதற்காக, நான்கு நல்ல இஸ்லாமியர்கள் அவரது வீட்டில் இரவு நேரத்தில் நுழைந்தனர். மூன்று பேர் அந்த நபர் படுத்திருந்த கட்டிலில் அவரை அப்படியே கை கால்களை அழுத்தி பிடித்தார்கள். நான்காவது இஸ்லாமியர் ஒரு மின்சார வைரைக் கொண்டு, (எலெக்ட்ரிக் வைர்)  நாற்பது முறை அவரை அடித்தார். இந்த நான்கு பேரையும் ஆஸ்திரேலிய காவல் துறை கைது செய்து விசாரித்து வருகிறது, மேலும் அறிய இந்த தொடுப்பை படிக்கவும்: http://www.heraldsun.com.au/news/intruders-whip-silverwater-man-31-for-drinking/story-e6frf7jo-1226097080261
  
இந்த சிறிய செய்தி எதனை நமக்கு தெரிவிக்கிறது, இதனால் இஸ்லாமியரல்லாதவர்கள் எடுக்கவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன‌?

1)  நல்ல (கெட்ட) இஸ்லாமியர்களும் கெட்ட(நல்ல) இஸ்லாமியர்களும்:

இஸ்லாமின் பெயரில் உலகில் எங்கு வன்முறை நடந்தாலும், நம்முடன் வசிக்கும் (நல்ல) இஸ்லாமியர்கள் வன்முறையில் ஈடுபட்ட (கெட்ட) இஸ்லாமியர்களை கண்டிப்பார்கள். அவர்கள் செய்வது தவறு என்பார்கள், தனி மனிதன் சட்டத்தை கையில் எடுப்பது தவறு என்றுச் சொல்வார்கள். இஸ்லாம் இப்படியெல்லாம் வன்முறையில் ஈடுபடும்படி சொல்லவில்லை என்றுச் சொல்வார்கள். இஸ்லாமியர்களின் வாயிலிருந்து இப்படிப்பட்டவைகளை கேட்பதற்கு மிகவும் நன்றாக இருக்கும்.   இவர் சொல்வது சரி என்று நாம் நினைத்து இருந்தால், இன்னும் சில நாட்களில் இன்னொரு வன்முறை (கெட்ட) இஸ்லாமியர்களால் அழகாக நடந்தேறும். இந்த முறையும் நம்முடைய நண்பர்களாகிய நல்ல இஸ்லாமியர்கள் அதே வசனத்தை வார்த்தை மாறாமல் அப்படி நம்மிடம் ஒப்புவிப்பார்கள். நாமும் கேட்டுக்கொண்டு இருப்போம்.  அதன் பிறகு சில நாட்களுக்கு பின்பு... அதே கதை, அதே கதா நாயகன், அதே வசனம், அதே "சுபம்".

2) உள்ளே வெளியே:

இஸ்லாமின் ஒரு தனித்தன்மை என்னவென்றால், இஸ்லாமுக்கு வெளியே இருப்பவர்களிடம் மட்டும் இஸ்லாம் கடுமையாக இருக்காது, தனக்குள் இருப்பவர்களையும் தாக்கும், தகிக்கும். இது ஆச்சரியப்படவேண்டிய விஷயமல்ல, இதுதான் இஸ்லாமின் அடிப்படை அஸ்திபாரம்.

மேலே நாம் படித்த செய்தியின் படி, ஒரு கிறிஸ்தவர் இஸ்லாமியராக மாறினார். (பெற்றோர்கள் கிறிஸ்தவர்கள் என்பதால் அவர்களுக்கு பிறக்கும் பிள்ளைகளும் கிறிஸ்தவர்கள் தானே... அந்த வகையில் இவர் கிறிஸ்தவரா அல்லது உண்மையாகவே இயேசுவை சுயமாக பின்பற்றும் கிறிஸ்தவராக இருந்தாரா நமக்குத் தெரியாது). வாழுவதோ ஒரு ஜனநாயக நாட்டில், அதாவது ஆஸ்திரேலியாவில்.  இஸ்லாமியர்கள் மது அருந்தினால், அவர்களுக்கு இஸ்லாமின் ஷரியா சட்டத்தின் படி 40 சவுக்கு அடிகள் கிடைக்கும் என்று இவருக்கு சொன்னார்களோ இல்லையோ நமக்குத் தெரியாது. இவரோ இஸ்லாமியராக மாறிவிட்டார். ஆனால், இவர் தன் நண்பர்களுடன் போதை ஏற்றிக்கொண்டு வந்து வீட்டில் படுத்து இருக்கும் போது, நான்கு இஸ்லாமியர்கள் வந்து, அந்த போதையை  40 அடிகள் கொடுத்து இறக்கிவிட்டார்கள்.

ஒரு முஸ்லிம்  இஸ்லாமிய ஆட்சி நடக்காத‌ நாட்டிலும் இஸ்லாமிய சட்டத்தை தன் கையில் எடுத்துக்கொள்வான் என்பதற்கு இந்த நிகழ்ச்சி ஒரு சான்று.


3) இஸ்லாமியர்களின் உள்ளக்குமுறலும், இஸ்லாமியரல்லாதவர்களின் உள்ளார்ந்த வடுக்களும்:

யாரோ சில இஸ்லாமியர்கள் தங்கள் கையில் இஸ்லாமிய சட்டத்தை எடுத்துக்கொண்டார்கள் என்பதற்காக இப்படி எல்லாரையும் குற்றப்படுத்துவது நியாயமா? தர்மமா என்று கேட்பார்கள்.   இந்த வசனங்களை நாங்கள் ஆண்டாண்டு காலமாக கேட்டுக்கொண்டு தான் இருக்கிறோம், நீங்களும் சொல்லிக்கொண்டு தான் இருக்கிறீர்கள். அடி வாங்கியவனும் வாங்கிக்கொண்டு தான் இருக்கிறான்,  நீங்கள் சொல்வது போல "ஒரு சில இஸ்லாமியர்களால்" உலகம் அவஸ்தை பட்டுக்கொண்டுத் தான் இருக்கிறது.

ஏதோ ஒரு முலையில் நின்றுக்கொண்டு நீங்கள் போடும் சத்தத்தை  உங்களின் அந்த ஒருசில இஸ்லாமியர்கள் கேட்டு தங்கள் வன்முறையை விட்டுவிடப்போவதில்லை, மனிதர்களை நிம்மதியாக வாழவிடப்போவதில்லை.  இப்போது சில வார்த்தைகளை கொட்டிவிட்ட நீங்கள், நாட்கள் கடந்துச் செல்லும் போது மறந்துவிடுவீர்கள், ஆனால் இஸ்லாமியர்களால் நாங்கள் எங்கள் உடல்களில் சுமந்துக்கொண்டு இருக்கும் வடுக்கள் இன்னும் காயாமல் அப்படியே இருக்கிறது. 

உலக சட்டங்களினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே, 
ஷரியாவினால் சுட்டவடு.
(ஹிஜ்ரிக்கு பின்பு வள்ளுவர் வாழ்ந்திருந்தால் இப்படி எழுதியிருப்பாரோ)


ஆகையால், இஸ்லாமியரல்லாதவர்களை எச்சரிக்கை செய்வதும், அவர்களை தட்டி எழுப்புவதும் நம்முடைய கடமையாக உள்ளது. முக்கியமாக கிறிஸ்தவ பெற்றோர்களையும், சபைகளின் போதகர்களையும் எச்சரிக்கை செய்வது நல்லது என்று நான் எண்ணுகின்றேன்.

4)   மருந்தில்லா வியாதிகளும், மன்னிப்பில்லா இஸ்லாமும்

அருமையான கிறிஸ்தவ பெற்றோர்களே, கிறிஸ்தவ சபை போதகர்களே, உங்கள் குழந்தைகள் தெரிந்தோ தெரியாமலோ நெருப்பை தொட்டால் ஆபத்து என்று அறிந்து அவர்களை எச்சரிக்கை செய்கிறீர்கள். ஆபத்தான பொருட்களை குழந்தைகளின் கைகளுக்கு எட்டாத தூரத்தில் வைக்கிறீர்கள்.  அதே குழந்தைகள் வாலிபர்களான உடனே, அவர்களுக்கு மென்மையாக  அறிவுரை கூறுகிறீர்கள். வேகமாக இருசக்கர வண்டியை ஓட்டுவதிலிருந்து,  எயிட்ஸ் நோய்க்கு தப்பித்துகொள்வதற்கான எல்லா எச்சரிக்கைகளையும் கொடுக்கிறீர்கள்.  ஆனால், நாம் மேலே கண்ட செய்தியைப் போல ஒரு செய்தி உங்கள் பிள்ளைகள் பற்றி கூறப்படுமானால் உங்கள் உள்ளம் எப்படி துடிக்கும். ஒரு நபர் தூங்கிக்கொண்டு இருக்கும் போது, வீட்டை உடைத்து, கட்டிலில் கை கால்களை  இறுக்க பிடித்து, 40 சவுக்கு அடிகள் ஒருவர் எதிர்பார்க்காத போது அடிக்கப்படுமானால் அதனை எப்படி சகித்துக்கொள்ளமுடியும்? (இயேசு ஒன்று குறைய நாற்பது சவுக்கு அடிகள் வாங்கினார், இந்த நபரோ, ஏன் அந்த ஒன்று குறையவேண்டும் என்பதற்காக நாற்பது அடிகளையும் வாங்கிவிட்டார். அன்பான நண்பரே உனக்கு இது வேண்டுமா?)

எனவே, இஸ்லாமை பற்றி எச்சரிக்கையாக இருக்கும்படி உங்கள் சபை விசுவாசிகளுக்கு போதகர்களாகிய நீங்கள் எச்சரிக்கை விடுக்கமாட்டீர்களா?

"என் பையன் முஸ்லிமாக மாறிவிட்டானா.. பரவாயில்லை.. அவன் விருப்பப்படி வாழட்டும் நல்லா இருக்கட்டும்" என்று சொல்கிறீர்களா? உங்கள் உள்ளத்தின் இந்த வார்த்தைகளுக்காக நான் உங்களை வாழ்த்துகிறேன். ஆனால், உங்க பையன் இஸ்லாமியனாக மாறிவிட்ட பிறகு நல்லா இருப்பானா? என்பது தான் கேள்வி.    அவன் தெரிந்தோ தெரியாமலோ தவறுகள் செய்யும்போது, நீங்கள் மன்னிப்பீர்கள், திருந்துவதற்கு  இன்னொரு வாய்ப்பை தருவீர்கள்.. ஆனால் இஸ்லாம் தராதே.. ஷரியா சட்டம் இரக்கமாக இருக்காதே.. ஒரு சில இஸ்லாமியர்களின் கைகள் சும்மா இருக்காதே..


5) இஸ்லாமியர்கள் கேட்கும் சில கேள்விகளையும், அதற்கான என் பதில்களையும் இப்போது பார்ப்போம்.

அ) ஒரு சில இஸ்லாமியர்கள் செய்யும் குற்றத்திற்கு, இஸ்லாமை குற்றப்படுத்துவது நியாயமா?

பதில்: ஆனால், எனக்கு இருக்கும் ஒரே மகன், அந்த ஒரு சில இஸ்லாமியர்களால் கொலை செய்யப்பட்டுவிட்டால், அவனை உங்கள் இஸ்லாமினால் திருப்பி தரமுடியுமா? உங்களால் தரமுடியுமா?


ஆ) இஸ்லாமிய ஆட்சி நடக்கும் நாடுகளில் தானே சில இஸ்லாமியர்கள் இப்படி சட்டத்தை கையில் எடுத்துக்கொள்கிறார்கள்? மற்ற நாடுகளில் இப்படி இல்லையே?

பதில்: அப்படியெல்லாம் ஒன்றுமில்லை, ஜனநாயக நாட்டில் இஸ்லாமியர்கள் கொன்றது ஆயிரம், இஸ்லாமிய நாட்டில் இஸ்லாமியர்கள் கொல்வது பதினாயிரம். சதவிகிதத்தில் வித்தியாசமே ஒழிய, இஸ்லாமிய சட்டத்தில் இல்லை.

ஆஸ்திரேலியா ஒரு இஸ்லாமிய நாடு இல்லை, இந்தியா ஒரு இஸ்லாமிய நாடு இல்லை, இங்கிலாந்து ஒரு இஸ்லாமிய நாடு இல்லை, இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இந்த எல்லா நாடுகளிலும் ஒரு சில இஸ்லாமியர்கள் வன்முறையில் ஈடுபடுவது சகஜமாகிவிட்டது.

இ) நாங்கள் இஸ்லாம் பற்றி மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லும் போது, அவர்கள் முஸ்லிம்களாகிவிட்டால் அவர்களை தண்டிக்கவேண்டும் என்பதற்காக அப்படி செய்வதில்லையே?

பதில்: நீங்கள் அப்படி செய்யமாட்டீர்கள், ஆனால், நீங்கள் செல்லும் மசூதியில் உங்களோடு அல்லாஹ்வை தொழுதுக்கொள்ளும் இதர நபர்கள் இப்படி செய்யமாட்டார்கள் என்று உங்களால் உறுதி மொழி கொடுக்கமுடியுமா?  நீங்கள் செல்லும் மசூதியின் இமாம் (தலைவர் தொழுகை நடத்துபவர்) தன் மசூதியில் இருக்கும் இதர மக்களை இப்படி சட்டத்தை கையில் எடுத்துக்கொள்ளவேண்டும் என்று அறிவுரை கூறமாட்டார் என்று உங்களால் உறுதி அளிக்கமுடியுமா?

நாம் மேலே படித்த செய்தியின்படி, புதிதாக இஸ்லாமியராக மாறிய அந்த நபர் மது அருந்தினார் என்று, வேறு இஸ்லாமிய நாட்டிலிருந்து வந்து இஸ்லாமியர்கள் தாக்கவில்லை. தன்னுடைய இஸ்லாமிய நண்பர்களே தாக்கினார்கள், தான் சென்று அல்லாஹ்வை தொழுதுக்கொள்ளும் அதே மசூதியின் அங்கத்தினர்களே அப்படிசெய்துள்ளார்கள்.  ஆயிரம் மைல்களுக்கு அப்பாலிலிருந்து ஒருவருக்கு ஆபத்துவராது,  தன் தோளில் கைபோட்டு மகிழந்த அதே முஸ்லிமினால் ஆபத்து வரும். இப்படித் தான்  அந்த நபருக்கு ஆபத்து வந்துள்ளது.

ஆக, இஸ்லாமியராக மாறுவது ஒரு துப்பாக்கியில் தானே தோட்டாக்களை போட்டு, அதனை தன் சக இஸ்லாமியரிடம் கொடுத்து, நான் எப்போதாவது இஸ்லாமிய சட்டத்தின்படி நடக்க தவறினால், இந்த துப்பாக்கியால் என்னை சுட்டுவிடு என்று சொல்வதற்கு சமமாகும்.

இஸ்லாமிய ஆட்சி நடக்காத நாட்டிலேயே இந்த கதி என்றால், இன்னும் அல்லாஹ்வின் ஆட்சி புரியும் நாட்டில் எவ்வளவு கொடுமைகள் இஸ்லாமியரல்லாதவருக்கு நடக்கும்?


6)  முன்னால் கிறிஸ்தவரின் பின்னால் வாழ்க்கை முஸ்லிமாக இருந்தால் நல்லது:

இப்போது இஸ்லாமை ஒரு விரலினால் ஊருகாயை தொட்டு நக்குவதைப் போல லேசாக ருசி பார்த்த அந்த நபர் என்ன தீர்மானம் எடுப்பார்?

இஸ்லாமுக்குள் இருந்துக்கொண்டே, ஜனநாயக நாட்டில் இருந்துக்கொண்டே மது அருந்தியதற்காக ஷரியாவின் சட்டத்தின் படி சவுக்கடி வாங்கியவர். இனி எனக்கு இஸ்லாம் வேண்டாம் என்று வெளிப்படையாக அறிக்கையிட்டால் என்ன நடக்கும்? மரண தண்டனை தான்.  இஸ்லாமின் படி ஒருவர் இஸ்லாமை விட்டு வெளியே சென்றால், அதனை வெளிப்படையாக கூறினால் மரணம் தான் முடிவு.  "இப்படியெல்லாம் இல்லை" என்று அறிக்கை கொடுப்பவர்கள் ஆயிரம் முஸ்லிம்கள் இருக்கிறார்கள், ஆனால், அரிவாளை எடுக்கும் ஒரு முஸ்லிம் போதுமே...கதையை முடிக்க!

எனவே, இவர் தன்னுடைய மனதில் இஸ்லாம் பற்றி எதை நினைத்து இருந்தாலும், வெளிப்படையாக கூறும் போது, இஸ்லாமை புகழ்ந்துக் கூறி, தான் இஸ்லாமிலேயே தொடருவதாக கூறினால் உயிர் தப்பலாம். அப்படி இல்லாமல் மனதில் உள்ளதை உள்ளது போல கூறினால், வேறு சில நான்கு இஸ்லாமியர்கள் இல்லாமலா போய்விடுவார்கள்?  அவர்களுக்கும் கட்டைகள், மின்சார வைர்கள், கத்திகள் துப்பாக்கிகள் கிடைக்காமலா போய்விடும்? ஒரு சில இஸ்லாமியர்கள் சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு, இப்படி கொன்றுவிட்டார்கள், இதற்காக இஸ்லாமை ஏன் குற்றப்படுத்துகிறீர்கள் என்றுச் சொல்லும் இஸ்லாமியர்கள் நம் பக்கத்துவிட்டில், அலுவலகத்தில் இல்லாமலா போய்விடுவார்கள்?

ஆஸ்திரெலியாவின் அந்த அடிவாங்கியவருக்கு திருமணமாகி இருந்து, மனைவி பிள்ளைகளோடு அவர் படுத்துயிருந்திருந்தால், தன் பிஞ்சு குழைந்தைகளின் கண்களுக்கு முன்னால், மனைவிக்கு முன்னால் அந்த நபர் அடிவாங்க வேண்டி இருந்திருக்கும். இந்த காட்டுமிராண்டித்தனத்தை எத்தனை நாட்கள் தான் உலகம் சகிக்குமோ? 

மது அருந்துவதை நான் ஆதரிக்கவில்லை, ஆனால், இஸ்லாமியர்கள் சட்டத்தை கையில் எடுப்பதை எப்போது நிறுத்தப்போகிறார்கள்? என்ற கேள்வியை இஸ்லாமியர்களுக்கு முன்பாக வைக்கிறேன்.



முடிவுரை: ஆகையால், கிறிஸ்தவ பெற்றோர்களே, கிறிஸ்தவ சபை போதகர்களே, இதர மார்க்கத்தவர்களே, தூங்கிகொண்டு இருந்தது போதும், எழுந்திருங்கள். இஸ்லாம் பற்றி கற்றுக்கொள்ளுங்கள், இந்த விழிப்புணர்வை பரப்புங்கள். இன்று நாம் சோம்பலாக இருந்தால், நாளைக்கு நம் பிள்ளைகளின் சாம்பலையும் நாம் காணமுடியாது.
 
 

July 28, 2011

நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?



  

நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?

மனிதன் இயற்கையாகவே மதப்பற்று உடையவன் என்று நாம நம்புகிறோம், ஆனால், இந்திய மண்ணில் மதப்பற்றின் வாசனை கொஞ்சம் அதிகம் என்றே சொல்லலாம்.

நம் நாட்டில் சாப்பாட்டிற்கு பஞ்சமுண்டு ஆனால் சாமியர்களுக்கு பஞ்சமில்லை. சமீப காலத்தில் நித்யானந்தா என்ற சாமியாரின் செயல்கள் பற்றி நாம் செய்தித்தாளில் படித்துள்ளோம். அவர் திருமண பந்தத்திற்கு வெளியே, தன்னை ஒரு மகான் என்று நம்பும் மக்களின் நம்பிக்கைக்கு எதிராக செயல்பட்டுள்ளார்.

விஷயத்திற்கு வருகிறேன், இஸ்லாமிய அறிஞர் பீஜே அவர்கள், நித்யானந்தாவிற்கு தமிழ் நாட்டு காவல் துறை "மரியாதை செய்ததையும், அவருக்கு ஆதரவாக பேசியதையும்" கண்டித்து கண்டணம் வெளியிட்டுள்ளார். இந்த கண்டனத்தை படிக்கும் போது, நல்ல வேலையை பீஜே செய்துள்ளார் என்று சொல்லத் தோன்றுகிறது. அதாவது, மக்கள் நல்லவர் என்று நம்பும் ஒருவர், இப்படி கீழ்தரமான செயல்கள் புரிந்துள்ளதை கண்டிப்பதும், அதற்கு ஆதரவு அளிப்பவர்களை கண்டிப்பதும் சமுதாயத்திற்கு தேவையான ஒன்று தான். இதில் எந்த‌ மாற்று க‌ருத்தும் இருக்க‌முடியாது.

ஆனால், நித்யானந்தாவை பீஜே அளந்த அதே அளவுகோலை பயன்படுத்தி, இன்னொரு நபரையும் பீஜே அளந்து தன் கண்டனத்தை தெரிவிப்பாரா?

சரி, அந்த இன்னொரு நபர் யார்? என்று கேட்கிறீரகளா? பொறுமையாக கீழே இருக்கும் விவரங்களை படிக்கவும், பிறகு உங்களுக்கே தெரியும் அந்த இன்னொரு நபர் யார் என்று?

1) இறைவனால் அனுப்பப்பட்ட இறைத்தூதர், ஒருபெண்ணை அப்பெண்ணின் விருப்பத்திற்கு எதிராக ஒரு அறைக்குள் அடைத்து வைத்து, என்னை திருமணம் செய்துக்கொள்கிறாயா என்று கேட்கிறார், அந்தப்பெண் நீ ஒரு இடையன் நான் ஒரு அரசி, உன்னை எப்படி திருமணம் செய்துக்கொள்வேன் என்று கேட்டு மறுக்கிறாள். இவருக்கு ஏற்கனவே அனேக மனைவிகள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இறைத்தூதர் செய்தது சரியா தவறா என்று பீஜே அவர்கள் விளக்குவார்களா?

புகாரி பாகம் 6, அத்தியாயம் 68, எண் 5255

அபூ உசைத் மாலிக் இப்னு ரபீஆ அல்அன்சாரி(ரலி) அறிவித்தார்

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் புறப்பட்டு (மதீனாவிலுள்ள) 'அஷ்ஷவ்த்' (அல்லது 'அஷ்ஷவ்ழ்') என்றழைக்கப்படும் ஒரு தோட்டத்தை நோக்கி நடந்தோம். (அதனருகில் இருந்த வேறு) இரண்டு தோட்டங்களை அடைந்து, அந்த இரண்டிற்கும் இடையே அமர்ந்தோம். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'இங்கேயே அமர்ந்திருங்கள்' என்று சொல்லிவிட்டுத் தோட்டதிற்குள்ளே சென்றார்கள். (அங்கு) அல்ஜவ்ன் குலத்துப் பெண் அழைத்து வரப்பட்டுப் பேரீச்சந் தோட்டத்திலிருந்த ஒரு வீட்டில் தங்கவைக்கப்பட்டிருந்தார். அப்பெண்(ணின் பெயர்) உமைமா பின்த் நுஅமான் இப்னி ஷராஹீல் (என்பதாகும்). அவருடன் அவரை வளர்த்த செவிலித் தாயும் இருந்தார். (அப்பெண்ணுக்கும் நபியவர்களுக்கும் முன்பே திருமண ஒப்பந்தம் முடிந்திருந்ததால்) அப்பெண் இருந்த வீட்டிற்குள் நபி(ஸல்) அவர்கள் நுழைந்து 'உன்னை எனக்கு அன்பளிப்புச் செய்!' என்று கூறினார்கள். அந்தப்பெண் 'ஓர் அரசி, தன்னை இடையருக்கெல்லாம் அன்பளிப்புச் செய்வாளா?' என்று கேட்டார். அவரை அமைதிப்படுத்துவதற்காக நபி(ஸல்) அவர்கள் தங்களின் கரத்தை அவரின் மீது வைக்கப் போனார்கள். உடனே அவர் 'உங்களிடமிருந்து நான் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறேன்' என்று கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள் அவரை நோக்கி 'கண்ணியமான (இறை) வனிடம் தான் நீ பாதுகாப்புக் கோரியிருக்கிறாய்' என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து வெளியேறி எங்களிடம் வந்தார்கள். மேலும், 'அபூ உசைதே! இரண்டு வெண்ணிறச் சணல் ஆடைகளை அவளுக்கு அளித்து, அவளை அவளுடைய குடும்பத்தாரிடம் கொண்டுபோய்விட்டு விடு' என்று கூறினார்கள்.

(மேற்கண்ட ஹதீஸ் பற்றிய அனைத்து கேள்விகளையும் படிக்க இந்த தொடுப்பை சொடுக்கவும்: இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா? http://muhammadsunna.blogspot.com/2010/11/blog-post.html)

2) நாம் கூறிய இந்த இறைத்தூதருக்கு ஒரு பெண்ணின் அழகை வர்ணித்துள்ளார்கள். அவளை அழைத்துக்கொண்டு வரும்படி கட்டளையிட்டார். அவரது அடியார்கள் அப்படியே செய்து முடித்தார்கள், அப்பெண்ணை கடத்திக்கொண்டு வந்து ஒரு அறையில் தங்க வைத்தனர். பிறகு, இந்த இறைத்தூதர் அப்பெண்ணிடம் என்னை திருமணம் செய்துக்கொள் என கூறினார்கள். உடனே, அப்பெண் இந்த மனிதரிடமிருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ள இறைவனிடம் பாதுகாப்பு கோரினாள், இவரும் அப்பெண்ணை விட்டுவிட்டார். ஒரு இறைத்தூதர் பெண்களை கடத்திக்கொண்டு வந்து அறையில் தங்க வைத்துவிட்டு, பெண் கேட்பது தான் அழகா?

இவரைப் பற்றியும், இந்த நிகழ்ச்சி பற்றியும், நம்முடைய பீஜே அவர்கள் என்ன விளக்கம் தமிழ் நாட்டு மக்களுக்கு தரப்போகிறார்கள்?

புகாரி பாகம் 6, அத்தியாயம் 74, எண் 5637

ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) கூறினார்

நபி(ஸல்) அவர்களிடம் ஓர் அரபுப் பெண்ணைப் பற்றிக் கூறப்பட்டது. நபி(ஸல்) அவர்கள் அப்பெண்ணை (மணம் புரிந்து கொள்ள) அழைத்து வரும்படி அபூ உஸைத் அஸ்ஸாஇதீ(ரலி) அவர்களுக்கு உத்தரவிட, அவர் அப்பெண்ணை அழைத்து வர ஆளனுப்பினார். அவ்வாறே அந்தப் பெண் வந்து 'பன} சாஇதா' குலத்தாரின் கோட்டை ஒன்றில் தங்கினார். நபி(ஸல்) அவர்கள் புறப்பட்டு அப்பெண்மணியிடம் வந்து, அவர் (தங்கியிருந்த) இடத்தில் நுழைய அங்கே அந்தப் பெண் தலையைக் கவிழ்த்தபடி (அமர்ந்து) இருந்தார். நபி(ஸல்) அவர்கள் அப்பெண்ணிடம் (தம்மை மணந்துகொள்ள சம்மதம் கேட்டுப்) பேசியபோது அவள், 'உங்களிடமிருந்து நான் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறேன்' என்று சொன்னாள். நபி(ஸல்) அவர்கள் 'என்னிடமிருந்து உனக்குப் பாதுகாப்பு அளித்துவிட்டேன்' என்று கூறினார்கள். அப்போது மக்கள் (அந்தப் பெண்ணிடம்), 'இவர்கள் யார் என்று உனக்குத் தெரியுமா?' என்று கேட்க, அவள் 'தெரியாது' என்று பதிலளித்தாள். மக்கள், 'இவர்கள் தாம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் உன்னைப் பெண் பேசுவதற்காக வந்தார்கள்' என்று கூறினார்கள். அந்தப் பெண் 'அவர்களை மணந்து கொள்ளும் நற்பேற்றை நான் இழந்து துர்பாக்கியவாதியாகி விட்டேனே' என்று (வருத்தத்துடன்) கூறினாள். ….

(மேற்கண்ட ஹதீஸ் பற்றிய அனைத்து கேள்விகளையும் படிக்க இந்த தொடுப்பை சொடுக்கவும்: அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்... http://muhammadsunna.blogspot.com/2010/11/blog-post_18.html)

3) நம்முடைய கதா நாயகராகிய அந்த இறைத்தூதர் போர் புரிந்தார், ஒரு பெண்ணை தனக்கு எடுத்துக்கொண்டார், போரிலிருந்து நாடு திரும்பும் போது, அப்பெண்ணை கற்பழித்தார். இவர் இப்படி செய்துக்கொண்டு இருக்கும் போது, அவரது சிப்பாய் ஒருவர் கதவிடம் இரவெல்லாம் காவல் காத்துக்கொண்டு இருக்கிறார். காலை விடிந்தவுடன், முஹம்மது எழுந்து வெளியே வரும் போது, தன் சிப்பாயைக் கண்டு, கதவிடம் என்ன செய்கிறாய் என்றுகேட்டபோது, நீங்கள் உடலுறவு கொண்ட பெண்ணின் அப்பாவை நீங்கள் கொன்றீர்கள், கணவனை கொன்றீர்கள், அவளுக்கு திருமணம் சில நாட்களுக்கு முன்பாகத் தான் நடந்தது. ஆகையால், நீங்கள் அப்பெண்ணுடன் உடலுறவு (கற்பழிப்பு) கொள்ளும் போது, அவள் மூலமாக உங்களுக்கு ஏதாவது ஆபத்து வருமோ என்று பயந்து காவல் காத்தேன் என்றார். அந்த இறைத்தூதர் சபாஷ் என்றார்.

ஒரு பெண்ணின் அப்பாவை கொன்று, கணவனை கொலை செய்து, புதுமணப்பெண்ணை கற்பழிக்கும் ஒரு நபரை பீஜே கண்டிப்பாரா? அல்லது இந்த செயல் பற்றி பீஜே அவர்களின் கருத்து என்ன?

அல் தபரி முஹம்மதுவின் வாழ்க்கை சரிதையிலிருந்து படியுங்கள்.

இறைத்தூதர் ஷஃபிய்யாவோடு உடலுறவு கொண்டு இருந்த அந்த இரவு, அபூ அய்யுப் என்பவர் அந்த கதவு பக்கத்தில் இரவெல்லாம் நின்றுக்கொண்டு இருந்தார். காலையில் அபூ அய்யுப் இறைத்துதரை பார்த்தவுடன் "அல்லாஹு அக்பர்" என்று கூறினார், இவர் தன்னுடன் ஒரு வாளையும் வைத்திருந்தார். இவர் இறைத்தூதரைப் பார்த்து, "ஓ அல்லாஹ்வின் தூதரே, இந்த பெண்ணுக்கு திருமணம் இதற்கு முன்பு தான் நடந்தது, நீங்கள் இப்பெண்ணின் தந்தையை கொன்றுவிட்டீர்கள், அவளின் சகோதரனையும், மற்றும் கணவனையும் கொன்றுவிட்டீர்கள். ஆகையால், இந்த பெண்ணை நான் நம்பவில்லை (உங்களுக்கு இவள் மூலமாக ஆபத்துவந்துவிடுமோ என்று பயந்து இரவெல்லாம் காவல் காத்தேன்" என்றார்). இதைக் கேட்டு இறைத்தூதர் சிரித்தார் மற்றும் நீ செய்தது "நல்லது" என்றார்.

Ibn 'Umar [al-Waqidi] – Kathir b. Zayd – al-Walid b. Rabah – Abu Hurayrah: While the Prophet was lying with Safiyyah Abu Ayyub stayed the night at his door. When he saw the Prophet in the morning he said "God is the Greatest." He had a sword with him; he said to the Prophet, "O Messenger of God, this young woman had just been married, and you killed her father, her brother and her husband, so I did not trust her (not to harm) you." The Prophet laughed and said "Good". (The History of al-Tabari, Volume XXXIX (39), p. 185; bold and underline emphasis ours)

(மேற்கண்ட ஹதீஸ் பற்றிய அனைத்து கேள்விகளையும் படிக்க இந்த தொடுப்பை சொடுக்கவும்: முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்: http://muhammadsunna.blogspot.com/2010/10/blog-post_29.html)

இந்துக்களின் மனதை புண்படுத்திய நித்தியானந்தாவை கண்டித்த பீஜே அவர்கள், இந்த இறைத்தூதரின் செயலைக் கண்டு இஸ்லாமியர்களின் மனது புண்படவில்லை என்றுச் சொல்லத் தயாரா? அப்படி புண்படவில்லை என்று பீஜே கருதினால், அதனை விளக்குவாரா?

இந்த இறைத்தூதரை விட, நித்தியானந்தா நல்லவர் போல காணப்படுகிறார். எப்படியென்றால், நித்தியானந்தா யாரையும் கடத்திக்கொண்டு வந்து அறையில் அடைத்து சம்மந்தம் பேசவில்லை. அவர் பணம் கொடுத்து விபச்சாரம் செய்துள்ளார்.

நித்தியானந்தா போர் செய்து, ஒரு பெண்ணின் அப்பாவையும், கணவனையும் கொன்றுவிட்டு, அப்பெண்ணை கற்பழிக்கவில்லை, ஆனால் இந்த இறைத்தூதர் இப்படி செய்தார் என்று அவரது நூல்களே சாட்சி சொல்கின்றன.

இப்படி எழுதுவதினால், நித்தியானந்தா செய்தது சரியானது என்று நாம் சொல்வதில்லை. அதற்கு பதிலாக மேற்கண்ட விதமாக நடந்துக்கொண்ட ஒரு நபரை இறைத்தூதர் என்று நம்பும் பீஜே அவர்கள் தங்கள் கண்களில் இருக்கும் துரும்பை பார்க்க தவறுவது ஏன் என்பது தான் கேள்வி.

நித்தியானந்தா போன்ற நபர்களை ஆதரிப்பவர்களுக்கு பீஜே சூட்டிய புகழாறம்:

"இத்தகைய கேவலமான போலிச்சாமியாருக்கு தமிழகக் காவல்துறை பட்டுக் கம்பளம் விரித்ததன் மூலம் தன்மீது தானே காரித்துப்பிக் கொண்டது "….

இது சித்தரிக்கப்பட்ட காட்சிகள் என்று நித்தியானந்தா கூறுவதை காவல் துறையினர் நம்பினால் அவர்கள் மாடுமேய்க்கத் தான் தகுதியானவர்களே தவிர காவல்பணிக்கு தகுதியானவர்கள் அல்ல. இது இந்து மதத்திற்கெதிரான தாக்குதல் என்று நித்தியானந்தா கூறுவதை காவல்துறை நம்பினால் அதைவிட முட்டாள்தனம் வேறு இருக்க முடியாது

நித்தியானந்தாவை விட அதிகபடியாக இன்னும் கேவலமான செயல்களை செய்த மேற்கண்ட மகானை பின்பற்றுபவர்களுக்கு யார் புகழாறம் சூட்டப்போகிறார்கள்? யார் கண்டிக்கப்போகிறார்கள்?

போனால் போகட்டும் போடா... இந்த பூமியில் நல்லவனாய் வாழ்ந்தவன் யாரடா?


 

http://isakoran.blogspot.com/2011/07/blog-post_3684.html

 

July 27, 2011

கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?

ஆன்சரிங் இஸ்லாம் ஈமெயில் உரையாடல்கள்

தலைப்பு: கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?

தேதி: 31 மே 2005

தலைப்பு: இறைவனின் கடைசி இறைத்தூதரின் பெயரை குறிப்பிடும் போது "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று பயன்படுத்துங்கள்?

அன்புள்ள ஐயா,

உங்கள் வாதங்கள் கோர்வையாக உள்ளது ஆனால், அதில் பகுத்தறிவு இல்லை. இறைவனின் கடைசி தூதரின் பெயரை குறிப்பிடும் போது "அவர் மீது சாந்து உண்டாவதாக" என்று நீங்கள் பயன்படுத்தவேண்டும் என்று உங்களுக்கு இஸ்லாமியனாகிய நான் அறிவுரை கூறுகிறேன். இப்படி பயன்படுத்துவது உங்கள் நம்பிக்கைக்கு (வாதங்களுக்கு) இடையூராக இருக்காது என்று நம்புகிறேன்.

மரியாதையுடன் இப்படிக்கு

Xxxxxxxx

எங்கள் பதில்:

உங்களுக்கு எங்கள் வாழ்த்துதல்கள்.

உங்கள் ஈமெயிலுக்காக நன்றி.

எங்களுடைய ஆன்சரிங் இஸ்லாம் கட்டுரைகளில் ஏன் நாங்கள் "அவர் மீது சாந்து உண்டாகட்டும் (PBUH)" என்று பயன்படுத்துவதில்லை என்பதற்கு சில காரணங்கள் உள்ளன.

(குறிப்பு: ஆங்கிலத்தில் "PBUH" என்று கூறினால் "peace be upon him" என்று அர்த்தம். அரபியில் "Salla Allahu Alaihi Wa Sallam (SAW)" என்பார்கள், இதன் பொருள் : "அல்லாஹ்வின் ஜெபங்கள் மற்றும் சாந்தி அவர் மீது இருப்பதாக".)

இவ்விரண்டும் கீழ்கண்ட குர்‍ஆன் வசனத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.

இந்த நபியின் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். மலக்குகளும் அவருக்காக அருளைத் தேடுகின்றனர். முஃமின்களே நீங்களும் அவர் மீது ஸலவாத்து சொல்லி அவர் மீது ஸலாமும் சொல்லுங்கள். (குர்‍ஆன் 33:56)

"அவர் மீது சாந்தி உண்டாகட்டும்" என்று கூறினாலோ அல்லது "ஸல்" என்று கூறினாலோ, முஹம்மது மீது சாந்தியும் ஜெபங்களும் உண்டாவதாக என்று பொருள். இவ்விரண்டில் எதனை நாம் பயன்படுத்தினாலும், அது ஏற்கனவே மரித்து தன் முடிவு நிர்ணயிக்கப்பட்ட ஒரு மனிதன் மீது ஆசீர்வாதத்தை கொடுக்கும் படி வேண்டிக்கொள்வதாக இருக்கிறது. அதே நேரத்தில் எங்கள் வேதம் கீழ்கண்டவாறு கூறுகிறது:

அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே (எபிரேயர் 9:27)

ஆக, ஒரு மனிதன் மரித்துவிட்டால், அந்த நபர் அல்லது சகோதரி, ஒன்று இறைவனிடமிருந்து பிரிக்கப்பட்டு துன்பம் அனுபவித்துக்கொண்டு இருக்கவேண்டும் அல்லது இறைவனுடைய பிரசன்னத்தின் மகிழ்வினால் நிரம்பி சந்தோஷத்தோடு இருக்கவேண்டும். ஆக, மேற்கண்ட இரண்டு நிலைகளில் ஏதாவது ஒரு நிலையில் இருக்கும் ஒரு நபருக்கு, உலகத்தில் உயிரோடு வாழ்பவர்களின் வேண்டுதல்கள் பாதிக்காது (இதனால் எந்த ஒரு உபயோகமும் இல்லை). ஒரு மனிதர் மரித்துவிட்டபிறகு அவருக்காக வேண்டுதல் செய்வது வீணான செயல் இதனால் உபயோகம் ஒன்றுமில்லை.

இன்னொரு முக்கியமான விவரம் என்னவென்றால், முஹம்மதுவின் பெயரை நாம் கூறும்போது, அதோடு கூட ஆசீர்வாதத்தையும் வேண்டுதல்களையும் நாம் சேர்த்து சொன்னால், "முஹம்மது உண்மையாகவே இறைவனின் தூதர்" என்று நாங்கள் (கிறிஸ்தவர்கள்) அங்கீகரித்தது போல் ஆகிவிடும். ஆக, பைபிளின் தெளிவாக வெளிப்பாடுகளின் படி, நாங்கள் முஹம்மதுவை நம்புவதில்லை, அவர் ஒரு நபி என்று நம்புவதில்லை.

கிறிஸ்தவனாகிய நான் உங்களிடம் வந்து, இனி "ஈஸா (இயேசு)" என்று நீங்கள் பயன்படுத்தும் போதெல்லாம் (கூறும் போதெல்லாம்) "ஆண்டவராகிய‌ இயேசுக் கிறிஸ்து" என்று கூறுங்கள் என்றுச் சொன்னால் அது சரியாக உங்களுக்கு தென்படுமா? "இயேசுவை ஆண்டவர்" என்று அழைப்பது, அவர் பழைய ஏற்பாட்டின் சர்வ வல்லவரான தேவனை குறிப்பிடுவதாக இருக்கும். (அடோனய் = பழைய ஏற்பாட்டில் ஆண்டவர்).

இப்படி நீங்கள் இயேசு ஆண்டவர் என்று அழைத்தால், அது உங்கள் இஸ்லாமிய நம்பிக்கைக்கு எதிரானது என்பதை அறிந்தும், நீங்கள் இயேசுவை இப்படி அழைக்கத்தான் வேண்டும் என்று நான் உங்களுக்கு கட்டளையிட்டு நேரத்தை வீணடிக்கமுடியுமா? இருந்த போதிலும் வேதம் தெளிவாக கீழ்கண்டவிதமாக கூறுகிறது:

ரோமர் 10:9

என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்.

இந்த சந்தர்ப்பத்தில் ஒரு கேள்வியை உங்களிடம் கேட்கட்டும்: இன்று நீங்கள் இயேசுவை பின்பற்றுபவராக மாற விரும்புகிறீர்களா? இன்று நீங்கள் மரித்தால் எங்கு போவீர்கள்? நீங்கள் போகும் இடம் துன்பம் நிறைந்த இடமா? அல்லது இறைவனின் பிரசன்னம் இருக்கும் இடமா? இதில் எதை நீங்கள் தெரிந்தெடுக்கப் போகிறீர்கள்? எல்லா தீர்க்கதரிசிகள் சொன்ன சத்தியமாம் இயேசுக் கிறிஸ்து மீது நம்பிக்கை வைத்து, உங்கள் வாயினால் அவர் தான் இறைவன் என்று நம்புங்கள் என்று உங்களை நான் அழைக்கிறேன். நீங்கள் எடுக்கும் இந்த முடிவிற்காக ஒருபோதும் நீங்கள் மனம் வருந்தமாட்டீர்கள்.

இயேசு தாமாகவே சொன்ன இந்த வார்த்தைகளை கவனித்துப்பாருங்கள்:

யோவான் 5:24

என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

உங்களுக்கு சமாதானம்

லாசரஸ்

முஹம்மதுவின் மீது "சாந்தியை" கூறும் இந்த வார்த்தைகளைக் குறித்து மேலும் அறிய, இந்த தொடுப்பை (http://www.answering-islam.org/Index/P/pbuh.html) சொடுக்கவும்

ஆங்கில மூலம்: http://www.answering-islam.org/Emails/pbuh.htm


 

http://isakoran.blogspot.com/2011/07/pbuh.html

July 25, 2011

சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?


ஆன்சரிங் இஸ்லாம் ஈமெயில் உரையாடல்கள்

கட்டுரையின் தலைப்பு: சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?

தேதி: 14 மே 2005

தலைப்பு: கொலம்பியாவிலிருந்து...

ஹலோ, நான் கொலம்பியாவில் இஸ்லாமியர்கள் மத்தியிலே கிறிஸ்தவ மிஷனரியாக வேலை பார்த்துக்கொண்டு இருக்கிறேன். இஸ்லாமியர்கள் இன்ஜில் மீதும், இயேசுவின் மீதும் நம்பிக்கை கொள்ளாமல் இருப்பதற்கு அவர்கள் சொல்லும் காரணம் என்னவென்றால், "நாங்கள் நம்பிக்கை கொள்ள தேவையில்லை, எங்களுக்கு அவசியமில்லை" என்பதாகும். இஸ்லாமியர்கள் தீர்க்கதரிசிகளை, வேத புத்தகங்களை, அதிகாரத்தில் அமரும் அரசாங்கத்தோடு ஒப்பிட்டு பேசுகிறார்கள். உதாரணத்திற்கு, ஒரு இஸ்லாமியர் இவ்விதமாக கூறுகிறார் "தோரா, ஜபூர், இன்ஜில் மற்றும் குர்‍‍ஆன் என்பது நான்கு பரிசுத்த வேதங்களாகும். இந்த நான்கில் முதல் மூன்று கடந்த காலத்திற்கு சம்மந்தப்பட்டது, ஆனால் குர்‍ஆனோ தற்காலத்திற்கு சம்மந்தப்பட்டது என்கிறார்கள். இது எப்படியென்றால், கடந்த 35 ஆண்டுகளில் கொலம்பியாவில் நான்கு விதமான அரசாங்கங்கள் ஆட்சி செய்துள்ளன. முதலாவதாக, சிஹானௌக் அரசர் ஆட்சி புரிந்தார், அதன் பிறகு அமெரிக்காவின் ஆதரவுடன் லான் நோல் அரசாங்கம் ஆட்சி புரிந்தது அதன் பிறகு,போல் பாட் என்பவர் ஆட்சி புரிந்தார் இப்படி தொடர்ந்து வருகிறது. இதே போலத்தான் தோராவும், ஜபூரும், இன்ஜிலும் இருக்கிறது, அதாவது ஒரு ஆட்சிக்கு பிறகு (வேதத்திற்கு பிறகு) இன்னொரு ஆட்சி வருகிறது. தற்காலத்தில் ஹுன் சென் நம்முடைய கொலம்பியாவின் ஆட்சியாளராக இருக்கிறார், அதனால் அவரது சட்டத்தின் படியே நாம் வாழவேண்டும், இதற்கு முன்பு ஆட்சி செய்தவர்களின் சட்டத்தின் படி நாம் வாழக்கூடாது". இதே போலத் தான் நாம் அனைவரும் முஹம்மதுவை பின்பற்றவேண்டும், இன்று நம்முடைய சமீபத்திய வேதமாகிய குர்‍ஆனை பின்பற்றவேண்டும் என்று இஸ்லாமியர்கள் கூறுகிறார்கள். இன்னும் இஸ்லாமியர்கள் ஒரு படி மேலே சென்று, இயேசு மோசேவையும், மோசேயின் சட்டத்தையும் இரத்து செய்துவிட்டார். (அதே போல இஸ்லாம் இயேசுவையும் அவரது போதனைகளையும் இரத்து செய்துவிட்டது என்று கூறுகிறார்கள்). நான் இந்த கேள்விக்கு தளங்களில் பதிலை தேடி கண்டுபிடிக்கவில்லை அதனால் மெயில் அனுப்புகிறேன். உங்களுக்கு என் நன்றி

இப்படிக்கு,

உங்கள் சகோதரன் (T)


எங்கள் பதில்:

அன்புள்ளபவருக்கு,

கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுவின் பெயரில் உங்களுக்கு எங்கள் வாழ்த்துதல்கள்.

இஸ்லாமியர்கள் உங்களிடம் கூறிய வாதத்தில் அடிப்படை தவறு உள்ளது.

உண்மையாகவே, தற்போது ஆட்சி புரியும் அரசாங்கமும் தடையில்லாமல் தொடர்ந்து பல ஆண்டுகள் ஆட்சி புரியப்போவதில்லை. இதன் பொருள் என்னவென்றால், அந்த இஸ்லாமியர்களின் கருத்துப்படி, அடுத்த அரசு எப்போது ஆட்சிக்கு வருமோ, அப்போது இந்த இஸ்லாமியர்கள் குர்‍ஆனை பின்பற்றுவதையும், இஸ்லாமை பின்பற்றுவதையும் நிறுத்திவிடவேண்டும் மற்றும் முஹம்மதுவிற்கு அடுத்ததாக எந்த மார்க்கம் அல்லது வெளிப்பாடு வந்ததோ அதனை பின்பற்றவேண்டும். (உதாரணத்திற்குச் சொல்லவேண்டுமென்றால், முஹம்மதுவிற்கு அடுத்ததாக வந்த மார்க்கங்கள் மர்மனோனிஸம் அல்லது பஹாயிஸத்தை இஸ்லாமியர்கள் பின் பற்றவேண்டும்).

உண்மையில், கடந்த 35 ஆண்டுகளிலிருந்து 50 ஆண்டுகள் வரை ஐந்து அரசாங்கங்களை நீங்கள் கண்டு இருக்கிறீர்கள் அப்படியானால், இன்னொரு புதிய அரசு வரும் என்று எதிர்பார்க்காமல் நீங்கள் எல்லாரும் மர்மோன்ஸ் என்றுச் சொல்லக்கூடிய மார்க்கத்தவர்களாக ஏற்கனவே மாறியிருக்கவேண்டும்.

இப்படி நாம் சொல்வதினால், இஸ்லாமிய நண்பர்கள் உடனே இஸ்லாமை விட்டுவிட்டு வேறு மார்க்கத்திற்கு மாறமாட்டார்கள் என்று எனக்கு நிச்சயமாகத் தெரியும், இருந்தாலும் ஏன் சொல்கிறேன் என்றால், இஸ்லாமியர்களின் இந்த மாறிக்கொண்டு இருக்கும் அரசு எடுத்துக்காட்டுகள் உபயோகமற்றவை தவறானவை என்பதை அவர்களுக்கு எடுத்துக் காட்டவே இப்படிச் சொன்னேன். ஆகையால், கிறிஸ்தவராகிய நீங்கள் கூட (இந்த மெயிலை எழுதியர்) இஸ்லாமியர்களின் லாஜிக்கின் படி இஸ்லாமியராக மாறவேண்டிய அவசியமில்லை.

முக்கியமான அம்சம் இது தான்: இஸ்லாமுக்கு பிறகு மர்மோனிஸம் மற்றும் பஹாயிஸம் வந்து இருந்தாலும், இஸ்லாமியர்கள் அவைகளை புறந்தள்ளிவிடுவார்கள், ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். ஏனென்றால், இம்மார்க்கங்கள் இறைவனிடமிருந்து வரவில்லை என்று அவர்கள் நம்புகிறார்கள். இஸ்லாமியர்கள் ஜோசப் ஸ்மித் என்பவரையும், பஹாயுல்லாவும் பொய் நபிகள் (தீர்க்கதரிசிகள்) என்று நம்புகிறார்கள்.

இங்கு ஒரு மார்க்கம் "முன்னால் வந்ததா அல்லது அடுத்தபடியாக வந்ததா" என்பது கேள்வியில்லை. ஆனால், முக்கியமான கேள்வி என்னவென்றால்: அந்த நபர் உண்மையாகவே நபியாக இருந்தரா இல்லையா என்பது தான்?

இஸ்லாமியர்கள் ஏன் பஹாயுல்லாவை நபி என்று ஏற்றுக்கொள்வதில்லை? (பஹாயுல்லா என்பவர் சமீப காலத்தில் இஸ்லாமை போல வெளிப்பாட்டை கொடுத்தார். மட்டுமல்ல, அவர் இஸ்லாமியர்கள் போல குர்‍ஆனும் ,பைபிளும் இறைவனிடமிருந்து வந்தது என்று நம்புகிறார். இஸ்லாமியர்கள் எப்படி தோராவும், இன்ஜிலும் இறைவனால் அருளப்பட்டது என்று நம்புகிறார்களோ அது போல, இவர்களும் நம்புகிறார்கள்). பஹாயுல்லா இறைவனிடமிருந்து வந்தவர் என்று ஏன் இஸ்லாமியர்கள் நம்புவதில்லை? ஏனென்றால், இஸ்லாம் இறைவனால் அனுப்புப்பட்ட உண்மையான மார்க்கம் என்று பஹாய் நம்பினாலும், அவரது செய்தி இஸ்லாமுக்கு எதிராக முரண்பட்டு உள்ளது. இதனால் இஸ்லாமியர்கள் பஹாயுல்லாவை நபி என்று நம்புவதில்லை. மட்டுமல்ல, இஸ்லாமியர்கள் பஹாயுல்லாவை இஸ்லாமோடு ஒப்பிட்டு எடை போட்டு அவரை எதிர்க்கிறார்கள். இதே போலத் தான், கிறிஸ்தவர்களாகிய நாங்கள் முஹம்மதுவை அவருக்கு முன்பாக வந்த வேதத்தின் செய்தியோடு ஒப்புடுகிறோம். அவருக்கு ஒரு உண்மை நபிக்கான தகுதி உண்டா? அவர் முந்தைய வேதம் சொல்லும் நபிக்கான பரிட்சையில் வெற்றி பெறுகிறாரா என்று நாங்கள் சரி பார்க்கிறோம். முஹம்மது இந்த தீர்க்கதரிசி பரிட்சையில் தோற்று போகிறார், ஆகையால் நாங்கள் அவரை நபி என்று நம்புவதில்லை அவரை நிராகரிக்கிறோம். அவர் இறைவனிடமிருந்து வந்த நபியாக இருக்க வாய்ப்பே இல்லை. ஆக, அவர் இயேசுவை மாற்றி அந்த இடத்தில் "தான்" உட்காரமுடியாது அல்லது இயேசுவின் மார்க்கத்தை இரத்து செய்து தன் மார்க்கத்தை நிலை நிறுத்தமுடியாது .

கடைசியாக, இஸ்லாமியர்கள் அடிக்கடி இவ்விதமாக கூறுவார்கள்: "மோசேயின் செய்தியை யூதர்கள் திருத்திவிட்டதால், இயேசு வந்து அவைகளை சரிப்படுத்தினார் மற்றும் தேவனின் உண்மையான செய்தியை (இஸ்லாமை) கொண்டுவந்தார். அதே போல, கிறிஸ்தவர்கள் இயேசுவின் செய்தியை திருத்திவிட்டதால் அவருடைய போதனையிலிருந்து வழிவிலகி சென்றுவிட்டதால், இறைவன் அவர்களை சரிப்படுத்த முஹம்மதுவை அனுப்பினார்".

இது இஸ்லாமியர்களின் தவறான கருத்தாகும். பழைய ஏற்பாட்டை திருத்தவே நான் வந்தேன் என்று இயேசு ஒரு போதும் கூறவே இல்லை. அவர் பழைய ஏற்பாட்டை நிறைவேற்ற வந்தார். உண்மையில், பைபிளின் ஒரு பாகம் பழைய ஏற்பாடு ஆகும். ஆனால், முஹம்மதுவும், இஸ்லாமும் பைபிளை பக்கத்தில் வைத்துவிட்டார்கள். இனி பைபிள் உபயோகப்படாது என்று அவர்கள் கூறுகிறார்கள். குர்‍ஆன் பைபிளின் இடத்தை பிடித்துவிட்டது என்று கூறுகிறார்கள்.

பைபிளின் செய்தியும், குர்‍ஆனின் செய்தியும் ஒன்றல்ல. இஸ்லாம் சொல்லும் செய்தி பைபிள் சொல்லும் செய்தி அல்ல, அது பைபிளுக்கு எதிரானதாகும். பழைய ஏற்பாட்டின் தொடர்ச்சியாக புதிய ஏற்பாடு இருப்பதுபோல, பைபிளின் தொடர்ச்சி குர்‍ஆன் அல்ல. கிறிஸ்தவத்தின் தொடர்ச்சி இஸ்லாம் அல்ல.

பழைய ஏற்பாட்டின் மற்றும் புதிய ஏற்பாட்டின் முக்கியமான அடிப்படை கோட்பாடுகளோடு குர்‍ஆன் முரண்படுகிறது.

உதாரணத்திற்கு, தோராவின் படி, பாவ நிவாரணத்திற்கு ஒரு மிருகத்தை பலியிடவேண்டும் என்ற கோட்பாட்டை எடுத்துக்கொள்வோம். பழைய ஏற்பாட்டின் படி பாவ நிவாரணத்திற்கு மிருகத்தை பலியிடுவது முக்கியமானதாகும். இயேசு சிலுவையில் மரித்ததினால் இந்த கோட்பாடு நிறைவேறியது. பழைய ஏற்பாடும், புதிய ஏற்பாடும் இந்த காரியத்தில் ஒன்றோடு ஒன்று கலந்துவிடுகிறது. ஆனால், தோராவில் இப்படிப்பட்ட பலியிடும் கோட்பாடு உள்ளது என்றுகூட குர்‍ஆனுக்கு தெரியாது. தோரா பற்றி கூறும் போதும்,குர்‍ஆன் இதைப் பற்றி சொல்வது இல்லை. குர்‍ஆன் இந்த பாவ நிவாரண பலியை நிராகரிக்கிறது. இஸ்லாமின் படி மனிதன் நல்லவனாக இருக்கிறான் மற்றும் அவனுக்கு இரட்சிப்பு அவசியமில்லை என்று கருதுகிறது.

கிறிஸ்தவத்தோடு ஒப்பிடும் போது, இஸ்லாமிய மதம் தன் செய்தியில் அடிப்படை கோட்பாடுகளிலேயே வித்தியாசப்படுகிறது. இஸ்லாமுக்கு பிறகு வரும் மதங்கள் பொய்யானவை என்று எப்படி இஸ்லாமியர்கள் கூறுகிறார்களோ, அதே போல இஸ்லாம் கூட‌ ஒரு பொய்யான மதமாகும்.

உங்கள் நண்பர் இந்த சத்தியங்களை ஜீரணித்துக்கொள்ளமாட்டார், ஆனால், உங்களுக்கு இவைகள் உதவியாக இருந்திருக்கும் என்று நான் நம்புகிறேன்.

முன்னால் வந்ததா பின்னால் வந்ததா என்பது கேள்வியில்லை, அந்த மார்க்கம் உண்மையாகவே உண்மையான மார்க்கமா என்பது தான்.

உங்கள் இஸ்லாமிய நண்பர்களுடன் நீங்கள் பேசும் போது உங்களுக்கு கர்த்தர் ஞானத்தை அருளுவாராக.

ஜோசன் கர்ட்ஜ்

ஆன்சரிங் இஸ்லாம்

மூலம்: http://www.answering-islam.org/Emails/latest_revelation.htm