அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

November 21, 2010

அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...

ஒரு அரபு பெண்ணைப் பற்றி முஹம்மதுவிடம் அவரது தோழர்கள் அறிவித்தார்கள், அந்தப் பெண்ணை அழைத்துவரும் படி முஹம்மது கூறினார், அந்தப் பெண்ணும் வந்தாள். தன்னை திருமணம் செய்துக்கொள்ளும்படி முஹம்மது கூற, அவரை திருமணம் செய்துக்கொள்ள விரும்பாத அந்தப் பெண் முஹம்மதுவிடமிருந்து காக்கும்படி அல்லாஹ்விடம் பாதுகாப்பு கோரினாள், முஹம்மது அப்பெண்ணை அனுப்பிவிட்டார். இந்த நிகழ்ச்சி சஹீஹ் புகாரி என்றுச் சொல்லக்கூடிய ஹதீஸ் தொகுப்பில் உள்ளது, கீழே அந்த ஹதீஸை கொடுத்துள்ளேன், படிக்கவும். அதன் பிறகு சில கேள்விகள் கொடுக்கப்பட்டுள்ளது, இஸ்லாமியர்கள் அவைகளுக்கு பதில்களைத் தருவார்களா?

பாகம் 6, அத்தியாயம் 74, எண் 5637

ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) கூறினார்

நபி(ஸல்) அவர்களிடம் ஓர் அரபுப் பெண்ணைப் பற்றிக் கூறப்பட்டது. நபி(ஸல்) அவர்கள் அப்பெண்ணை (மணம் புரிந்து கொள்ள) அழைத்து வரும்படி அபூ உஸைத் அஸ்ஸாஇதீ(ரலி) அவர்களுக்கு உத்தரவிட, அவர் அப்பெண்ணை அழைத்து வர ஆளனுப்பினார். அவ்வாறே அந்தப் பெண் வந்து 'பன} சாஇதா' குலத்தாரின் கோட்டை ஒன்றில் தங்கினார். நபி(ஸல்) அவர்கள் புறப்பட்டு அப்பெண்மணியிடம் வந்து, அவர் (தங்கியிருந்த) இடத்தில் நுழைய அங்கே அந்தப் பெண் தலையைக் கவிழ்த்தபடி (அமர்ந்து) இருந்தார். நபி(ஸல்) அவர்கள் அப்பெண்ணிடம் (தம்மை மணந்துகொள்ள சம்மதம் கேட்டுப்) பேசியபோது அவள், 'உங்களிடமிருந்து நான் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறேன்' என்று சொன்னாள். நபி(ஸல்) அவர்கள் 'என்னிடமிருந்து உனக்குப் பாதுகாப்பு அளித்துவிட்டேன்' என்று கூறினார்கள். அப்போது மக்கள் (அந்தப் பெண்ணிடம்), 'இவர்கள் யார் என்று உனக்குத் தெரியுமா?' என்று கேட்க, அவள் 'தெரியாது' என்று பதிலளித்தாள். மக்கள், 'இவர்கள் தாம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் உன்னைப் பெண் பேசுவதற்காக வந்தார்கள்' என்று கூறினார்கள். அந்தப் பெண் 'அவர்களை மணந்து கொள்ளும் நற்பேற்றை நான் இழந்து துர்பாக்கியவாதியாகி விட்டேனே' என்று (வருத்தத்துடன்) கூறினாள். . . . . . .

உலக மக்கள் பின்பற்றத் தகுந்த ஒரு நல்ல மாதிரியான வாழ்வை முஹம்மது வாழ்ந்துச் சென்றுள்ளார் என்று இஸ்லாமியர்கள் கூறுவார்கள். எல்லாரும் முஹம்மது சொல்வதை கேட்டு பின்பற்றவேண்டும் என்று இஸ்லாமியர்கள் கூறுகிறார்கள். முக்கியமாக கிறிஸ்தவர்கள் நம்பும் தீர்க்கதரிசிகளைப் போல‌ இவரும் இறைவன் அனுப்பிய நபி என்று சொல்கிறார்கள்.

இஸ்லாமியர்களின் வார்த்தைகளை ஆராயாமல் அப்படியே நம்பி இஸ்லாமை ஏற்றுக்கொண்டு உலக மக்கள் தங்கள் வாழ்வை நாசமாக்கிக்கொள்ள முடியாது. இஸ்லாம் நமக்குச் சொல்லும் முஹம்மதுவின் வாழ்க்கையை ஆராய்ந்து சரி பார்த்து முடிவு எடுக்கவேண்டும்.

நாம் மேலே கண்ட ஹதீஸின் படி, முஹம்மது ஒரு ஆன்மீக வழிகாட்டி என்று நம்பமுடியாது, அவருடைய எண்ணம், செயல் மற்றும் நோக்கம் என்ன என்பதை ஓரளவிற்கு இந்த ஹதீஸ் மூலமாக அறிந்துக்கொள்ளலாம். ஆகவே, கீழ்கண்ட கேள்விகளுக்கு இஸ்லாமியர்கள் பதில் கூறுவார்களா? சரியான பதிலைக் கூறி, தங்கள் முஹம்மது மீது சுமத்தப்படும் களங்கத்தை துடைப்பார்களா? இது எல்லா இஸ்லாமியர்களின் மீது விழுந்த கடமையல்லவா?

மேலே கண்ட ஹதீஸின் அடிப்படையில், இஸ்லாமியர்களுக்கு சில கேள்விகள்:

1) முஹம்மதுவிடம் யாரைப் பற்றி கூறப்பட்டது?


2) யார் முஹம்மதுவிடம் அந்த அரபுப்பெண்ணைப் பற்றி கூறியிருப்பார்கள்? (நபித்தோழர்கள் என அழைக்கப்பட்ட முஹம்மதுவின் தோழர்கள் கூறியிருப்பார்கள் சரியா தவறா?)


3) முஹம்மதுவிடம் என்ன கூறியிருப்பார்கள்? அந்த அரபுப்பெண்ணுக்கு உடல் நிலை சரியில்லை ஒரு முறை வந்து அவளுக்காக அல்லாஹ்விடம் துவா செய்யுங்கள் (வேண்டிக்கொள்ளுங்கள்) என்று கூறியிருப்பார்களா? அல்லது அவளுக்கு இருக்கும் பிரச்சனையை தீர்த்துவைக்கும் படி கூறியிருப்பார்களா?


4) மேலே கண்ட ஹ‌தீஸின் படி, அவளுடைய அழகைப் பற்றி வர்ணித்து கூறியிருப்பார்கள் என்பது என் கருத்து, இது சரியா தவறா?


5) அந்தப் பெண்ணை அழைத்துவந்த பிறகு, முஹம்மது அப்பெண்ணை திருமணம் செய்துக்கொள்ள தன் விருப்பத்தை தெரிவித்ததிலிருந்து, அப்பெண்ணின் அழகு பற்றி தான் நபித்தோழர்கள் அவரிடம் கூறியிருப்பார்கள் என்று அறிய முடிகிறது.


6) கேள்விகள் 4, 5 தவறானது என்று இஸ்லாமியர்கள் சொல்வார்களானால், வேறு எதைப் பற்றி நபித்தோழர்கள் கூறியிருப்பார்கள் என்று இஸ்லாமியர்கள் விளக்குவார்களா?


7) முஹம்மதுவிற்கு அனேக மனைவிகள் இருக்கும் போது, இன்னும் மனைவிகள் முஹம்மதுவிற்கு தேவை என்று நபித்தோழர்களுக்கு எப்படித் தெரியும்?


8) முஹம்மதுவின் விருப்பம்/ஆசை/காமம் எதுவென்று நபித்தோழர்களுக்கு நன்றாக தெரிந்து இருக்கிறது, அதனால், தான் தங்கள் குருவிற்கு விருப்பமானது எது என்று புரிந்துக்கொண்டவர்களாக கண்ணில் பட்ட அழகான பெண் பற்றி தங்கள் குருவிடம் சொன்னார்கள். பெண்கள் என்றால் அதிக விருப்பமில்லாத ஒரு மனிதரிடம் அவருடைய சீடர்கள் பெண்களைப் பற்றி கூறுவார்களா?


9) அபூ உஸைத் அஸ்ஸாஇதீ(ரலி) என்பவர் என்ன செய்யவேண்டும் என்று முஹம்மது உத்தரவிட்டார்?


10) முஹம்மதுவின் இந்த உத்தரவின் படி, அந்த அரபுப்பெண்ணை அபூ உஸைத் அழைத்துவந்தாரா? இல்லையா?


11) அழைத்து வரப்பட்ட பெண் எங்கு தங்க வைக்கப்பட்டாள்? ஏன் அந்த பெண் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தங்கவைக்கப்பட்டாள்?


12) ஒரு குறிப்பிட்ட கோட்டையில் தங்கி இருந்த அந்த பெண்ணை சந்திக்கச் சென்றது யார்?


13) முஹம்மது அப்பெண்ணிடம் என்ன கூறினார்?


14) முஹம்மது தம்மை திருமணம் செய்துக்கொள்ளும்படி அப்பெண்ணிடம் கூறினாரா?


15) முஹம்மதுவின் கேள்விக்கு அந்தப்பெண் கொடுத்த பதில் என்ன?


16) முஹம்மதுவை திருமணம் செய்துக்கொள்ள அந்தப் பெண் சம்மதம் தெரிவித்தாளா?


17) ஏன், அந்தப் பெண் "உம்மிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்பு கோருகிறேன்" என்று கூறினாள்?


18) ஒரு பெண்ணை திருமணம் செய்துக்கொள்ளவேண்டும் என்ற விருப்பமிருப்பவர்கள், அப்பெண்ணை தனியாக அழைத்து, ஒரு கோட்டையில் தங்க வைத்து பெண் பேசுவார்களா? அல்லது அப்பெண்ணின் பெற்றோர்களிடம், அல்லது பெரியவர்களிடம் முதலாவது தன் விருப்பத்தைச் சொல்லி, பெற்றோர்கள் ஒப்புக்கொண்ட பிறகு, பெற்றோர்களின் உதவியுடன் தன் திருமண விருப்பத்தை அப்பெண்ணிடம் சொல்ல முயற்சி எடுப்பார்களா?


19) ஒரு வழிகாட்டி என்ற நிலையில் இருக்கும் முஹம்மதுவிற்கு, இதுவரை இருக்கும் மனைவிகள் போதாதா? இன்னும் மனைவிகள் தேவையா? கணக்கில்லாமல் திருமணம் செய்துக்கொள்ள விரும்பும் ஒருவர் எப்படி உலக மக்களுக்கு வழிகாட்டியாக இருக்க முடியும்?


20) அந்த பெண்ணின் மறுப்பிற்கு முஹம்மது அளித்த பதில் என்ன?

இப்போது நாம் பார்க்கப்போகும் கேள்விகள், ரௌடித்தனம் செய்து அப்பெண்ணை கடத்திக்கொண்டு வந்திருக்கக்கூடும் என்ற சந்தேகத்தை உண்டாக்கும்.


21) முஹம்மது "பாதுகாப்பு" அளித்துவிட்டேன் என்று கூறிச் சென்றுவிட்ட பிறகு, அந்த பெண்ணிடம் மக்கள் என்ன கூறினார்கள்?


22) "இவர் யார் என்று உனக்குத் தெரியுமா" என்று மக்கள் கேட்டபோது, தனக்கு "தெரியாது" என்று அப்பெண் பதில் கூறியிருக்கிறாள். அப்படியானால், இந்தப் பெண்ணை நபித்தோழர் அபூ உஸைத் எப்படி அழைத்துக்கொண்டு வந்து ஒரு குறிப்பிட்ட இடத்தில் தங்க வைத்திருந்தார்?


23) அந்தப்பெண்ணை அபூ உஸைத் அழைக்க சென்றபோது, அப்பெண்ணிடம் என்ன கூறியிருந்திருப்பார்?


24) உன்னை இறைத்தூதர் திருமணம் செய்துக்கொள்ள அழைப்பு விடுத்துள்ளார் என்று சொல்லி அழைத்து இருந்திருப்பாரா?


25) அல்லது ஒரு முக்கியமான நபர் உன்னை அழைத்துள்ளார், அவர் உன்னிடம் பேசவேண்டுமாம் என்று சொல்லி இருந்திருப்பாரா?


26) யாராவது ஒரு பெண், உன்னை யாரோ ஒருவர் அழைக்கிறார் வா! என்று அழைக்கும் போது வந்துவிடுவாளா?


27) மேற்கண்ட ஹதீஸின் படி, தன்னிடம் பேசியவர் "இறைத்தூதர்" என்று தனக்கு தெரியாது, அல்லது யார் என்று தனக்குத் தெரியாது என்று அப்பெண் கூறியிருப்பதிலிருந்து, அபூ உஸைத் அப்பெண்ணை "பலவந்தப்படுத்தி, கடத்திக்கொண்டு வந்து இருக்கவேண்டும்" என்று புரிகிறது? இந்த முடிவு சரியானது இல்லை என்று நாம் கருதினால்,


தன்னை அழைத்தவர் யார்?


ஏன் என்னை அழைக்கிறார்?


நான் ஏன் வரவேண்டும்?


என்னை கட்டாயப்படுத்தி வரவேண்டும் என்றுச் சொல்லும் நீங்கள் யார்?


உங்களுக்கு என்ன அதிகாரம் உள்ளது?


என்று அப்பெண் முதலிலேயே கூறியிருப்பாள், அந்தப் பெண்ணின் இந்த கேள்விகள் சாத்தியமா இல்லையா?

28) கேள்வி எண் 27ல் கூறப்பட்ட கேள்விகளை அப்பெண் கேட்டு இருந்திருப்பாள், அப்போது அபூ உஸைத் என்ன பதில் கூறியிருந்திருப்பார்? இதற்கெல்லாம் நான் பதில் சொல்லமாட்டேன், கூப்பிட்டால் வரவேண்டும் அவ்வளவு தான் என்று கூறியிருப்பாரா? அல்லது என்னை அனுப்பியவர் இறைத்தூதர் முஹம்மது ஆவார், அவர் உன்னிடம் பேசவேண்டுமாம், அவர் உன்னை திருமணம் செய்துகொள்ள விரும்புகிறார் என்று பதில் சொல்லியிருந்திருப்பாரா?


29) நீ கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் நான் பதில் சொல்லமாட்டேன் என்றுச் சொல்லியிருந்தால், அந்தப்பெண் வர மறுத்து இருந்திருப்பாள், அப்போது அவளை கடத்திக்கொண்டு வந்து, அந்த கோட்டையில் இருக்கும் படி செய்திருப்பார்கள், ஆக, இந்த செயல், முஹம்மதுவின் தோழர்கள் தங்கள் குருவிற்காக பெண்களை கட்டாயப்படுத்தி, கடத்திக்கொண்டு வருகிறவர்களாக தென்படுவார்கள், இது சரியானதா? இது ஏற்கத்தகுந்ததா?


30) இல்லை, கேள்வி 29ல் கூறப்பட்டது தவறு, அபூ உஸைத், அப்பெண்ணிடம் யார் அழைக்கிறார்கள், என்ன காரணத்திற்காக அழைக்கிறார்கள் என்று சொல்லி இருப்பார் என்று இஸ்லாமியர்கள் சொன்னால், மேற்கண்ட ஹதீஸின் படி, இது கூட ஏற்கத்தகுந்தது அல்ல, காரணம் என்னவென்றால், மக்கள் அப்பெண்ணிடம் கேள்வி கேட்டப்போது, "அவர் யார் என்று எனக்கு தெரியாது" என்று பதில் அளித்து இருக்கிறாள். ஆக, அப்பெண் சொல்லிய பதில் மூலமாக நாம் அறிவது என்னவென்றால், அந்தப்பெண்ணை பயப்படவைத்து, கடத்திக்கொண்டு வந்து இருக்கவேண்டும்? அல்லது அவர் இறைத்தூதர் என்று ஏற்கனவே தெரிந்திருந்தும் அப்பெண் அவரை திருமணம் செய்துக்கொள்ள விருப்பமில்லாதவளாக "எனக்கு அவர் யார் என்று தெரியவில்லை என்று பொய் சொல்லி இருக்கவேண்டும்".


31) அந்தப் பெண் பொய் சொல்லியிருந்தாலும், உடனே, அபூ உஸைத் சொல்லியிருப்பார், இல்லை, இந்த பெண் பொய் சொல்கிறாள், நான் ஏற்கனவே அவளிடம் எல்லா விவரங்களையும் சொல்லியிருக்கிறேன் என்று சொல்லியிருப்பார்கள். ஆனால், இப்படி நடந்ததாக தெரியவில்லை. ஆக, தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி கொண்டு வந்திருக்கவேண்டும், தன்னை பாதுக்காத்துக்கொள்ள அந்த பெண் "அல்லாஹ்விடமிருந்து பாதுகாப்பு" கோரியிருக்கவேண்டும், இந்த முடிவிற்குத் தான் நாம் வரமுடியும்.


32) "நான் துர்பாக்கியவதியாகிவிட்டேன்" என்று அந்தப் பெண் சொன்னாள் என்று ஹதீஸ் சொல்வது ஏற்கத்தகுந்தது அல்ல, ஏனென்றால், இந்தப் பெண் தன் தவறுக்காக வருந்துகிறாள், உம்மை மண‌ந்துக்கொள்ளும் நற்பேற்றை இழந்தேன் என்று அப்பெண் வருந்துகிறாள் என்று முஹம்மதுவிற்கு மறுபடியும் சொல்லியிருந்தால், அவர் வந்து அவளை திருமணம் செய்துக்கொண்டு இருந்திருப்பார், இதில் எந்த சந்தேகமும் இல்லை. அறியாமையில் தவறு செய்தாள், இப்போது விரும்புகிறாள் எனவே திருமணம் செய்துக்கொள்வதில் தவறு இல்லை என்று முஹம்மது சொல்லி திருமணம் செய்துகொண்டு இருந்திருப்பார். இந்த பெண்ணிடம் ம‌றுபடியும் பேசி திருமணம் செய்துக்கொண்டதாக, ஏதாவது ஹதீஸ் இருந்தால் இஸ்லாமியர்கள் முன்வைக்கலாம்.


33) முஹம்மதுவின் ஒவ்வொரு திருமணத்திற்கும் ஒரு நல்ல காரணம் இருக்கும், ஒரு நியாயம் இருக்கும் என்றுச் சொல்லும் இஸ்லாமியர்கள், முஹம்மது இப்பெண்ணை திருமணம் செய்துக்கொள்வதற்கு அல்லாஹ்விடமிருந்து இறங்கிய காரணமென்ன? இப்பெண்ணை திருமணம் செய்துக்கொள்ள முஹம்மது விரும்பியதற்கு காரணமென்ன? அந்த பெண்ணின் அழகா? அல்லது வேறு என்ன காரணம் இருக்கமுடியும்? உம்மை திருமணம் செய்துக்கொள்ளமாட்டேன் என்றுச் சொன்னாள், சரி என்று ஒப்புக்கொண்டு சென்றுவிட்டார், இதில் தெய்வீக காரணம் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. விரும்பினார், மறுத்துவிட்டாள் சரி என்று விட்டுவிட்டார் அவ்வளவு தான். முஹம்மதுவிற்கு பெண்கள் விஷயத்தில் எப்போதும் திருப்தி இருக்காதா?


மேற்கண்ட விவரங்களிலிருந்து நாம் அறிவது என்னவென்றால், முஹம்மதுவின் விருப்பம் என்ன? அவருடைய நாடித்துடிப்பு என்னவென்று தன்னுடைய தோழர்களுக்கு தெரிந்து இருக்கிறது. எனவே கண்ணில் பட்ட நல்ல அழகான பெண்கள் பற்றி அவர்கள் அவரிடம் கூறியிருக்கிறார்கள். மேற்கண்ட ஹதீஸ் மூலம் அறிவது என்னவென்றால், கட்டாயப்படுத்தி அழைத்துக்கொண்டு வந்து ஒரு அறைக்குள் அடைத்து சம்மந்தம் பேசும் இறைத்தூரதை நாம் காண்கின்றோம். அல்லாஹ்விடம் அப்பெண் பாதுகாப்பு கோரிவிட்டதால், அவள் தப்பித்துவிட்டாள். இத்தனை மனைவிகள் தனக்கு இருக்கும் போதும், இன்னும் ஏன் பெண்ணாசை முஹம்மதுவிற்கு விடவில்லை?

இவரையா எல்லாரும் பின்பற்றவேண்டும் என்று இஸ்லாமியர்கள் சொல்கிறார்கள்... பீஜே போன்றவர்கள் இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் என்று நிகழ்ச்சி நடத்துகின்றார். இப்படிப்பட்ட முஹம்மது ஸ்தாபித்த மார்க்கமா இனிய மார்க்கம்.. அந்தோ பரிதாபம்.


சரி, மேற்கண்ட ஹதீஸுக்கும் கேள்விகளுக்கும் சரியான நேர்மையான பதிலை இஸ்லாமியர்களில் யாராவது பதித்தால், அவைகள் சரியாக இருக்கும் பட்சத்தில் இந்த கட்டுரையை நான் எடுத்துவிடுவேன். (இப்படி நான் சொன்னேன் என்றுச் சொல்லி, பிஜே அவர்கள், இந்த ஹதீஸ் பலவீனமான ஹதீஸ், இது பொய்யான ஹதீஸ் என்றுச் சொன்னால், நான் ஒப்புக்கொள்ளமாட்டேன், ஏனென்றால், பிஜே அவர்கள் சொல்வது போல ஹதீஸ்களை ஒதுக்கினால், கடைசியில் ஒன்றுமே மிஞ்சாது).


Tamil Source:  http://muhammadsunna.blogspot.com/2010/11/blog-post_18.html


November 19, 2010

Answering Apsar: இஸ்லாம் பரவ உமரின் கட்டுரைகள் உதவுகின்றதா! அல்லாஹு அக்பர்!!!`

முன்னுரை: அப்ஸர் என்ற இஸ்லாமிய சகோதரர் ஒரு புதிய தளத்தை ஆரம்பித்துள்ளார். இந்த தளம் பற்றிய என்னுடைய அறிமுக கட்டுரையை இங்கு (http://isakoran.blogspot.com/2010/11/isa-koran-isa-koran.html) படிக்கவும்.

 

அவர் தன்னுடைய தளத்தில் "இஸ்லாத்தை பரப்புவதற்கு உதவும் உமர் அவர்களுக்கு நன்றி!!!" என்ற பெயரில் ஒரு கட்டுரையை வெளியிட்டார். இப்போது அவர் எழுதிய வரிகளுக்கு என்னுடைய பதில்களை இக்கட்டுரையில் நாம் படிக்கலாம்.

 அப்ஸர் அவர்கள் எழுதியது:

இஸ்லாத்தை பரப்புவதற்கு உதவும் உமர் அவர்களுக்கு நன்றி!!!

 

உமர் (புனை பெயர்) அவர்கள் இஸ்லாத்திற்கு எதிராகவுள்ள பல ஆங்கில இணைய தளங்களில் உள்ள கட்டுரைகளை மொழி பெயர்த்து வெளியிடிகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் உமர் அவர்களும் மற்றும் அவரை போன்றோரும் அவர்களே  அறியாமல் இஸ்லாத்தை பரப்ப உதவி வருகின்றனர் என்பதே உண்மை.

 உமரின் பதில்:

 உமர் எழுதும் கட்டுரைகள்அல்லது மொழியாக்கம் செய்து வெளியிடும் கட்டுரைகள் இஸ்லாம் பரவ உதவுமானால்,

 

ஏன் எங்கள் கட்டுரைகளின் தொடுப்புக்களை உங்கள் தளங்களில் பதிக்க பயப்படுகின்றீர்கள்? 

 

எங்கள் கட்டுரைகள் உங்கள் இஸ்லாமை பரப்ப உதவுமானால், "எங்கள் கட்டுரைகளை படிக்கும் படிஉங்கள் இஸ்லாமியர்களை ஏன் நீங்கள் உற்சாகப்படுத்துவதில்லை?" 

 

எங்கள் கட்டுரைகளின் தொடுப்புக்களை கொடுக்க நீங்கள் பயப்படும் பயமே போதும்,எங்கள் கட்டுரைகள் இஸ்லாமுக்கு எவ்வளவு பாதிப்பை உண்டாக்குகின்றன என்றுபுரிந்துக்கொள்வதற்கு.

 

அப்ஸர் அவர்கள் எழுதியது:

 அது மட்டுமல்லாமல் அவர் இஸ்லாமிய வரலாறு அறியாத முஸ்லிம்களை அவரது கட்டுரை மூலம் இஸ்லாம் மற்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வரலாற்று உண்மைகளை அறிய தூண்டுகிறார். அப்படி என்றால் இஸ்லாம் பரவுவதற்கு அவர் உதவி செய்கிறார் என்று தானே ?

 

உமரின் பதில்:

 

"இஸ்லாமிய வரலாறு அறியாத முஸ்லிம்கள்" என்று சரியாகச் சொன்னீர்கள். நீங்கள் சொல்ல கூச்சப்படும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறை உலகிற்கு எங்களுடைய கட்டுரைகள்  காட்டுகின்றது. நீங்கள் உண்மையான ஹதீஸ்கள் என்று நம்பும் சஹீஹ் புகாரி மற்றும் சஹீஹ் முஸ்லிம்  ஹதீஸ்களிலிருந்து நாங்கள் உண்மைகளை வெளிக்கொணர்ந்து மக்களுக்கு ஒரு விழிப்புணர்வை உண்டாக்கிக் கொண்டு இருக்கிறோம்.

 

முஹம்மதுவின் "ஒரு பக்க" வாழ்க்கை வரலாறை மட்டும் மக்களின் முன்னிலையில் பேசும் உங்களைப் போன்ற இஸ்லாமிய அறிஞர்களின் "கயமையை" வெளிக்கொணர்ந்து மக்கள் அறியும் படிச் செய்கின்றோம்.  மட்டுமல்லகுர்‍ஆனையும்ஹதீஸ்களையும் நீங்களே படித்துப்பாருங்கள் என்று சராசரி இஸ்லாமியனுக்கு அறிவுரை கூறுகின்றோம்,ஏன் தெரியுமாஇஸ்லாமின் உண்மை நிலையை அவர்கள் நேரடியாக தெரிந்துக்கொள்ளவேண்டும் என்பதற்காக நாங்களே அறிவுரை கூறுகின்றோம்.

 

எங்கள் கட்டுரைகள் இஸ்லாம் வளர தூண்டுகோளாக இருக்குமானால் அவைகளை உங்கள் தளங்களில் மறுபதிவு செய்துஅவைகளுக்கு நீங்கள் பதில்களை கொடுத்து இன்னும் இஸ்லாமிய நம்பிக்கையை வலிமையுறச் செய்யலாமேசெய்வீர்களா?

 அப்ஸர் அவர்கள் எழுதியது:

 

சரி அவர் இஸ்லாத்திற்கு செய்த உதவிகளை இங்கே பார்போம்:

 

1 . முஸ்லிம்களை இஸ்லாத்தை பரப்ப தூண்டினார்.....

 

என்னை போன்ற சில முஸ்லிம்கள், "எல்லா மதத்தையும் மதிக்கிறேன்" என்ற எண்ணம் கொண்டுஅவர்களாக வந்து கேட்காதவரை மற்ற மதத்தவரிடம் இஸ்லாத்தை பற்றி எடுத்து கூறாமலும், "உனக்கு உன் மார்க்கம்எனக்கு என் மார்க்கம்" என்று அமைதியாக இருந்தவர்களை,இஸ்லாத்தின் மீது அவதூறு பரப்பும் விதமாக இஸ்லாமிய வரலாற்றை திரித்து மற்றும் பாதியை மறைத்து அவருக்கு சாதகமானதை மட்டும் எழுதினார். இல்லை இல்லை யாரோ எழுதியதை மொழி பெயர்த்தார். இதனால் நாங்கள் அவருக்கு பதில் அளிக்க தூண்டப்பட்டோம். எங்களை தூண்டியதன் மூலம் இஸ்லாத்தை பரப்ப அவர் உதவினார் தானே?

 

உமரின் பதில்:

 

"எல்லா மதத்தையும் மதிக்கிறோம்" என்ற எண்ணத்தோடு ஒருவன் இருந்தால்அவன் முஸ்லிம் இல்லை. உங்கள் நபிக்கே வராத எண்ணம் ஏன் உங்களுக்கு வந்தது?

 

 இஸ்லாம் பற்றிய அறியாமையில்  இருப்பவன் "எல்லா மதத்தையும் மதிப்பான்".  எப்போது அவனது உள்ளத்தில் இஸ்லாம் என்ற மதம் புகுந்துவிடுமோ அதன் பிறகு அவன் மனித நிலைமையிலிருந்து விலகிஉண்மை முஸ்லிமாக‌ மாறிவிடுகின்றான்.

 

"இஸ்லாமின் வரலாறை நாங்கள் திருத்திக்கூறுகின்றோம்" என்று குற்றம் சுமத்தும் நீங்கள், ஏன் இஸ்லாமிய முழு வரலாறை நீங்களே மக்களுக்கு விளங்கும் படி விளக்கக்கூடாது?

 

நாங்கள் பயன்படுத்தும் நூல்கள்குர்‍ஆன்ஹதீஸ்களாகிய புகாரிமுஸ்லிம் மற்றும் ஆரம்பகால இஸ்லமிய நூல்கள் ஆகும். இவைகளைத் தானே நீங்களும் பயன்படுத்துகின்றீர்கள். ஆனால் முஹம்மதுவை ஒரு நல்ல மனிதனாக காட்டும் விவரங்களை மட்டுமே நீங்கள் மக்களின் முன் கொண்டு வருகின்றீர்கள். ஆனால்நாங்கள் அவரின் உண்மை முகத்தை வெளிக்காட்டும் விவரங்களை வெளியே கொண்டு வருகின்றோம். ஆகஇஸ்லாமின உண்மை முகத்தை வெளிக்காட்டுவது நாங்கள் தான்.

 

உங்கள் குர்‍ஆனை பயன்படுத்துகின்றோம்,

உங்கள் ஹதீஸ்களை பயன்படுத்துகின்றோம்,

உங்கள் இஸ்லாமிய தஃப்ஸீர்களை (விரிவுரையை) பயன்படுத்துகின்றோம்,

 

இருந்த போதிலும்அவதூறு என்று சொல்கின்றீர்கள்அதற்கு நாங்கள் பொறுப்பல்லஒரு நல்ல நபியாக மனிதனாக முஹம்மது வாழ்ந்து காட்டவில்லைஅதனை மக்களின் மத்தியில் கொண்டு வருகின்றோம். உங்கள் ஹதீஸ்களே அவரை ஒரு நல்ல மனிதராக காட்டாதபோதுநாங்கள் என்ன செய்யமுடியும்? (வேண்டுமானால்ஒன்று செய்யலாம்பீஜே அவர்கள் மறுக்கும் ஹதீஸ் பட்டியலை இன்னும் சிறிது நீட்டிஇன்னும் அனேக ஹதீஸ்களை சேர்த்துக்கொள்ளலாம்இப்படியே சென்றால்கடைசியாக ஹதீஸ் தொகுப்புகளில் எவைகள் மீதமிருக்கும்?).

 // இதனால் நாங்கள் அவருக்கு பதில் அளிக்க தூண்டப்பட்டோம். எங்களை தூண்டியதன் மூலம் இஸ்லாத்தை பரப்ப அவர் உதவினார் தானே?//

 

உங்களை நாங்கள் தூண்டினோம் என்றுச் சொல்கின்றீரகள்... ஆம் இஸ்லாமிய அறிஞர்கள் சொல்வதை சிறிதும் சிந்திக்காமல் தலையாட்டும் இஸ்லாமியர்கள் சிந்திக்கவேண்டும்,அவர்களும் சொந்தமாக படித்து இஸ்லாமை அறிந்துக் கொள்ளவேண்டும் என்பது தான் எங்கள் நோக்கமும் கூட. அதனால்தான் குர்‍ஆனை அரபியில் படித்தால் "ஒரு நயா பைசா" கூட உபயோகமில்லைஎனவே இஸ்லாமியர்களேஉங்கள் வேதத்தைஉங்கள் குர்‍ஆனை தமிழில் படித்து தெரிந்துக்கொள்ளுங்கள் என்றுச் சொல்கின்றோம். நாங்கள் சராசரி இஸ்லாமியர்களை குர்‍ஆனை புரியும் மொழியில் படித்து தெரிந்துக்கொள்ளுங்கள் என்றுச் சொல்லி உற்சாகப்படுத்துவதுபோல‌  உங்கள் இஸ்லாமிய அறிஞர்கள் உற்சாகப்படுத்துகிறார்களா?

 

குர்‍ஆனை தமிழில் படியுங்கள்அரபியில் படித்தால்அல்லாஹ் சொல்வது என்னவென்று உங்களுக்கு எப்படி தெரியவரும் என்று உங்கள் இஸ்லாமியர்கள் கூறுவார்களா?

 

நீங்கள் பதில் அளிக்க தூண்டப்பட்டீர்களா?  எங்கள் கட்டுரைகளுக்கு எத்தனை பதில்களை அளித்துள்ளீர்கள்?  எங்கே பட்டியலிடுங்கள்...? முஹம்மது செய்த கொலைகள் பற்றிய கட்டுரகளுக்கு என்ன பதில்களை கொடுத்துள்ளீர்கள்அவரது காம லீலைகள் பற்றிய கட்டுரைகளுக்கு என்ன பதில்களை அளித்துள்ளீர்கள்குர்‍ஆனின் குளறுபடிகளுக்கு என்ன பதில்களை கொடுத்துள்ளீர்கள்?

 

நேற்று ஒரு தளத்தை ஆரம்பித்துவிட்டுஇன்று நாங்கள் "பதில் கொடுத்துள்ளோம்பதிலடி கொடுத்தோம்" என்றுச் சொல்கிறீர்களே! கடந்த மூன்று ஆண்டுகளாக நூற்றுக்கும் அதிகமான கட்டுரைகளை/பதில்களை நாங்கள் கொடுத்துள்ளோம்நிதானமாக வேலை நடந்துக்கொண்டே இருக்கிறதுஆனால்,  நாங்கள் அமைதியாக இருக்கிறோம்ஆனால் நீங்கள் துள்ளிக்குதிக்கிறீர்கள். கடந்த 2007ம் ஆண்டிலிருந்து எத்தனை இஸ்லாமிய தளங்கள் துள்ளி குதித்தன என்று உங்களுக்குத் தெரியுமாஎத்தனை பேர் துள்ளிகுதித்தார்கள் தெரியுமாஆனால்இப்போது அவர்கள் மௌனமாக இருக்கிறார்கள்,உங்களின் மௌனத்திற்கும் ஒரு நாள் வரும்... காத்திருப்போம்.

 

ஆனால்ஈஸா குர்‍ஆனில் கட்டுரைகள் பதிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது…..

 அப்ஸர் அவர்கள் எழுதியது:

இதனால் தூண்டப்பட்ட நாங்கள் இதற்கு இணையத்தில் ஏதேனும் பதில் இருக்கிறதா என்று தேடினோம். ஆங்கிலத்தில் பல இணையதளங்கள் இதற்கு பதில் அளித்துள்ளன. உமர் அவர்கள் ஒரு உண்மையாளராக இருந்தால் அந்த பதில்களையும் ஆராய்ந்து பதில்களில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டி இருந்தால் நாமும் பாராட்டி இருப்போம். அது சரி இவை அனைத்தும் அவர் ஆராய்ந்து எளிதியது இல்லையேமொழி பெயர்த்து தானே. இதை பற்றி அவருக்கு என்ன தெரியும்.

 

உமரின் பதில்:

 அப்படியானால்தமிழில் உங்களிடம் பதில்கள் இல்லையாஅப்படியானால்இதே கட்டுரையில் மேலே உள்ள பத்தியில் "மொழியாக்கம் தானே உமர் செய்கின்றார்" என்றுச் சொல்கின்றீர்கள்நீங்கள் மொழியாக்கம் கூட செய்யாமல்அப்படியே ஆங்கிலத்தில் பதிக்கிறீரகளே... இது ஒரு முரண்பாடாக தோன்றவில்லை உங்களுக்குஎன்ன அப்ஸர் அவரகளேஒரே பத்தியில் என் மீது சுமத்தும் குற்றத்தை நீங்களே செய்வதாக கூறியிருக்கிறீர்கள்நல்லது இப்படியே தொடர்ந்து எழுதுங்கள்.

 இரண்டாவதாக, "மொழியாக்கம் தானே செய்கின்றார்அவருக்கு என்னத் தெரியும்" என்றுச் சொல்கிறீர்கள்.  என்னுடைய ஈஸா குர்‍ஆன் தளத்தில் பதிக்கப்பட்ட கட்டுரைகள் எத்தனை என்று உங்களுக்குத் தெரியுமாஅவைகளில் எத்தனை ஆன்சரிங் இஸ்லாம் தளத்தின் ஆங்கில மொழியாக்கம் என்று உங்களுக்குத் தெரியுமா?

 

"இது தான் இஸ்லாம்" தளத்தின் நிஜாமுத்தீன் அவர்களுக்கு கொடுத்த பதில்கள், "இஸ்லாம் கல்விதளத்திற்கு கொடுத்த பதில்கள்,

பீஜே அவர்களுக்கு கொடுத்த பதில்கள்

 

மற்றும் உங்களைப்போன்ற அவ்வப்போது வந்து செல்கின்ற குருநில மன்னர்களுக்கு அளிக்கும் பதில்கள் என்று அனேக கட்டுரைகள் உள்ளன.  ஒரு முறை ஈஸா குர்‍ஆன் தளத்திற்குச் சென்று பாருங்கள்.

 

முன்றாவதாக,

நான் குர்‍ஆனை அரபியில் புரியாமல் படிக்கும் அறியாமையுள்ளவன் அல்ல,

தமிழிலும்ஆங்கிலத்திலும் படிக்கின்றேன்,

உங்கள் இஸ்லாமிய விரிவுரைகளை படிக்கின்றேன்,

இஸ்லாமிய அறிஞர்கள் எழுதும் கட்டுரைகளை படிக்கின்றேன்,

இஸ்லாமிய விவாத உரைகளை ஆடியோவாக இருந்தால் அவைகளை கேட்கின்றேன்,

வீடியோ உரைகளையும் பார்த்து கேட்கின்றேன்,

 

ஒரு மறுப்புக்கட்டுரையை எழுதுவதற்கு முன்புஅந்த தலைப்பு பற்றிய‌ இஸ்லாமிய கட்டுரைகளையும் விவாதங்களையும் படித்துத் தான் எழுதுகின்றேன். ஏதோஉமர் வெறும் மொழியாக்கம் மட்டும் தான் செய்கின்றார் என்றுச் சொல்வதினால்எந்த பிரயோஜனமும் இல்லை.

 

 

நான்காவதாக ஒரு விவரத்தை அல்லது உண்மையை நான் சொந்தமாக எழுதினால் என்னஅல்லது யாராவது ஆராய்ந்து எழுதியதை தமிழில் மொழியாக்கம் செய்து  தமிழ் பேசும் மக்களுக்கு கொடுத்தால் என்னஇதனால்என்ன வித்தியாசம் வந்துவிடப்போகிறது?

 

உதாரணத்திற்கு,   முஹம்மதுவிற்கு 10க்கும் அதிகமான மனைவிகள் இருந்தார்கள்மற்றும் பெண் அடிமைகளை திருமணம் செய்துக்கொள்ளாமல் அவர்களிடம் உடலுறவு கொள்ள (கற்பழிக்க) அல்லாஹ் அனுமதி அளிக்கிறார் என்ற விவரத்தை ஆங்கிலத்தில் குர்‍ஆன் ஹதீஸ்களின் ஆதாரங்களோடு எழுதியிருந்தால்அதனை தமிழில் மொழியாக்கம் செய்வதினால்உங்கள் முஹம்மது நல்லவராக மாறிவிடுவாராஅல்லது அல்லாஹ் சொன்னபடி பெண் அடிமைகளை கற்பழிக்கத் தான் இஸ்லாமியர்கள் கைவிட்டுவிடுவார்களா?

 

உங்களுடைய இந்த வெட்டு வார்த்தைகள் எல்லாம் எங்களிடம் பளிக்காதுயாராவது ஒரு இஸ்லாமியர் தன் ஐந்து வயது பையனை கொண்டு வந்து மதரஸாவில் விட்டுஎங்கள் மகனுக்கு இஸ்லாமிய அறிவை புகட்டுங்கள் என்று உங்களிடம் சொல்லுவார்,அப்படிப்படவரிடமும்அந்த ஐந்து வயது பையனிடமும்உங்கள் முஹம்மது பற்றி புகழ்ந்து கூறினால்அவன் "அல்லாஹு அக்பர்" என்றுச் சொல்லுவான்எங்களிடம் பளிக்காதுஇப்போதெல்லாம் அனேகர் இஸ்லாமியர்கள் போடும் தொப்பிக்காக‌ தங்கள் தலையை நீட்டுவதில்லை.    

 

பைபிளை புரியும் மொழியில் படிக்கும் எனக்கு உங்களின் மனோதத்துவ  வரிகள் எல்லாம் வெட்ட வெளிச்சமாக பளிச்சென்று தெரிகின்றதுஆகையால்உங்களுக்கு இதனால் ஒரு உபயோகமும் இல்லை என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

 

கீழ்கண்ட விவரத்தை நீங்கள் கூறியுள்ளீர்கள்:

 //அப்ஸர் அவர்கள் எழுதியது:

ஆங்கிலத்தில் பல இணையதளங்கள் இதற்கு பதில் அளித்துள்ளன. உமர் அவர்கள் ஒரு உண்மையாளராக இருந்தால் அந்த பதில்களையும் ஆராய்ந்து பதில்களில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டி இருந்தால் நாமும் பாராட்டி இருப்போம்.//

 

இதை நீங்கள் சொல்லித் தான் நாங்கள் செய்யவேண்டுதில்லைகடந்த 1995ம் ஆண்டிலிருந்து ஆன்சரிங் இஸ்லாம் தளம்உலகில் உள்ள ஆங்கில இஸ்லாமிய தளங்களை தேடித் தேடி கண்டுபிடித்துநெத்தியடி கொடுத்துக்கொண்டு இருக்கிறது. அதாவதுகார்பரேஷன் அரசாங்க ஆணையின் படிஊரில் திரியும் தெரு நாய்களை எப்படி தேடிக் கண்டுபிடித்துவண்டியில் ஏற்றுகிறார்களோஅதே போலஎந்த இஸ்லாமிய தளமாவது கிறிஸ்தவம் பற்றி எழுதினால்அதற்கு சரியான பதிலை கொடுத்துக்கொண்டு இருக்கிறது.

 

திரு அப்ஸர் அவர்களேஉங்களுக்கு முஹம்மது மீது நம்பிக்கை இருக்குமானால்,

இஸ்லாம் ஒரு நல்ல மார்க்கம் என்ற நம்பிக்கை ஒரு சதவிகிதமாகிலும் இருந்தால்,ஆன்சரிங் இஸ்லாம் தளத்தில் கொடுக்கப்பட்டு இருக்கும் ஆங்கில கேள்விகளுக்கு மறுப்புக்களுக்கு பதில் சொல்லும் படிஉங்கள் இஸ்லாமிய அறிஞர்களுக்கு அறிவுரை கூறுங்கள்.

 

எந்த இஸ்லாமிய ஆங்கில தளத்தில் கேட்கப்பட்ட கேள்வியானாலும் சரிஅதற்கான பதில் நிச்சயமாக ஆன்சரிங் இஸ்லாம் தளத்தில் கிடைக்கும். இந்த விவரத்தில் உங்களுக்கு சந்தேகம் இருந்தால்நீங்களே ஆன்சரிங் இஸ்லாம் தளத்தில் தேடிப்பார்க்கவும்உதாரணத்திற்கு கீழ்கண்ட தொடுப்பில் மறுப்புக்கள் கொடுக்கப்பட்டுள்ளதுஅவைகளை படித்துப்பாருங்கள்எந்த தலைப்பில் பதில் இல்லை அல்லது கேள்வி இல்லை என்று கண்டுபிடித்துச் சொல்லுங்கள்.  நாங்கள் தொடாத தலைப்புகள் இருக்குமானால்அதனை தெரிவித்தால்அதைப்பற்றி ஆராய்ந்து பதில் அளிக்க காத்திருக்கிறோம்.

 Rebuttals to Muslim Polemics against Christianity - http://www.answering-islam.org/Responses/index.htm

 

ஆன்சரிங் இஸ்லாம் மட்டுமல்லநானும் நாய்களை தேடிகண்டுபிடித்துநாய்களின் கழுத்துக்களில் வலைகளை மாட்டி கார்பரேஷன் வண்டியில் ஏற்றுவது போலதமிழில் யாராவது கிறிஸ்தவம்பைபிள் பற்றி எழுதினால்அதற்கு பதில் அளிக்க முயற்சி எடுத்துக்கொண்டு இருக்கிறேன். இதனை கடந்த மூன்று ஆண்டுகளாக (2007ம் ஆண்டிலிருந்து) எங்கள் கட்டுரைகளை படிக்கும் உங்களைப்போன்றவர்களுக்கு தெரிந்து இருக்கும்.

 

எனவேஆங்கில இஸ்லாமிய தளங்களுக்கு ஆன்சரிங் இஸ்லாம் தளம் ஒன்றே போதுமானதுஅதே போலதமிழிலும் பதில்கள் கொடுக்க முயற்சி எடுத்துக்கொண்டு இருக்கிறோம்.  ஆனால்நீங்கள் கோழைகளைப்  போல,  போரில் புறமுதுகுகாட்டி ஓடும் கோழைகளைப்போலஎங்கள் பதில்களின் தொடுப்புக்களையும் கொடுக்க பயப்படுகின்றீர்கள்அந்தோ பரிதாம்இது வெட்கக்கேடுஉங்களின் இந்த செயல்களால் இஸ்லாமிய மானம் கப்பல் ஏறுகிறது. 

 அப்ஸர் அவர்கள் எழுதியது:

எங்களை தூண்டிவிட்டதன் விளைவைஅவருக்கு நாங்கள் கொடுத்த பதில் (அடி) மற்றும் அவர் அவருடைய ப்ளாகுக்கு செய்த மாறுதல்களே உணர்த்தும். அவற்றை கீழே காண்போம்.

 உமரின் பதில்:

 அப்ஸர் அவர்களேஎந்த தளத்தில் ஈஸா குர்‍ஆன் தளத்திற்கு மறுப்புக்கள்அல்லது உமருக்கு மறுப்புக்கள் அல்லது ஆன்சரிங் இஸ்லாம் தளத்திற்கு மறுப்புக்கள் என்று தலைப்பை கொடுத்துதொடர்ச்சியாக எங்கள் கட்டுரைகளை மேற்கோள் காட்டிபதில் (அடி) அளித்துக்கொண்டு இருக்கிறீர்கள்?  உங்களுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம் என்று நம்புகிறேன்.  பிளீஸ் உங்களின் பதில் கொடுக்கப்பட்ட தளங்களின் தொடுப்பை தாருங்களேன்....

 அப்ஸர் அவர்கள் எழுதியது:

1 . இப்போதெல்லாம் அவர் நாங்கள் எழுதும் பின்னூட்டங்களை வெளியிடுவது இல்லை. கடைசியாக நான் எழுதிய பின்னூட்டங்களுக்கு அவர் பதில் அளிக்காமல் வெறுமனே வெளியிட்டுள்ளார். அதற்கு பிறகு 3  அல்லது முறை நான் பின்னூட்டம் எழுதி இருப்பேன். அதை இணையத்தில் வெளியிடவில்லை ஏன்என்னென்றால் வெளியிட்டால் கிறிஸ்தவர்களின் சுயரூபம் வெளியாகிவிடும்.

 

உமரின் பதில்:

 

"இப்போதெல்லாம்" என்றுச் சொல்கிறீர்களேஎப்போது என்று சொல்லமுடியுமா? என்னென்ன பின்னூட்டங்கள் கொடுத்துள்ளீர்கள்?

எந்த கட்டுரைக்கு பின்னூட்டமிட்டீர்கள்?

 

எந்த கட்டுரைக்கு நீங்கள் பின்னூட்டமிட்டீர்கள் என்றுச் சொன்னால்இஸ்லாமின் மானம் கப்பலேறும் என்று பயப்படுகிறீர்களாஅப்ஸர் அவர்களே.

 

அவர் குறிப்பிடும் கட்டுரை:  http://isakoran.blogspot.com/2010/10/sexual-property.html

குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள் (Slave-girls as sexual property in the Quran)

 

முதல் வாக்கியத்தில் சொல்லியதற்கு முரண்பட்டு இரண்டாம் வாக்கியத்தை சொல்லியுள்ளீர்கள்.

 

//1 . இப்போதெல்லாம் அவர் நாங்கள் எழுதும் பின்னூட்டங்களை வெளியிடுவது இல்லை. கடைசியாக நான் எழுதிய பின்னூட்டங்களுக்கு அவர் பதில் அளிக்காமல் வெறுமனே வெளியிட்டுள்ளார்.//

 

முதல் வாக்கியத்தில் "இப்போதெல்லாம் நான் பின்னூட்டங்களை வெளியிடுவதில்லை"என்று சொல்லிவிட்டுஇரண்டாவது வாக்கியத்தில் "பதில் அளிக்காமல் வெளியிட்டு உள்ளார்" என்றுச் சொல்கிறீர்கள்அல்லாஹ்வைப்போல நீங்களும் மிகவும் அதிக குழப்பத்தில் இருக்கிறீர்கள் என்றுத் தெரிகிறது.

  

முடிவாக என்னத்தான் சொல்லவருகிறீர்கள்?  நான் உங்கள் பின்னூட்டங்களை வெளியிடுகின்றேனா அல்லது இல்லையா?

 அந்த மூன்று முறை நான்கு முறை என்ன பின்னூட்டமிட்டீர்கள்உங்க புதிய தளம் பற்றிய தொடுப்பை கொடுத்தீர்கள்அதற்கான நான் நேரம் எடுத்துஉங்கள் தளம் பற்றிய ஒரு கட்டுரையையே பதித்துவிட்டேன்அதாவது ஏதோ ஒரு கட்டுரையில் பின்னூட்டம் இட்ட ஒரு வரிக்கு (உங்கள் தொடுப்பிற்கு) பதிலாகஉங்கள் தளம் பற்றிய ஒரு அறிமுக கட்டுரையை பதித்துள்ளேன்.

 

 உங்கள் கவலையும் அது தானேஎப்படியாவது உங்கள் தளத்தின் தொடுப்பு என் தளத்தில் பின்னூட்டமாக வரவேண்டும் என்று நினைத்தீர்கள்ஆனால்நானோ உங்கள் தளத்தின் தொடுப்பு ஒரு கட்டுரையாகவே வரும் படி ஒரு புதிய கட்டுரையை பதித்தேன். இப்போது சொல்லுங்கள்நான் கோழையா அல்லது எங்கள் தொடுப்பையும்எங்கள் பதிலையும் பதிக்க பயப்படும் இஸ்லாமிய அறிஞர்கள் கோழைகளா?

 

Link:  http://isakoran.blogspot.com/2010/11/isa-koran-isa-koran.html

இன்னொரு புதிய தளம்: "Isa  a Koran"னை அறிமுகப்படுத்தும் "Isa Koran"

 அப்ஸர் அவர்கள் எழுதியது:

2. இப்போதெல்லாம் அவர் கட்டுரையின் பாணியில் மாற்றங்களை காணலாம். முன்பெல்லாம் பக்கம் பக்கமாக எழுதும் ஈசா உமர் அவர்கள் இப்போதெல்லாம் கேள்விகளுடன் நிருத்திகொல்கிறார் ஏன் ஏனெனில் எதையாவது எழுதி வாங்கி கட்டிக்கொள்ள அவர் விரும்பவில்லயோ என்னவோ!!

 

உமரின் பதில்:

 

அப்ஸர் அவர்களே,  நீங்கள் தவறாக புரிந்துக்கொண்டு இருக்கிறீர்கள்நான் பதில் கொடுக்கும் போதுஅல்லது மறுப்பு எழுதும்போதுஅனேக ஆதாரங்களோடுகுர்‍ஆன் பைபிள் வசனங்களோடுஹதீஸ்களோடு எழுதும் போது நீண்ட கட்டுரைகளாக அவைகள் இருக்கும்.  ஆகையால்என் கட்டுரைகளில் எந்த மாற்றத்தையும் நான் செய்யவில்லை.

 

நீங்கள் சொல்லும் "கேள்விகளோடு நிறுத்துக்கொள்கிறார்" என்ற குற்றச்சாட்டிற்கு பதில் மிகவும் சுலபம். இஸ்லாம் பற்றிய விழிப்புணர்வை இஸ்லாமியர்களுக்கு உணர்த்த அனேக வழிகள் உள்ளனமுதலாவதுஇஸ்லாமியர்களின் கேள்விகளுக்கு பதில்களை அளிப்பது (இவைகள் நீண்ட கட்டுரைகளாக இருக்கும்)இரண்டாவது ஒரு விவரத்தைச் சொல்ல சிறிய கட்டுரையை எழுதுவது. 

 

எனவேஒரே ஒரு ஹதீஸ் அல்லது குர்‍ஆன் வசனத்தை மேற்கோள் காட்டிஅந்த ஹதீஸ் பற்றிய சில கேள்விகளை எழுப்பவேண்டும்அந்த கேள்விகளுக்கு பதில்களை இஸ்லாமியர்களே தேடி கண்டுபிடிக்கவேண்டும்அல்லது கொடுக்கப்பட்ட ஹதீஸைக் கொண்டு சிந்தித்து தெரிந்துக்கொள்ளவேண்டும். இதன் மூலமாக சில உண்மைகளை சராசரி இஸ்லாமியர்கள் அறிவார்கள் என்பதால்நான் ஒரு புதிய தளத்தை ஆரம்பித்து,அதற்கு "முஹம்மதுவின் சுன்னா" அதாவது "முஹம்மது சொன்னதும்/செய்ததும்" என்று பெயர் இட்டேன். 

 

Link: http://muhammadsunna.blogspot.com/

Muhammad's Sunna - முஹம்மது சொன்னதும் செய்ததும்

  

இந்த தளத்தில் பதிக்கப்படும் சிறிய கட்டுரைகள் ஆகும்,  வெறும் ஒரு ஹதீஸை கொண்டு இருக்கும்மற்றும் அந்த ஒரு ஹதீஸ் பற்றிய சில கேள்விகளை இஸ்லாமியர்கள் சிந்திக்கும்படி கேட்டு இருப்பேன். எனவேஇந்த புதிய தளத்தில் பதிக்கும் சிறிய கட்டுரைகள் என்னுடைய முதல் தளமான "ஈஸா குர்‍ஆன்" தளத்தில் மறுபதிவு செய்தேன். இதனை படித்துவிட்டுநண்பர் அப்ஸர் அவர் "புதிய விமர்சனத்தை" கொடுத்துள்ளார். அய்யா! அப்ஸர் அவர்களேநீங்களே ஏதோ முடிவு செய்துக்கொண்டு,அதனை வாசகர்கள் மனதில் என்னைப் பற்றிய ஒரு பொது அபிப்பிராயத்தை உண்டாக்க முயற்சி எடுத்துள்ளீர்கள்ஆனால்அது பளிக்காது.

 

அடுத்ததாக‌,

 // ஏனெனில் எதையாவது எழுதி வாங்கி கட்டிக்கொள்ள அவர் விரும்பவில்லயோ என்னவோ!!//

 நான் யாரிடமும் எதையும் வாங்கிக்கட்டிக்கொள்வதில்லைஅப்படி யாராவது பதில் என்று எழுதினால்அதற்கான மறுப்பை கொடுப்பேன். 

 

உதாரணத்திற்கு, "முஹம்மது ஒரு பாவி" என்ற தலைப்பில் மூன்று பாகங்கள் வெளியிட்டேன்ஒரு இஸ்லாமியராவது பதில் அளித்தாராமறுப்பு அளித்தாராஅதாவது முஹம்மது ஒரு பாவி அல்ல அவர் பரிசுத்தர் என்று காது கிழிய பல நூற்றாண்டுகளாக பேசிக்கொண்டு வந்த இஸ்லாமியர்கள் இதற்கு இதுவரை பதில் அளிக்கவில்லை.  எனக்கு தெரிந்தவரையாரும் இக்கட்டுரைகளுக்கு மறுப்பு அளிக்கவில்லைஅளித்து இருந்திருந்தால்எனக்கு உங்களைப்போன்ற அடியார்கள் எனக்கு அனுப்புவார்கள்.

 உங்களால்பதில் அளிக்கவும் முடியாது ஏனென்றால்குர்‍ஆனே முஹம்மதுவை பாவி என்றுச் சொல்லி வசனங்கள் இறக்கியிருக்கும் போது யார் இதை மறுக்கமுடியும்?அல்லாஹ் பொய் சொல்கிறார் என்று யார் சொல்வார்கள்?

 

ஆகநான் மறுப்பு எழுதும் போதுஅவைகளில் மேற்கோள் காட்டப்படும் ஆதாரங்களுக்கு தகுந்த படிநீண்ட கட்டுரைகளாக இருக்கும்ஆனால், "முஹம்மதுவின் சுன்னா" என்ற தளத்தில் சுருக்கமான கட்டுரைகள் ஒரே குர்‍ஆன் அல்லது ஒரே ஹதீஸ் மீது ஆதாரப்பட்டு எழுதியிருக்கும். 

 

அப்ஸர் அவர்கள் எழுதியது:

 

2. இந்த இஸ்லாத்திற்கு எதிரான அவதூறுகளை பெரிய ஆயுதமாக எடுத்துக்கொண்டு கிறிஸ்தவர்கள் இஸ்லாத்தை வீழ்த்திவிடலாம் என்ற நினைப்பில் முஸ்லிம்களிடம் வந்துமுஸ்லிம்கலான நாம் எந்த உழைப்பும் செய்யாமலே அவர்களின் கேள்விக்கு ஏற்க்கதக்க பதில் அளித்தவுடன் உண்மையான இஸ்லாத்தை அறிந்து செல்கின்றனர். அது மட்டுமின்றி இசா உமரின் கயமையையும் புரிந்துகொள்கின்றனர்.

 

கிறிஸ்தவர்களை அவர்களின் கூட்டுக்குள் இருந்து வெளியில் கொண்டுவந்து இஸ்லாத்தை அறிந்து கொள்ள உதவினார் தானே?

 

உமரின் பதில்:

 

இஸ்லாமியர்களின் பன்ச் டயலாக் எல்லாம் கேட்டு கேட்டு சலித்து விட்டதுசரி தெரியாமல் தான் கேட்கிறேன்ஈஸா குர்‍ஆனின் அல்லது ஆன்சரிங் இஸ்லாமின் எத்தனை கட்டுரைகளுக்கு பதில் அளித்து உள்ளீர்கள்ஒரு பட்டியலைத் தரமுடியுமா?

 

அதாவதுஈஸா குர்‍ஆனின் இந்த குறிப்பிட்ட கட்டுரைக்கு( தொடுப்பு கொடுத்து) ,எங்களின் பதில் என்றுச் சொல்லி உங்கள் தளங்களின் தொடுப்புக்களோடு ஒரு பட்டியல் போடமுடியுமா?

 

அப்ஸர் அவர்களேஒன்று சொல்கிறேன் கோபித்துக்கொள்ளமாட்டீர்களே!  பதில் கொடுக்காமல் பதில் கொடுத்துவிட்டோம் என்றுச் சொல்லும் உங்களைப்போன்ற இஸ்லாமியர்கள், "அரசியல் தலைவர்களையும் மிஞ்சிவிட்டீர்கள்".

 

அப்ஸர் அவர்கள் எழுதியது:

 இஸ்லாத்திற்கு எதிராக செய்யப்படும் இது போன்ற பிரச்சாரங்களின் விளைவுகள் இதுவே. இவற்றுக்கு கடந்த பத்து வருடங்களில் நடந்த உலக நிகழ்வுகளே உதாரணம். உதாரணமாகஅமெரிக்காவின் இரட்டை கோபுரம் இடிப்புக்கு பின்னர் உலகமே இஸ்லாத்தை தீவிரவாத மதமாக பார்த்தது,இதன் பின்னரும் இஸ்லாத்தின் உண்மை நிலையை தெரிந்து கொண்ட பல அமெரிக்கர்கள் இஸ்லாத்தை ஏற்றனர்.

 

மேலும் தொடரும் .......

http://isaakoran.blogspot.com/2010/11/blog-post.html

 

உமரின் பதில்:

 

இது இஸ்லாமியர்களின் இன்னொரு பன்ச் டயலாக்.  அமெரிக்காவில் இஸ்லாமை ஏற்பவர்கள் மூன்று வருடத்திற்குள்ளாகவேஇஸ்லாமிய அடிமையிலிருந்து விடுதலையாகிவிடுகின்றார்களாம்அதாவது இஸ்லாமை விட்டு வெளியேறி விடுகின்றார்களாம்.

 

இதை நாங்கள் சொந்தமாகச் சொல்லவில்லைஆராய்ச்சி செய்து "தாவா"வில் ஈடுபடும் உங்களைப் போன்ற இஸ்லாமிய அறிஞர்களே கூறியுள்ளார்கள்.

 

Link: http://answer-islam-videos.blogspot.com/2010/11/3-75.html

வருடங்களுக்குள்ளாகவே 75% புதிய இஸ்லாமியர்கள் ஏன் இஸ்லாமிலிருந்து வெளியேறிவிடுகின்றனர்

 

 

எனவேமுதலில்என் தளத்தில் வெளியிடப்பட்டு இருக்கும் கட்டுரைகளுக்கு பதில் சொல்ல ஆரம்பியுங்கள்,

 

உங்களுக்கு வீரம்ரோஷம்சொரணை  இருக்குமானால்எங்கள் தள தொடுப்புக்களையும் கொடுத்து பதில் அளியுங்கள். அப்படி எங்கள் தள தொடுப்பை கொடுக்காமல் ஏதாவது எழுதினால்என்ன சொல்ல மாட்டுக்கு ஒரு சூடுமனிதனுக்கு ஒரு சொல்திருந்தினால் மனிதன்திருந்தாவிட்டால் மிருகத்தைவிட கீழ்தரமான நிலையில் மனிதன் தரம் தாழ்ந்துவிடுவான்.

 

முடிவுரை: "ஈஸா குர்‍ஆனின்" கட்டுரைகள் இஸ்லாமை எல்லாரும் அறிந்திட உதவுமானால்இந்த வேலையை நான் மகிழ்ச்சியாக செய்வேன்இனி இன்னும் உற்சாகத்தோடு செய்வேன் என்று அப்ஸர் அவர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். உங்களுக்கும் மகிழ்ச்சி தானே!  உங்கள் இஸ்லாமிய அறிஞர்கள் எவ்வளவு தான் கடினமாக உழைத்தாலும்உங்களைப் போன்றவர்கள் இஸ்லாமை ஆராய அல்லது படிக்க அவர்களின் உழைப்பு உதவவில்லை அப்படித் தானேஆனால்நான் எழுதும் சில கட்டுரைகளை படித்தவுடன் இஸ்லாமை இன்னும் அதிகமாக தெரிந்துக்கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் உங்களுக்கு வந்துள்ளதுஅப்படியானால்உங்களைப் போன்று மற்றவர்களுக்கும் அதே போன்ற ஆர்வம் வரஎன்னுடைய கட்டுரைகளை படிக்கும் படி எல்லா இஸ்லாமியர்களுக்கும் அறிவுரை கூறுவீர்களா? 

souce : http://isakoran.blogspot.com/2010/11/answering-apsar.html